1,2,3,4-டெட்ராபீனைல்நாப்தலீன்
1,2,3,4-டெட்ராபீனைல்நாப்தலீன் (1,2,3,4-Tetraphenylnaphthalene) என்பது C34H24 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இச்சேர்மம் ஒரு பல்வளைய அரோமாட்டிக் ஐதரோகார்பன் ஆகும். பொதுவாக இதை பட்டப்படிப்பு மாணவர்களுக்கான கற்பித்தல் ஆய்வுக்கூடத்தில் டையீல்சு ஆல்டர் வினையை அறிமுகப்படுத்த தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் டையீனுடன் உடனடியாக வினைபுரியும் பொருளாக பென்சைனும் (தளத்திலேயே தயாரிக்கப்படும்) டையீனாகச் செயற்படும் டெட்ராபீனைல்சைக்ளோபென்டாடையீனோனும் வினைபுரிகின்றன[2]. இரண்டு வகையான படிக வடிவங்களில் இச்சேர்மம் காணப்படுவதால் 1,2,3,4-டெட்ராபீனைல்நாப்தலீனுக்கு இரண்டு வேறுபட்ட உருகுநிலைகள் உள்ளன.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
ஐயூபிஏசி பெயர்
1,2,3,4-டெட்ரா(பீனைல்)நாப்தலீன்
| |||
இனங்காட்டிகள் | |||
751-38-2 | |||
ChemSpider | 62982 | ||
InChI
| |||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 69783 | ||
| |||
பண்புகள் | |||
C34H24 | |||
வாய்ப்பாட்டு எடை | 432.55 கி/மோல் | ||
உருகுநிலை | 199 முதல் 201 °C (390 முதல் 394 °F; 472 முதல் 474 K) | ||
தீங்குகள் | |||
R-சொற்றொடர்கள் | R36/37/38 | ||
S-சொற்றொடர்கள் | S26 S36 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
மேற்கோள்கள்
தொகு- ↑ 1,2,3,4-Tetraphenylnaphthalene at Sigma-Aldrich
- ↑ Organic Syntheses, Coll. Vol. 5, p.1037 (1973); Vol. 46, p.107 (1966). Link