2,4-இருகுளோரோபென்சைல் ஆல்ககால்

வேதிச் சேர்மம்

2,4-இருகுளோரோபென்சைல் ஆல்ககால் (2,4-Dichlorobenzyl alcohol) என்பது C7H6Cl2O என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். இது ஓர் இலேசான நுண்மித்தடுப்பியாகும். வாய் மற்றும் தொண்டை நோய்த்தொற்றுகளுடன் தொடர்புடைய பாக்டீரியா மற்றும் வைரசுகளை இது கொல்லும். இருமல், வற்ட்டு இருமல் தொண்டை வலி தொடர்பான மருந்து மாத்திரைகளில் இச்சேர்மம் ஓர் உட்கூறாக உள்ளது. ஐரோப்பிய தயாரிப்பான நியோ போரோசிலினாவின் மூலப்பொருளாகவும் 2,4-இருகுளோரோபென்சைல் ஆல்ககால் உள்ளது.[1] இருகுளோரோபென்சைல் ஆல்ககால் (1.2 மி.கி.) மற்றும் அமைல்ல்மெட்டாகிரெசால் (0.6 மி.கி.) கொண்ட குறைந்த காரகாடித்தன்மைச் சுட்டெண் அளவு கொண்ட மாத்திரையானது சுவாச ஒத்திசைவு வைரசு மற்றும் சார்சு-கோவிட்டு நுண்ணுயிரிகளை செயலிழக்கச் செய்வதாக கண்டறியப்பட்டுள்ளது, ஆனால் அடினோவைரசு அல்லது ரைனோவைரசு இதனால் பாதிக்கப்படவில்லை.[2] 10% சோடியம் பென்சோயேட்டு மற்றும் 0.3% இருகுளோரோபென்சைல் ஆல்ககால் கொண்ட ஒரு பல் மருந்து, பல் துலக்கிய பிறகு 5 முதல் 10 நிமிடங்களுக்கு நுண்ணுயிர் எதிர்ப்பி செயல்பாட்டை பராமரிக்கிறது.[3]

2,4-இருகுளோரோபென்சைல் ஆல்ககால்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
(2,4-இருகுளோரோபீனைல்)மெத்தனால்
வேறு பெயர்கள்
டைபெனால்
ரேபிடோசெப்
மையாசைடு எசு பி
இனங்காட்டிகள்
1777-82-8 Y
ChEBI CHEBI:48220 Y
ChEMBL ChEMBL3184437 N
ChemSpider 14918 Y
InChI
  • InChI=1S/C7H6Cl2O/c8-6-2-1-5(4-10)7(9)3-6/h1-3,10H,4H2 Y
    Key: DBHODFSFBXJZNY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C7H6Cl2O/c8-6-2-1-5(4-10)7(9)3-6/h1-3,10H,4H2
    Key: DBHODFSFBXJZNY-UHFFFAOYAI
யேமல் -3D படிமங்கள் Image
Image
பப்கெம் 15684
  • C1=CC(=C(C=C1Cl)Cl)CO
  • Clc1cc(Cl)ccc1CO
UNII 1NKX3648J9 Y
பண்புகள்
C7H6Cl2O
வாய்ப்பாட்டு எடை 177.02 g·mol−1
உருகுநிலை 57 முதல் 60 °C (135 முதல் 140 °F; 330 முதல் 333 K)
கொதிநிலை 150 °C (302 °F; 423 K) 25 மி.மி. பாதரசம்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

மேற்கோள்கள்

தொகு
  1. "Neo Borocillina". drugs.com. Archived from the original on 2020-09-13. பார்க்கப்பட்ட நாள் 2018-01-23.
  2. "A throat lozenge containing amyl meta cresol and dichlorobenzyl alcohol has a direct virucidal effect on respiratory syncytial virus, influenza A and SARS-CoV". Antiviral Chemistry & Chemotherapy 16 (2): 129–34. 2005. doi:10.1177/095632020501600205. பப்மெட்:15889535. 
  3. Ostergaard E (1994). "Evaluation of the antimicrobial effects of sodium benzoate and dichlorobenzyl alcohol against dental plaque microorganisms. An in vitro study.". Acta Odontol Scand 52 (6): 335–45. doi:10.3109/00016359409029031. பப்மெட்:7887143.