ஓமி பாபா

(ஹோமி(ஓமி) பாபா இலிருந்து வழிமாற்றப்பட்டது)

ஓமி யெகாங்கிர் பாபா (Homi Jehangir Bhabha, இந்தி: होमी भाभा, அக்டோபர் 30, 1909சனவரி 24, 1966), பார்சி சமூகத் இந்திய அணு ஆற்றல் திட்டத்தில் முக்கிய பங்களித்த ஒரு அணுக்கரு இயற்பியலாளர். இவர் இந்திய அணுக்கருவியலின் தந்தை என்றும் அழைக்கப்பட்டார்.

ஓமி யெகாங்கிர் பாபா
ஓமி யெகாங்கிர் பாபா (1909–1966)
பிறப்பு(1909-10-30)30 அக்டோபர் 1909
மும்பை, இந்தியா
இறப்பு24 சனவரி 1966(1966-01-24) (அகவை 56)
மோண்ட் பிளாங்க், பிரான்சு
வாழிடம்இந்தியா
தேசியம்இந்தியர்
துறைஅணுக்கரு இயற்பியலாளர்
பணியிடங்கள்கேவண்டிசு ஆய்வகம்
டாட்டா அடிப்படை ஆராய்ச்சி கழகம்
இந்திய அணு ஆற்றல் ஆணையம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிச் பல்கலைக்கழகம்
அறியப்படுவதுபாபா சிதறல், அண்டக்கதிர் ஆராய்ச்சி

பிறப்பு , ஆரம்ப வாழ்க்கை

தொகு

1909 அக்டோபர் 30 அன்று மும்பையைச் சேர்ந்த வசதியான பார்சி குடும்பத்தில் பிறந்தார். [1]சிறு வயதிலேயே அவர் வீட்டு நூலகத்திருந்த அனைத்து அறிவியல் புத்தகங்களையும் படித்து முடித்தார். பாபாவின் தந்தை அவரை ஒரு பொறியாளராக ஆக்க வேண்டும் என்று முனைந்து அவரை இங்கிலாந்திற்கு அனுப்பினார். தந்தையின் விருப்பத்திற்கு இணங்க பொறியியல் படிப்பில் சேர 1927-ல் கேம்பிரிட்ஜ் புறப்பட்டார்.1930-ல் பாபா எந்திரவியல் படிப்பில் முதல் வகுப்பில் தேறியதையொட்டி, கோட்பாட்டு இயற்பியல் துறையில் ஆராய்ச்சிப் பிரிவு மாணவராகச் சேர்ந்தார்.[2] அவர் என்ரிகோ ஃபெருமி, வூல்வுகாங் பவுலி ஆகிய தலைசிறந்த இயற்பியலாளர்களுடன் பணியாற்றினார்.

தொழில்முறை வாழ்க்கை

தொகு

1933-ல் “காமா கதிர்களை உட்கிரகிப்பதில் எலெக்ட்ரான் பொழிவுகளின் பங்கு” பற்றி அவர் சமர்ப்பித்த அறிவியல் கட்டுரைக்கு ஐசக் நியூட்டன் படிப்புதவி கிடைத்தது. 1934-ல் டாக்டர் பட்டம் பெற்றார்.[2] 1937ஆம் ஆண்டு ஓமியும் ஹைட்லர் என்ற செருமானிய இயற்பியலாளரும் இணைந்து செய்த அண்டக்கதிர்-பற்றிய ஆராய்ச்சி அவர்களுக்கு உலகப்புகழைத் தந்தது.அத்தோடு நில்லாமல், மேலும் செய்த ஆய்வுகளால் மீசான் எனப்படும் அடிப்படைத் துகள் ஒன்று அண்டக்கதிர்களில் இருந்ததைக் கண்டறிந்தார். ஐன்ஸ்டைனின் சார்பியல் தத்துவத்திற்கான ஆய்வுச்சான்றையும் மீசானின் இயக்கத்தை ஆய்வு செய்ததன் மூலம் காட்டினார். இந்த மீசான் ஆய்வுச்சான்று மிகவும் புகழ் வாய்ந்தது.

இறப்பு

தொகு

1966ஆம் ஆண்டு சனவரி 24 அன்று ஒரு சர்வதேச மாநாட்டில் கலந்து கொள்வதற்காகச் சென்று கொண்டிருந்தபோது அவர் பயணித்த விமானம் விழுந்து நொறுங்கியதில் பாபா மரணமடைந்தார். [2]

மேற்கோள்கள்

தொகு
  1. "இந்திய அணுக்கருவியலின் தந்தை". தினமணி. https://www.dinamani.com/weekly-supplements/ilaignarmani/2015/dec/09/%E0%AE%87%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%85%E0%AE%A3%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D-%E0%AE%95%E0%AE%B0%E0%AF%81%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%AF-%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%A4%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%88-1237038.html. பார்த்த நாள்: 28 November 2021. 
  2. 2.0 2.1 2.2 "ஹோமி ஜஹாங்கிர் பாபா". தீக்கதிர் தமிழ் நாளிதழ். 24 நவம்பர் 2014. Archived from the original on 2016-03-06. பார்க்கப்பட்ட நாள் 24 நவம்பர் 2014.

நுற்பட்டியல்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஓமி_பாபா&oldid=4050358" இலிருந்து மீள்விக்கப்பட்டது