1919 வெரோனா காப்ரோனி கா.48 விபத்து
1919 வெரோனா காப்ரோனி கா.48 விபத்து (1919 Verona Caproni Ca.48 crash) 1919, ஆகத்து 2 ஆம் நாளன்று, ஒரு காப்ரோனி கா.48 வகை வானூர்தி இத்தாலியில் உள்ள வெரோனா என்ற இடத்தில் விழுந்து நொறுங்கியது. இந்த வானூர்தியில் பயணித்த அனைவரும் இவ்விபத்தில் இறந்தனர். இறந்தவர்களின் எண்ணிக்கை 14[1] அல்லது 15[2] அல்லது 17[3] ஆக இருக்கலாம் என்று பல்வேறுபட்ட மூலங்களிலிருந்து அறியமுடிகிறது. இது இத்தாலியின் முதல் வணிக வானூர்திப் போக்குவரத்துப் பேரழிவாக அமைந்ததுடன்; தொடக்கக்காலத்தில் ஏற்பட்ட வளியிலும் கனமான வானூர்திப் பேரழிவுகளில் ஒன்றாகும்.[4]
விபத்து சுருக்கம் | |
---|---|
நாள் | ஆகத்து 2, 1919 |
சுருக்கம் | கட்டுமானத் தவறுகையாக இருக்கலாம். |
இடம் | வெரோனா, இத்தாலி 45°23′47″N 10°53′17″E / 45.396389°N 10.888056°E |
பயணிகள் | 12,[1] 13, அல்லது 15 (மூலங்கள் வேறுபடுகின்றன) |
ஊழியர் | 2[1] |
காயமுற்றோர் | 0 |
உயிரிழப்புகள் | பயணித்த அனைவரும் (14,[1] 15,[2] அல்லது 17;[3] மூலங்கள் வேறுபடுகின்றன) |
தப்பியவர்கள் | 0 |
வானூர்தி வகை | காப்ரோனி கா.48 |
இயக்கம் | காப்ரோனி |
பறப்பு புறப்பாடு | வெனிசு, இத்தாலி |
சேருமிடம் | Taliedo, மிலன், இத்தாலி |
விமான வரலாறு
தொகுகாப்ரோனி கா.48 (Caproni Ca.48) வகை வானூர்தியை காப்ரோனி என்ற நிறுவனம்,சொந்தமாக இயக்கிவந்தது. சம்பவத்தன்று 1919 ஆகத்து 2ஆம் திகதி சனிக்கிழமை,உள்ளூர் நேரப்படி காலை 07:30 மணியளவில் இத்தாலியின் தலிடோ (Taliedo) மாவட்டத்தில் உள்ள மிலன் நகரிலிந்து, அந்நிறுவனத்துக்கு சொந்தமான விமான தளத்திலிருந்து வெனிசு நோக்கி புறப்பட்டது. இவ்வானூர்தியை இத்தாலிய 2 ராணுவ விமானிகள் இயக்கினார்கள், அன்று வெனிசு உள்ளூர் நேரப்படி காலை 09:22 க்கு முதல் பயணமாக வெனிசு விமான தளத்தில் வானூர்தி நன்றாக தரையிறக்கப்பட்டது. அன்று பகல் முழுவதும்,அங்கேயே நிறுத்திவைக்கப்பட்டிருந்த காப்ரோனி கா.48 வானூர்தி அன்று மாலை 05:00 மணியளவில் திரும்பவும் தலிடோ நோக்கி புறப்பட்டது, சிறிது நேரத்தில் வானூர்தி வெரோனா (Verona) விமான தளத்திற்கு மேல் 3000 அடி(910 மீட்டர்) உயரத்தில் கடந்து, பறந்து சென்றுகொண்டிருந்தபோது கட்டமைப்பு தோல்வியின் காரணமாக இறக்கைகள் படபடக்க வானூர்தி செயலிழந்த, அதேநேரம் விமான குழுவினால் எச்சரிக்கை செய்தியளித்தனர், யாவரும் பதட்டமடைந்து வானூர்தி விபத்தாகும் முன்பே குதித்து பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வானூர்தி விபத்தை பல மக்கள் நேரில் பார்த்ததாக மூலத்தகவல்[1] உள்ளது.[5]
மேற்கோள்கள்
தொகு- ↑ இங்கு மேலே தாவவும்: 1.0 1.1 1.2 1.3 1.4 Flight, August 7, 1919, p. 1053.
- ↑ இங்கு மேலே தாவவும்: 2.0 2.1 "Venice Airport Lido: On the Wings of the Sparrow". Archived from the original on 2017-06-12. பார்க்கப்பட்ட நாள் 2015-08-07.
- ↑ இங்கு மேலே தாவவும்: 3.0 3.1 Guttman, p. 55.
- ↑ "Accident description". aviation-safety.net (ஆங்கிலம்) 1996-2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.
- ↑ "1919 Verona Caproni Ca.48 crash". haltenraum.com (ஆங்கிலம்) Februar 26, 2016. பார்க்கப்பட்ட நாள் 2016-10-23.