1929 இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 விபத்து

இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 (Imperial Airways Handley Page W.10; பதிவு:ஜி-இபிஎம்டி [G-EBMT]) எனப்படும் வானூர்தி, 1929 ஆம் வருடம், சூன் 17-ம் திகதி,[1] ஆங்கிலக் கால்வாய் நிலக்கூம்பு பகுதியில் இயந்திர செயலிழப்பு காரணமாக விபத்துக்குள்ளானதில் 7 பேர் கொல்லப்பட்டனர். இந்த வானூர்தி சம்பவத்தின்போது சர்வதேச திட்டமிடல்படி, ஐக்கிய இராச்சியம் கிராய்டன் விமான தளத்திலிருந்து, சுவிச்சர்லாந்து சூரிச் விமான தளம் நோக்கி பரந்ததாக அறியப்படுகிறது. இவ்விபத்தின்போது, 2 சிப்பந்திகளுடன் 11 பயணிகள் பயணித்ததாகவும், அதில் 7 பேர்கள் கொல்லப்பட்டு எஞ்சிய 6 பேர்கள் காயங்களோடு உயிர் தப்பியதாக மூலதகவல் உள்ளது.[2]

1929 இம்பீரியல் எயார்வேசு டபிள்யூ 10 விபத்து
A Handley Page W.8, விபத்தானது இதுபோன்ற வானூர்தி
விபத்து சுருக்கம்
நாள்1929 சூன் 17
சுருக்கம்இயந்திரம் செயலிழப்பு
இடம்ஆங்கிலக் கால்வாய், நிலக்கூம்பு பகுதி
50°45′00″N 1°07′0″E / 50.75000°N 1.11667°E / 50.75000; 1.11667
பயணிகள்11
ஊழியர்2
காயமுற்றோர்6
உயிரிழப்புகள்7
தப்பியவர்கள்6
வானூர்தி வகைHandley Page W.10
வானூர்தி பெயர்ஒட்டாவா பெருநகரம்(City of Ottawa)
இயக்கம்இம்பீரியல் எயார்வேய்ஸ்
வானூர்தி பதிவுஜி-இபிஎம்டி
பறப்பு புறப்பாடுகிராய்டன் விமான தளம், ஐக்கிய இராச்சியம்
1வது நிறுத்தம்லே பவுர்கேட், பாரிசு, பிரான்சு
2வது நிறுத்தம்பாஸ்லே விமான தளம் (Basle Airport), சுவிச்சர்லாந்து
சேருமிடம்சூரிச் விமான நிலையம், சுவிச்சர்லாந்து

வானூர்தி விவரம்

தொகு

விபத்துக்குள்ளான "ஒட்டோவா பெருநகர்" (City of Ottawa) என்ற பெயரிடப்பட்ட இந்த வானூர்தி, ஹான்ட்லே பேஜ் டபிள்யூ 10 (Handley Page W.10) வகையைச் சேர்ந்ததாகும். 1925 ஆம் ஆண்டு திசம்பர் 25 இல் இம்பீரியல் எயார்வேசு நிறுவனம் வெளியிட்டு இயக்கிவந்த இவ் வானூர்தி, ஜி-இபிஎம்டி (G-EBMT) என்று பதியப் பெற்றது.[3]

பாதிக்கப்பட்டவர்கள்

தொகு

இறப்புக்கள் தேசியம் -[4]

தேசியம் குழுவினர் பயணிகள் பலியானோர் காயமுற்றோர்
  ஆங்கிலேர் 2 6 3 5
  அமெரிக்கர் 2 1 1
  அவுஸ்திரேலியர் 1 1
  கனடியர் 1 1
  பிரான்சியர் 1 1
மொத்தம் 2 11 7 6

உசாத்துணை

தொகு
  1. "Accident description Aviation Safety Network". Archived from the original on 2015-10-19. பார்க்கப்பட்ட நாள் 2015-12-01.
  2. "ASN Aviation Safety Database-Last updated: 27 November 2015". Archived from the original on 18 டிசம்பர் 2015. பார்க்கப்பட்ட நாள் 4 டிசம்பர் 2015. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  3. AIRWAYS-ACCIDENTS AND INCIDENTS LIST
  4. Plan Crach Info-Untited Dodument

உப இணைப்பு

தொகு