2,6-இருபுரோமோகுயினோன்குளோரிமைடு
2,6-இருபுரோமோகுயினோன்குளோரிமைடு (2,6-Dibromoquinonechlorimide) என்பது C6H2Br2ClNO என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பினாலிக் இரசாயனங்களைக் கண்டறிய உதவும் வேதியியல் பகுப்பாய்வு மற்றும் வண்ணப்படிவுப் பிரிகை ஆகிய செயல்முறைகளில் பயன்படுத்தப்படுகிறது. பினாலிக் பொருட்களின் முன்னிலையில் இது கருநீல நிறமாக மாறும். காளானால் உற்பத்தி செய்யப்படும் நச்சுப்பொருளான கரும்பூசண நச்சின் முன்னிலையில் இது பச்சை நிறமாக மாறும். 2,6-இருபுரோமோகுயினோன்குளோரோயிமைடை 120 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் சூடாக்கினால் வெடிக்கும். 60 °செல்சியசு வெப்பநிலைக்கு மேல் மெதுவாகச் சிதையும்.[1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2,6-இருபுரோமோ-4-(குளோரோயிமினோ)வளையயெக்சா-2,5-டையீன்-1-ஒன் | |
இனங்காட்டிகள் | |
537-45-1 | |
ChEMBL | ChEMBL3276933 |
ChemSpider | 10378 |
EC number | 208-667-1 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10835 |
| |
UNII | H750J4PI0N |
பண்புகள் | |
C6H2Br2ClNO | |
வாய்ப்பாட்டு எடை | 299.35 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிறத் தூள் |
தீங்குகள் | |
GHS pictograms | வார்ப்புரு:GHS01 |
GHS signal word | அபாயம் |
H240, H312, H315, H319, H335 | |
P210, P220, P234, P261, P264, P271, P280, P302+352, P304+340, P305+351+338, P312, P321, P322, P332+313 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2,6-இருபுரோமோகுயினோன்குளோரிமைடு காரகாடித்தன்மைச் சுட்டெண் 9.4 அளவு கொண்ட ஒரு தாங்கல் கரைசலில் பயன்படுத்தப்படுகிறது. இது மிகவும் உணர்திறன் கொண்டது மற்றும் இதைப் பயன்படுத்தி ஒரு மில்லியனுக்கு 0.05 பகுதிகள் பீனால் என்ற அளவு வரை பீனால்களை கண்டறிய முடியும். இதற்கான பொறிமுறையானது பீனாலுடன் குளோரிமைடு குழுவின் (=NCl) வினையானது இண்டோபீனாலை உருவாக்குகிறது. இரண்டு வளையங்கள் =N- இணைப்பு வழியாக இணைக்கப்படுகின்றன.[2]
மேற்கோள்கள்
தொகு- ↑ Lewis, Robert A. (2016). Hawley's Condensed Chemical Dictionary (in ஆங்கிலம்). John Wiley & Sons. p. 441. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1-118-13515-0.
- ↑ Gibbs, H. D. (1 April 1927). "Phenol Tests. III. The Indophenol Test". The Journal of Biological Chemistry 72: 649–664. doi:10.1016/S0021-9258(18)84338-1. http://www.jbc.org/content/72/2/649.full.pdf. பார்த்த நாள்: 13 January 2020.