ஹெகெட்டோரிடீஸ்
ஹெகெட்டோரிடீஸ் (Hegetorides, பண்டைக் கிரேக்கம்: Ἡγητορίδης ) என்பவர் ஏதென்ஸ் மற்றும் ஸ்பார்டா (கிமு 431-404) இடையே நடந்த பெலோபொன்னேசியன் போரின் போது கிரேக்க தீவான தாசோசின் குடிமகனாக இருந்தார் என, இரண்டாம் நூற்றாண்டின் வரலாற்றாசிரியர் பாலியானஸ் குறிப்பிட்டுள்ளார். [1] சில குறிப்புகள் தாசியன் கிளர்ச்சி எனவும் குறிப்பிடுகின்றன. லெம்ப்ரியரின் செவ்வியல் அகராதியில் இவரைப் பற்றி ஹெகெடோரைடீஸ் தனது நகரம் ஏதெனியப் படைகளால் முற்றுகையிடப்பட்டு அதனால் மக்கள் பட்டிணியால் படும் துண்பத்தைக் கண்டு, ஏதெனியர்களோடு சமாதானாக போகவேண்டும் என்று முதலில் பேசும் எவருக்கும் மரண தண்டனை என்ற சட்டம் அந்த நாட்டில் இருந்தது. இதனால் இவர் தன் கழுத்தில் தூக்குக் கயிற்றை மாட்டிக்கொண்டு அகோராவுக்குள் சென்றார். இவர் தன் சக குடிமக்களிடம் ஏதெனியர்களிடம் சமாதானமாக போகும்படியும் அதை சொன்னதற்காக அவர்கள் விரும்பியபடி தனக்கான தண்டனையை அளிக்குமாறு கூறினார். தாசியர்கள் இவரது உறுதியைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர். மேலும் அவையினர் இவர் கருத்தை ஏற்று சமாதானமாக போக ஒப்புக் கொண்டனர். இவரை மன்னித்தனர். இவ்வாறு இவர் நகரத்தை பட்டினியிலிருந்தும், மரணத்திலிருந்தும் காப்பாற்றினார்.
பெலோபொன்னேசியப் போரின் முக்கிய செவ்வியல் அதிகாரத்தில், துசிடிடீஸ், ஹெஜெடோரைடீசைக் குறித்து குறிப்பிடப்படவில்லை. மேலும் தாசோசின் குடியேற்றமான கேலெப்ச்சின் பின்னணியில் தாசோசை குறித்து ஒருமுறை மட்டுமே குறிப்பிடப்படுவதாகத் தோன்றுகிறது (அவரது பெல்பொன்னேசியப் போரின் புத்தகம் V). கிமு 463 இல் ஏதெனியன் கூட்டணியில் இருந்து தாசோஸ் கிளர்ச்சி செய்தால் ஏதென்சால் தாக்கப்பட்டது. பெலோபொன்னேசியப் போருக்கு முன்னதாக ஹெஜெடோரைடீசின் கதை தோன்றியிருக்கலாம் எனப்படுகிறது.
இதையும் காண்க
தொகு
குறிப்புகள்
தொகு- ↑ Stratagems 2.33
- Lempriere's Dictionary 3rd ed. 1843.