2-அமினோதயோபீனால்
2-அமினோதயோபீனால் (2-Aminothiophenol) என்பது C6H4(SH)(NH2) என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். கரிம கந்தகச் சேர்மமான இது நிறமற்று எண்ணெய்த் தன்மை கொண்ட ஒரு திண்மமாக காணப்படுகிறது. மாசடைந்த 2-அமினோதயோபீனால் மாதிரிகள் அடர் நிறங்களில் காணப்படுவதுண்டு. தண்ணீரிலும் கரிமக் கரைப்பான்களிலும் இது கரையும். பென்சோதயசோல்கள் தயாரிப்பதற்கு ஒரு முன்னோடிச் சேர்மமாக 2-அமினோதயோபீனால் கருதப்படுகிறது. பென்சோதயசோல்கள் சில உயிரிமுனைப்பு கொண்டவையாகவும் அல்லது சாயங்களாகவும் செயல்படுகின்றன. 3- அமினோதயோபீனால், 4- அமினோதயோபீனால் இரண்டும் இதனுடைய மாற்றியன்களாகும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
2-அமினோபென்சீன்-1-தயோல் | |
வேறு பெயர்கள்
2-அமினோபென்சீன்தயோல், ஆர்த்தோ-அமினோபென்சீன்தயோல், 1-அமினோ-2-மெர்காப்டோபென்சீன், 2-அமினோ-1-மெர்காப்டோபென்சீன், 2-மெர்காப்டோ அனிலின், ஆர்த்தோ-அமினோபென்சீன்தயோல், ஆர்த்தோ-அமினோதயோபீனால், ஆர்த்தோ-மெர்காப்டோ அனிலின்
| |
இனங்காட்டிகள் | |
137-07-5 | |
ChemSpider | 21111815 |
EC number | 205-277-3 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 8713 |
| |
பண்புகள் | |
C6H7NS | |
வாய்ப்பாட்டு எடை | 125.19 g·mol−1 |
தோற்றம் | நிறமற்றது (மாசடைந்த மாதிரி நிறத்துடன் இருக்கும்.) |
அடர்த்தி | 1.200 கி/செ.மீ3 |
உருகுநிலை | 26 °C (79 °F; 299 K) |
கொதிநிலை | 234 °C (453 °F; 507 K) |
low | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
2-அமினோதயோபீனால் இரண்டு படிநிலைகளில் தயாரிக்கப்படுகிறது. அனிலினுடன் கார்பன் டைசல்பைடைச் சேர்த்து மெர்காப்டோபென்சோதயசோல் தயாரிக்கப்படுகிறது. [1] பின்னர் இது நீராற்பகுப்பு வினைக்கு உட்படுத்தப்பட்டு 2-அமினோதயோபீனால் தயாரிக்கப்படுகிறது. 2-நைட்ரோபென்சீன்சல்போனைல் குளோரைடை துத்தநாக ஒடுக்க வினைக்கு உட்படுத்தியும் இதைத் தயாரிக்கலாம்.
மேற்கோள்கள்
தொகு- ↑ Chedekel, Miles R.; Sharp, Dale E.; Jeffery, Gary A. "Synthesis of o-aminothiophenols" Synthetic Communications 1980, volume 10, pp. 167-73. எஆசு:10.1080/00397918008064218