ஹொங்கொங் டொலர்

ஹொங்கொங் டொலர் அல்லது ஹாங்காங் டாலர் (Hong Kong dollar) என்பது ஹொங்கொங்கில் புழக்கத்தில் உள்ள நாணயமாகும். சட்ட அதிகாரத்திற்கு அமைய ஹொங்கொங் நாணயத்தின் நாணயக்குறி ($), சுருக்கக்குறி: (HKD) ஆகும். ஹொங்கொங் டொலர் உலகில் அதிக வணிகப் புழக்கத்தில் உள்ள நாணயங்களில் ஒன்பதாவது (9) நிலையில் உள்ளது. [1] ஆங்கிலத்தில் இதன் சுருக்கக் குறியீடாக, அமெரிக்க நாணயத்தின் சுருக்கக்குறியீட்டையே ($) பயன்படுத்தப்படுகின்றது; அதேவேளை மாற்றீடாக ஆங்கில எழுத்துக்கள் "HK" உடன் இணைத்து (HK$) எனவும் பயன்படுத்தப்படுகின்றது. ஒரு ஹொங்கொங் டொலர் என்பது நூறு ஹொங்கொங் சதங்களைக் கொண்டதாகும்.

ஹொங்கொங் டொலர்
Hong Kong Doller
வங்கித்தாள்கள்சதங்கள் (குத்திகள்)
ஐ.எசு.ஓ 4217
குறிHKD (எண்ணியல்: 344)
சிற்றலகு0.01
அலகு
குறியீடு$ or HK$
மதிப்பு
துணை அலகு
 1/10சதம்
வங்கித்தாள்$10, $20, $50, $100, $500, $1,000
உலோக நாணயம்10¢, 20¢, 50¢, $1, $2, $5, $10
மக்கள்தொகையியல்
அதிகாரப்பூர்வ
பயனர்(கள்)
 ஆங்காங்
அதிகாரப்பூர்வமற்ற
பயனர்(கள்)
மக்காவ் மற்றும் சீனா
வெளியீடு
பண்முறை ஆணையம்ஹொங்கொங் பண்முறை ஆணையம்
 இணையதளம்www.info.gov.hk/hkma
அச்சடிப்பவர்ஹொங்கொங் நாணயம் அச்சிடுத்தாபனம்
 இணையதளம்www.hknpl.com.hk
மதிப்பீடு
பணவீக்கம்1.9%(ஹொங்கொங்கில் மட்டும்)
 ஆதாரம்[1], 2008.
உடன் இணைக்கப்பட்டதுஅமெரிக்க டொலர்கள் = HK$7.75–7.85
மூலம் இணைக்கப்பட்டதுHK$ = 1.03

அமெரிக்க டொலர் ஒன்றிற்கான ஹொங்கொங் டொலரின் பெறுமதி HK$ 7.80 ஆகும்.

மேற்கோள்கள்

தொகு
  1. Triennial Central Bank Survey (April 2007), Bank for International Settlements.

வெளியிணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஹொங்கொங்_டொலர்&oldid=3386054" இலிருந்து மீள்விக்கப்பட்டது