எலன்ஸ்பேர்க் வெங்கடேசுவரர் கோயில்

(ஹெலன்ஸ்பேர்க் வெங்கடேஸ்வரர் கோயில் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

எலன்ஸ்பேர்க் வெங்கடேசுவரர் கோயில் (Helensberg Sri Venkateswara Temple) அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் சிட்னி மாநகரத்திலிருந்து சுமார் 55 கிமீ தெற்காக அமைந்துள்ள எலன்ஸ்பெர்க் (Helensburg) என்னும் இடத்தில் அமைந்துள்ளது.

வெங்கடேசுவரர் கோயில், எலன்ஸ்பர்க்
பெயர்
பெயர்:எலன்ஸ்பேர்க் வெங்கடேசுவரர் கோயில்
அமைவிடம்
நாடு:ஆஸ்திரேலியா
மாநிலம்:நியூ சவுத் வேல்ஸ்
அமைவு:எலன்ஸ்பேர்க்
கோயில் தகவல்கள்
மூலவர்:வெங்கடேசுவரர், சிவன்
கட்டிடக்கலையும் பண்பாடும்
கட்டடக்கலை வடிவமைப்பு:திராவிடக் கட்டிடக்கலை
வரலாறு
கட்டப்பட்ட நாள்:சூன் 30, 1985
இணையதளம்:svtsydney.org

வரலாறு தொகு

இக்கோயிலுக்காக சிற்ப சாத்திரம் குறிப்பிடுகின்ற அனைத்து இயல்புகளும் அமையப் பெற்ற ஒரு நிலம் 1979 ஆம் ஆண்டு வாங்கப்பட்டது. அங்கு முதலில் வெங்கடேசுவரர் கோயிலும், வரசித்தி விநாயகருக்கான கருவறையும் அமைக்கப்பட்டது. இதற்கான குடமுழுக்கு 1985 ஆம் ஆண்டு ஜூன் 30 ஆம் நாள் நடைபெற்றது. அருகில் சிவன் கோயில் அமைக்கப்பட்டு அதற்கான மகாகும்பாபிஷேகம் 1994, ஜனவரி 23 இல் நடைபெற்றது. இரு கோயில்களுக்குமான மகா மண்டபம், ராஜகோபுரம் ஆகியன அமைக்கப்பட்டு 2004, பெப்ரவரி 1 இல் அவற்றிற்கான கும்பாபிஷேகம் நடைபெற்றது.

வெங்கடேசுவரர் கோயில் அமைப்பு தொகு

 
வெங்கடேசுவரர் கோயிலின் ராசகோபுரம்

வெங்கடேசுவரர் கோயில் மூலஸ்தானத்தில் வெங்கடேசுவரர் வீற்றிருக்க மகாலட்சுமி வலப்பக்கத்திலும் ஆண்டாள் இடது பக்கத்திலும் கோயில் கொண்டுள்ளனர். அனுமான், ராமர், நரசிம்மர், கருடர், விஸ்வக்சேனர், சுதர்சனர் ஆகியோர் கோயிலில் அவரவர்க்குரிய இடத்தில் அமர்ந்துள்ளனர். வேணுகோபால் ஆழ்வார்கள், தசாவதாரம் சத்தியநாராயணன் ஆகியோரது சிற்பங்கள் பிரகார சுவரை அலங்கரிக்கின்றன.

சிவன் கோயில் அமைப்பு தொகு

சிவன் கோயிலில் கணேசர், சந்திரமௌலீஸ்வரர், திரிபுரசுந்தரி, துர்க்கை அம்மன், தக்சிணாமூர்த்தி, வள்ளி தெய்வானை சமேதரராக சுப்பிரமணியசுவாமி ஆகியோர் கோயில் கொண்டுள்ளனர். இடும்பன், வைரவர், நவக்கிரகங்கள் ஆகியனவும் வாசலுக்கு அருகில் இடம்பெற்றுள்ளனர். பிரகார சுவர்களில் உள்ள சிறு மாடங்களில் விநாயகர், முருகன் ஆகியோரது பல்வேறு மூர்த்தங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

சிறப்புப் பூசைகள் தொகு

இரண்டு கோயில்களிலும் நாள்தோறும் பூசைகள் நடைபெறுகின்றன. ஆண்டுமுழுவதும் உள்ள சகல சிறப்பு நாட்களிலும் சிறப்புப் பூசைகள் நடைபெறுகின்றன. பவித்ர உற்சவமும், கணேஷ விசர்ஜன உற்சவமும் இங்கு நடைபெறும் முக்கியமான விழாக்கள்.

வெளி இணைப்புகள் தொகு