1994 உருது எதிர்ப்புக் கலவரம்

1994 உருது எதிர்ப்புக் கலவரம் (1994 anti-Urdu riots) இந்தியாவின் கர்நாடகா மாநிலம் பெங்களூரில் உள்ள சகசீவன்ராம் நகர் பகுதியில், 1994 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் தொடர்ச்சியான மோதல்களுடன் நடைபெற்ற உருது எதிர்ப்புக் கலவரத்தைக் குறிக்கிறது. இந்தியாவின் தேசிய தொலைக்காட்சி அலைவரிசை நிறுவனமான தூர்தர்சனில் முக்கியமான நேரத்தில் பத்து நிமிட உருது செய்தி ஒளிபரப்பப்பட்டதற்கு எதிரான எதிர்வினையாக இந்தக் கலவரம் கருதப்பட்டது. கர்நாடகாவில் வகுப்புவாதம் அதிகரித்து வந்த நிலையில், சில கன்னட மொழி அமைப்புகளும், பாரதீய சனதா மற்றும் சனதா தளமும், இது முதல்வர் வீரப்ப மொய்லியின் அரசியல் தந்திரம் என்றும் இதனால் இசுலாமியர்களின் அரசியல் ஆதரவு மொய்லிக்கு கிடைத்தது என்றும் கூறின. மொய்லி இதை மறுத்து, ஒளிபரப்பை அவர்கள் வகுப்புவாதமாக்க முயன்றதாகக் கூறி எதிர்த்தார். இந்த கலவரத்தில் 25 பேருக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். சுமார் 150 பேர் காயமடைந்தனர்.[1][2][3][4][5] 2007 ஆம் ஆண்டு வரை பெங்களூரில் நடந்த மத வன்முறையின் கடைசி தீவிர சம்பவமாக இது கருதப்படுகிறது.[6]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Hindus clash with Muslims, Indian Police". Washington Post. 9 October 1994. https://www.washingtonpost.com/archive/politics/1994/10/09/hindus-clash-with-muslims-indian-police/e0c69a03-b968-4058-ac55-08ad78f7cc03/. பார்த்த நாள்: 20 November 2022. 
  2. "URDU NEWS BROADCAST TRIGGERS 3-DAY RIOT IN WHICH 23 DIE IN BANGALORE". UCA News. 11 October 1994. https://www.ucanews.com/story-archive/?post_name=/1994/10/12/urdu-news-broadcast-triggers-3day-riot-in-which-23-die-in-bangalore&post_id=46107#. 
  3. "War of Words Turns Fatal in India : Violence: Dispute over Urdu language being used on a 10-minute TV broadcast leads to riots, 17 deaths.". Los Angeles Times. 9 October 1994. https://www.latimes.com/archives/la-xpm-1994-10-09-mn-48390-story.html. 
  4. Rai, Saritha (31 October 1994). "Urdu news bulletin on Bangalore Doordarshan sparks off riots". இந்தியா டுடே. https://www.indiatoday.in/magazine/indiascope/story/19941031-urdu-news-bulletin-on-bangalore-doordarshan-sparks-off-riots-809868-1994-10-30. பார்த்த நாள்: 20 November 2022. 
  5. Engineer, Asghar Ali (1994). "Bangalore Violence: Linguistic or Communal?". Economic and Political Weekly 29 (44): 2854–2858. பன்னாட்டுத் தர தொடர் எண்:0012-9976. https://www.jstor.org/stable/4401963. 
  6. "Police patrol riot-hit Bangalore, IT firms operate" (in en). Reuters. 2007-01-22. https://www.reuters.com/article/us-india-violence-bangalore-idUSDEL29745720070122. 

குறிப்புகள்

தொகு
  • Nair, Janaki (2005). The promise of the metropolis: Bangalore's twentieth century. Oxford University Press. p. 259. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0195667255.