19 ஆம் நூற்றாண்டுத் தமிழ் நூல்கள்

19-ஆம் நூற்றாண்டு தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக் காலமாக அறியப்படுகிறது. இக்காலத்தில் பழம் தமிழ் நூல்கள் மீட்டெடுக்கப்பட்டு பதிக்கப்பட்டன, உரையெழுதப்பட்டன, ஆய்வுசெய்யப்பட்டன. இன்று எமக்கு கிடைக்கும் சங்க இலக்கியங்களில் பல இக்காலத்திலேயே முதலில் அச்சேறின. சமயம், அரசியல், அறிவியல் என தமிழில் பல துறைகளில் நூற்றுக் கணக்கான நூல்கள் இக்காலத்தில் அச்சிடப்பட்டன.

அ. தாண்டவராய முதலியார், சிவக்கொழுந்து தேசிகர், திருத்தணிகை விசாகப் பெருமாளையர், களத்தூர் வேதகிரி முதலியார், புஷ்பரதஞ்செட்டியார், ஆறுமுகநாவலர், சி.வை. தாமோதரம் பிள்ளை, அயோத்திதாசர், மழவை மகாலிங்கையர், உ.வே. சாமிநாதையர், ச. வையாபுரிப்பிள்ளை உட்பட்டோர் ஓலைச்சுவடிகளைக் கண்டறிந்து, ஆய்ந்து பதிப்பித்ததில் முக்கிய பங்களிப்பு வழங்கியவர்கள்.

வெளி இணைப்புகள் தொகு