ஹெலிகோலாந்து பைட் சண்டை (1939)

ஹெலிகோலாந்து பைட் சண்டை (Battle of the Heligoland Bight) என்பது இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த ஒரு வான்படை சண்டை. டிசம்பர் 18, 1939ல் நடைபெற்ற இச்சண்டையில் நாசி ஜெர்மனியின் வான்படை லுஃப்ட்வாஃபே. ஜெர்மானியத் துறைமுகங்களின் மீது குண்டு வீச வந்த பிரித்தானிய வான்படை விமானங்களைத் தாக்கி முறியடித்தது. ஹெலிகோலாந்து பைட் என்பது வடகடலின் ஒரு குடா பகுதியாகும்.

ஹெலிகோலாந்து பைட் சண்டை
இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையின் பகுதி

The Heligoland Bight
நாள் டிசம்பர் 18, 1939
இடம் ஹெலிகோலாந்து பைட் (குடா), வட கடல்
ஜெர்மானிய வெற்றி[1][2][3]
பிரிவினர்
ஐக்கிய இராச்சியம் ஐக்கிய இராச்சியம் நாட்சி ஜெர்மனி நாசி ஜெர்மனி
தளபதிகள், தலைவர்கள்
ஐக்கிய இராச்சியம் ரிச்சர்ட் கெல்லட் நாட்சி ஜெர்மனி கார்ல்-ஆகஸ்ட் ஷூமேக்கர்
படைப் பிரிவுகள்
9வது, 37வது, 149வது வான்படை சுகுவாட்ரன்கள்1 1வது 77வது, 26வது யேக்ட்கெஷ்வேடர்கள்1
பலம்
22 வெல்லிங்க்டன் குண்டுவீசிகள் 44 சண்டை விமானங்கள்[4]
இழப்புகள்
12 குண்டுவீசிகள் அழிக்கப்பட்டன
3 சேதமடைந்தன
57 பேர் கொல்லப்பட்டனர்[5]
3 பி. எஃப். 109கள் அழிக்கப்பட்டன[4]
2 Bf 109s பெருத்த சேதமடைந்தன[4]
1 பி. எஃப். 109 லேசான சேதமடைந்தது.[4]
2 பி. எஃப். 110கள் பெருத்த சேதமடைந்தன[4]
7 பி. எஃப். 110கள் லேசான சேதமடைந்தன[4]
2 விமானிகள் கொல்லப்பட்டனர்[4]
2 விமானிகள் காயமடைந்தனர்[4]
1 வான்படைப் பிரிவுகள்

செப்டம்பர் 1939ல் ஜெர்மனி போலந்தைத் தாக்கியதால் இரண்டாம் உலகப்போர் தொடங்கியது. அக்டோபர் 1939- மே 1940, காலகட்டத்தில் ஐரோப்பாவின் மையப் பிரதேசங்களில் போர் சூடுபிடிக்காமல் மந்தமான நிலை இருந்தது. ஆனால் அட்லாண்டிக் பெருங்கடலில் நேச நாட்டு கப்பல் படைக்கும் ஜெர்மானியக் கடற்படைக்கும் அட்லாண்டிக் சண்டை தீவிரமாக நடந்து கொண்டிருந்தது. அச்சண்டையில் ஜெர்மானிய யு-போட்டுகள் (நீர்மூழ்கிகள்) பிரிட்டனுக்கு அமெரிக்காவிலிருந்து தளவாடங்களை ஏற்றிவரும் கப்பல் கூட்டங்களைத் தாக்கிக் கொண்டிருந்தன. ஜெர்மானியக் கடல் மேற்பரப்புப் போர்க்கப்பல்களும் இச்சண்டையில் பங்குபெறக்கூடாதென்பதற்காக, ஜெர்மானியத் துறைமுகங்களில் நிற்கும் போர்க்கப்பல்களைக் குண்டுவீசி அழிக்க பிரித்தானிய குண்டுவீசி தலைமையகம் முடிவு செய்தது. டிசம்பர் 18, 1939ல் மூன்று பிரித்தானிய குண்டுவீசி சுகுவாட்ரன்கள் (மொத்தம் 24 விமானங்கள்) வட கடல் குடா பகுதியான ஹெலிகோலாந்து பைட்டில் உள்ள ஜெர்மானியப் போர்க்கப்பல்களைத் தாக்க அனுப்பப்பட்டன. அவற்றுள் இரண்டு இலக்கை அடையுமுன்னர் எந்திரக் கோளாறு காரணமாக திரும்பிவிட்டன. மீதமிருந்த 22 விமானங்களை எதிர்க்க லுஃப்ட்வாஃபே சுமார் நூறு சண்டை விமானங்களை அனுப்பியது. ஹெலிகோலாந்து பைட் கடற்பகுதியின் வான்வெளியில் இரு வான்படைகளுக்கும் நடந்த சண்டையில் ஜெர்மானியர்கள் வென்றனர். பன்னிரெண்டு பிரித்தானிய குண்டுவீசிகள் சுட்டு வீழ்த்தப்பட்டன. பிரித்தானிய படை கப்பல்களைத் தாக்காமல் தளங்களுக்குத் திரும்பியது.

அளவில் சிறியதாக இருந்தாலும், இரண்டாம் உலகப் போரின் மேற்குப் போர்முனையில் நிகழ்ந்த முதல் குறிப்பிடத்தக்க வான்சண்டை இதுதான். இச்சண்டையின் மூலம் இரு தரப்புகளின் வான் வழித்தாக்குதல் கோட்பாடுகள் மாற்றப்பட்டன. பகல் வெளிச்சத்தில் குண்டு வீசி விமானங்கள் எதிர்தரப்பின் சண்டை விமானங்களிடமிருந்து தப்ப இயலாதென்று அனைவருக்கும் புலனானது. இதனால் பிரித்தானிய வான்படை இரவு நேர தாக்குதல்களில் கவனம் செலுத்த ஆரம்பித்தது. இந்த சண்டையில் லுஃப்ட்வாஃபே விற்கு கிடைத்த வெற்றி ஜெர்மானிய வான்படைத் தளபதிகளை மெத்தனம் கொள்ளச் செய்தது. உண்மையான நிலையை விடக் கூடுதலாக தங்களது பலத்தை எடை போட்ட அவர்கள், பகல் வெளிச்சத்தில் தாக்கக்கூடிய புதியரக சண்டை விமானங்களை உருவாக்கத் தவறினர். இந்தப் பிழையினால் அடுத்து நிகழ்ந்த ரைக்கின் பாதுகாப்பிற்கான வான்போரின் 1943-45 காலகட்டத்தில் ஜெர்மானிய வான்படை பலவீனமான நிலையில் செயல்பட்டது.

படங்கள்

தொகு

அடிக்குறிப்புகள்

தொகு
  1. Caldwell and Muller 2007, p. 42.
  2. Holmes 2010, p. 6.
  3. Weal 1999, p. 8.
  4. 4.0 4.1 4.2 4.3 4.4 4.5 4.6 4.7 Holmes 2010, p. 86.
  5. Holmes 2010, p. 69.

மேற்கோள்கள்

தொகு