1,3-ஈராக்சிடேன்
1,3-ஈராக்சிடேன் (1,3-Dioxetane) என்பது C2O2H4 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் அடையாளப்படுத்தப்படும் ஒரு பல்லினவளைய கரிமச் சேர்மமாகும். ஆக்சிசன் அணுவும் கார்பன் அணுவும் மாறி மாறி இணைந்திருக்கும் நான்கு உறுப்பு வளையம் இச்சேர்மத்தின் முதுகெலும்பாகும். 1.3-ஈராக்சாவளையபியூட்டேன் என்ற பெயராலும் இச்சேர்மம் அழைக்கப்படுகிறது. பார்மால்டிகைடின் இருபடிச் சேர்மம் என்ற நோக்கிலும் இது பார்க்கப்படுகிறது.
| |||
பெயர்கள் | |||
---|---|---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
1,3-ஈராக்சிடேன் | |||
முறையான ஐயூபிஏசி பெயர்
1,3-ஈராக்சாவளையபியூட்டேன் | |||
இனங்காட்டிகள் | |||
287-50-3 | |||
ChemSpider | 126850 | ||
யேமல் -3D படிமங்கள் | Image Image | ||
பப்கெம் | 143777 | ||
| |||
பண்புகள் | |||
C2H4O2 | |||
வாய்ப்பாட்டு எடை | 60.05 g·mol−1 | ||
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |||
1,3-ஈராக்சிடேன் வழிப்பெறுதிகள் புத்தகங்களில் அரிதாக ஓர் இடைநிலையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இரண்டு கார்பனைல் சேர்மங்களை [2+2] வளையக்கூட்டு வினைகளில் வினைபுரியச் செய்து வழக்கமாக இவை தயாரிக்கப்படுகின்றன. தீவிரமாக ஆராயப்பட்ட 1,2-மாற்றியன்களைக் காட்டிலும் இவை அதிக நிலைப்புத்தன்மை கொண்டவையாக இருக்குமென்று மூலக்கூற்று வட்டணை கோட்பாட்டு கணக்கீடுகள் தெரிவிக்கின்றன. [1]
மேற்கோள்கள்
தொகு- ↑ Cordier, C.; Leach, S.; Nelson, A. (2014). Science of Synthesis: Houben-Weyl Methods of Molecular Transformations Vol. 29: Acetals: Hal/X and O/O, S, Se, Te. Georg Thieme Verlag. p. 407. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783131720412.