அகோரா என்பது பண்டைய கிரேக்க நகரங்களில் பொது மக்கள் கூடும் இடத்திற்கானப் பெயராகும். கலை, அரசியல், சமயம்,வணிகம், சமூக நிகழ்வுகள், போன்ற பல தரப்பட்ட சேவைகளுக்குப் பொது மக்கள் பயன்படுத்தும் இடமாகப் பல்வேறு காலகட்டங்களில் விளங்கியது[1].

சிதிலமடைந்த ஸ்மைர்னா நகர அகோரா

அமைவிடம்தொகு

நகரங்களின் மையப்பகுதிகளிலும், துறைமுகங்களின் அருகாமைப் பகுதிகளிலும் அகோராக்கள் அமைக்கப்பட்டிருந்தன.

அமைப்புதொகு

[சான்று தேவை]

கிரேக்க கட்டட அமைப்போடு கூடிய பொதுக் கட்டடங்கள், கடைகள், ஆகியவை, நீண்ட தூண் வரிசைகள், நுழைவு மாடங்கள் கொண்டு அகோராக்கள் அமைக்கப்பட்டிருந்தன. புகழ் வாய்ந்தவர்கள், உயர் கௌரவம் பெற்றவர்கள் போன்ற மதிப்புறு மக்களின் கல்லறைகள் கூட அமைக்கப்பட்டிருந்தன.

குறிப்புகள்தொகு

  1. Ring, Salkin, Boda, Trudy, Robert, Sharon (January 1, 1996). International Dictionary of Historic Places: Southern Europe. Routledge. பக். 66. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-884964-02-2. 

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அகோரா&oldid=3352055" இருந்து மீள்விக்கப்பட்டது