இலங்கைத் தமிழர் இனப்படுகொலைகள், 1977
1977 தமிழர் இனப்படுகொலைகள் அல்லது 1977 தமிழருக்கு எதிரான கலவரம் (1977 anti-Tamil pogrom in Sri Lanka)[1][2][3] என்பது இலங்கையில் 1977 ம் ஆண்டு நிகழ்த்தப்பட்ட இனப்படுகொலைகள் ஆகும். 1977 நாடாளுமன்றத் தேர்தலில் இலங்கைத் தமிழ்த் தேசியவாதக் கட்சியான தமிழர் விடுதலைக் கூட்டணி தம்ழிப் பகுதிகளில் தனிநாடு கோரிக்கையை முன்வைத்து பெரு வெற்றி பெற்றதை அடுத்து, தமிழ்ப் பகுதிகளுக்கு வெளியே வாழும் இலங்கைத் தமிழருக்கு எதிராக இந்த வன்முறைகள் இடம்பெற்றன. அனுராதபுரம், கொழும்பு உட்பட பல பகுதிகளிலும் தமிழர்கள் தாக்கப்பட்டனர். இதில் 300 வரையான தமிழர்கள் கொல்லப்பட்டதாக அரச விசாரணை தெரிவித்தது. ஆனாலும் இத்தொகை பல மடங்கு அதிகமாக இருக்கலாம் என்று அரச சார்பற்ற நிறுவனங்கள் கூறுகின்றன.[4] ஆயிரக்கணக்கானோர் அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றப்பட்டனர். அன்றைய ஆட்சியில் இருந்த ஜே. ஆர். ஜெயவர்தனா தலைமையிலான இலங்கை அரசின் ஆதரவோடு இந்தக் கலவரங்கள் நிகழ்த்தப்பட்டன.
1977 இல் இலங்கையில் தமிழருக்கு எதிரான கலவரம் | |
---|---|
இலங்கையின் அமைவிடம் | |
இடம் | இலங்கை |
நாள் | ஆகத்து 12 முதல் 20, 1977 (+6 கிஇநே) |
தாக்குதலுக்கு உள்ளானோர் | இலங்கைத் தமிழர்களும், சில சிங்கள பொதுமக்கள் |
தாக்குதல் வகை | தலை கொய்தல், எரிப்பு, கத்திக்குத்து, துப்பாக்கிச்சூடு |
ஆயுதம் | கத்திகள், பொல்லுகள், தீ, துப்பாக்கிகள் |
இறப்பு(கள்) | 300 |
காயமடைந்தோர் | 1000+ |
பின்னணி
தொகுஇலங்கை விடுதலை அடைந்த பின்னர், குறிப்பாக 1956 ஆம் ஆண்டில் சிங்களம் மட்டும் சட்டம் கொண்டு வரப்பட்டதை அடுத்து, இலங்கைத் தமிழர் பெரும்பான்மையாக வசிக்கும் வட, கிழக்கு மாகாணங்களில் தமிழர்கள் அதிக அதிகாரங்கள் கேட்டு போராட்டங்களை நடத்தினர். இலங்கைத் தமிழரசுக் கட்சி சமஷ்டி ஆட்சி முறையைக் கோரியது. சிங்கள, தமிழ்த் தலைவர்களுக்கிடையே சில உடன்பாடுகள் எட்டப்பட்டிருந்தாலும், அவை எப்போதும் நடைமுறைப்படுத்தப்படவில்லை. இதனால் பொறுமையிழந்த தமிழ்த் தலைவர்கள் தனிநாடு கேட்க ஆரம்பித்தார்கள். 1974 ஆம் ஆண்டில் முக்கியமான தமிழ் அரசியல் கட்சிகள் இணைந்து தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி என்ற கூட்டமைப்பை உருவாக்கினர். 1976 ஆம் ஆண்டில் யாழ்ப்பாணத்தின் வட்டுக்கோட்டை நகரில் கூடிய தமிழ்த் தலைவர்கள் "தமிழ் ஈழம்" தனிநாட்டுக் கோரிக்கையை ஒருமனதாகக் கோரினர்.
1977 சூலை 21 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் வடக்கு மாகாணத்தில் அனைத்துத் தேர்தல் தொகுதிகளிலும் தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்கள் வெற்றி பெற்று, நாடாளுமன்றத்தில் இரண்டாவது அதிகப்படியான உறுப்பினர்களைக் கொண்ட பெரிய கட்சியாக வந்தது.[5]
இதேவேளையில், யாழ்ப்பாணப் பகுதியில் இலங்கைக் காவல்துறையினருக்கு எதிராக ஆங்காங்கே சில தாக்குதல்கள் சில ஆயுதக் குழுக்களினால் நடத்தப்பட்டு வந்தன.
மேற்கோள்கள்
தொகு- ↑ "ORGANISED POGROM AGAINST TAMILS - 1977". TamilNation. பார்க்கப்பட்ட நாள் 8 மே 2015.
- ↑ "Behind the Anti-Tamil Terror: The National Question in Sri Lanka". Workers Vanguard(NY). பார்க்கப்பட்ட நாள் 8 மே 2015.
- ↑ The Rajiv Gandhi Assassination. Colombo: Vijitha Yapa Publications. 2004. p. 165. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-81-909737-0-0.
- ↑ Kearney, R.N. (1985). "Ethnic Conflict and the Tamil Separatist Movement in Sri Lanka". Asian Survey 25 (9): 898–917. doi:10.1525/as.1985.25.9.01p0303g. https://archive.org/details/sim_asian-survey_1985-09_25_9/page/898.
- ↑ 1977 General Election Results
வெளி இணைப்புகள்
தொகு- ஆவணி அமளி, சன்சோனி ஆணைக்குழு முன் தமிழ் அகதிகள் மறுவாழ்வுக் கழகம், தொகுப்பு: மறவன்புலவு க. சச்சிதானந்தன், மார்ச் 1, 1978