1,3-இரு தையீட்டேன்

வேதிச் சேர்மம்

1,3-இரு தையீட்டேன் (1,3-Dithietane) என்பது C2H4S2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு பல்லினவளைய கரிமச் சேர்மமாகும். நிறமற்றும் படிகவடிவிலும் காணப்படும் இச்சேர்மம் விரும்பத்தகாத சுவை கொண்ட திண்மமாக அறியப்படுகிறது. பிசு(குளோரோமெத்தில்)சல்பாக்சைடுடன் சோடியம் சல்பைடை வினைபுரியச் செய்து 1,3-இருதையீட்டேன் 1- ஆக்சைடு முதலில் தயாரிக்கப்படுகிறது. தொடர்ந்து இதை டெட்ரா ஐதரோபியூரான்-போரேன் ஒடுக்க வினைக்கு உட்படுத்தி முதன் முதலில் 1976 ஆம் ஆண்டு 1,3-இருதையீட்டேன் தயாரிக்கப்பட்டது. [1][2]

1,3-இரு தையீட்டேன்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-இரு தையீட்டேன்
முறையான ஐயூபிஏசி பெயர்
1,3-இரு தையாவளையபியூட்டேன்
இனங்காட்டிகள்
287-53-6 N
ChemSpider 119906 Y
InChI
  • InChI=1S/C2H4S2/c1-3-2-4-1/h1-2H2 Y
    Key: ITXACGPMGJCSKF-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C2H4S2/c1-3-2-4-1/h1-2H2
    Key: ITXACGPMGJCSKF-UHFFFAOYAY
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 136129
SMILES
  • C1SCS1
  • S1CSC1
பண்புகள்
C2H4S2
வாய்ப்பாட்டு எடை 92.18 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 N verify (இதுY/N?)
Infobox references
1,3-இருதையீட்டேன் தொகுப்புமுறை தயாரிப்பு
1,3-இருதையீட்டேன் தொகுப்புமுறை தயாரிப்பு

செபோடிடன் என்ற எதிர் உயிரியும் போசுதையீட்டேன் என்ற களைக்கொல்லியும் 1,3-இருதையீட்டேன் வேதி வினைக்குழுவைக் கொண்ட சேர்மங்களுக்கு எடுத்துக்காட்டுகளாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Block, E; Corey, ER; Penn, RE; Renken, TL; Sherwin, PF (1976). "1,3-Dithietane". J. Am. Chem. Soc. 98 (18): 5715–5717. doi:10.1021/ja00434a061. 
  2. Block, E; Corey, ER; Penn, RE; Renken, TL; Sherwin, PF; Bock, H; Hirabayashi, T; Mohmand, S et al. (1982). "Synthesis and Thermal Decomposition of 1,3-Dithietane and its S-Oxides". J. Am. Chem. Soc. 104 (11): 3119–3130. doi:10.1021/ja00375a030. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=1,3-இரு_தையீட்டேன்&oldid=3104966" இலிருந்து மீள்விக்கப்பட்டது