1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி

(1971 ஜேவிபி புரட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

1971 மக்கள் விடுதலை முன்னணி கிளர்ச்சி (1971 Janatha Vimukthi Peramuna Insurrection), அல்லது 1971 கிளர்ச்சி (1971 Revolt) என்பது கம்யூனிச மக்கள் விடுதலை முன்னணி (மவிமு) கிளர்ச்சியாளர்களால் சிறிமாவோ பண்டாரநாயக்கா தலைமையிலான இலங்கை அரசிற்கு எதிராக நடத்தப்பட்டுத் தோல்வியில் முடிந்த முதலாவது ஆயுதப் புரட்சியாகும். இக்கிளர்ச்சி 1971 ஏப்ரல் 5 இல் ஆரம்பித்து 1971 சூன் வரை நீடித்தது. புரட்சியாளர்கள் சில நகரங்களையும் கிராமப் பிரதேசங்களையும் கைப்பற்றி சில வாரங்களுக்கு ஆயுதப் படையினர் மீளக் கைப்பற்றும் வரை கட்டுப்பாட்டில் வைத்திருக்க முடிந்தது.[1]

1971 மவிமு புரட்சி
1971 JVP Insurrection
இடம் இலங்கை
இலங்கை அரசு வெற்றி
  • புரட்சிப்படை சரணடைந்தது
  • இலங்கை அரசு முழுநாட்டையும் கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்தது
நிலப்பகுதி
மாற்றங்கள்
மவிமு சில நகரங்களையும் கிராமப் பிரதேசங்களையும் சில வாரங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தது
பிரிவினர்
இலங்கை இலங்கை Hammer and Sickle Red Star with Glow.png ஜேவிபி
தளபதிகள், தலைவர்கள்
இலங்கை சிறிமாவோ பண்டாரநாயக்கா
இலங்கை சேபால ஆட்டிகல
Hammer and Sickle Red Star with Glow.png ரோகண விஜயவீர
இழப்புகள்
1,200 (அதிகாரபூர்வம்), 4-5,000 (அதிகாரபூர்வமற்ற)[1]

மேற்கோள்கள்தொகு

  1. 1.0 1.1 "தி ஐலண்டு". மூல முகவரியிலிருந்து 2014-12-13 அன்று பரணிடப்பட்டது. பார்த்த நாள் 12 டிசம்பர் 2014.