10 ஜன்பத் என்பது புது தில்லி ஜன்பத்தில் உள்ள ஒரு வீடு ஆகும். இது இந்திய தேசிய காங்கிரசு கட்சியின் முக்கிய தலைவரான சோனியா காந்தியின் உத்தியோகபூர்வ இல்லமாகும். [1] [2] இந்திய தேசிய காங்கிரசின் தேசிய தலைமையகம் 24, அக்பர் சாலையில் அதன் பின்னால் உள்ளது. [3] இந்த இல்லமானது இந்தியாவின் இரண்டாவது பிரதமர், லால் பகதூர் சாஸ்திரி வசிப்பிடமாக இருந்தது (1964-1966). அவரது உடல் 11. சனவரி 1966 அன்று இங்கு பொது மக்கள் பார்வைக்காக வைக்கபட்டு இருந்தது.[4] இன்று அவரது வாழ்க்கை வரலாற்றுப் அருங்காட்சியகம், "லால் பகதூர் சாஸ்திரி நினைவுவகம் " போன்றவை 1- மோதிலால் நேரு பேலஸ் (முன்பு 10 ஜனபத்) இந்த வளாகத்துக்கு அருகில் உள்ளது. [5] [6]

2009 ஆம் ஆண்டில் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஹிலாரி கிளிண்டனை 10 ஜன்பாத் இல்லத்தில் சோனியா காந்தி வரவேற்றார்.

வரலாறு தொகு

1960 களில் ஜவஹர்லால் நேருவுக்குப் பின் வந்த பிரதமர் லால் பகதூர் சாஸ்திரியின் வீடாக இந்த வீடு இருந்தது. இந்த வளாகத்தை ஒட்டிய, ரவுண்டானாவை எதிர்கொண்டு 1, மோதிலால் நேரு பேலசில் லால் பகதூர் சாஸ்திரி நினைவு மையம் உள்ளது . [7]

2004 முதல் 2014 வரை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில், "10 ஜனபத்" என்பது சோனியா காந்தியை சங்கேதமாக குறிப்பிடும் பெயராக மாறியிருந்தது.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=10_ஜன்பத்&oldid=3258990" இலிருந்து மீள்விக்கப்பட்டது