2-அயோடோபீனால்
வேதிச் சேர்மம்
2-அயோடோபீனால் (2-Iodophenol) என்பது IC6H4OH என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். அரோமாட்டிக்கு கரிமச் சேர்மமான இது வெளிர் மஞ்சள் நிறத்தில் திண்மமாகக் காணப்படுகிறது. அறை வெப்பநிலைக்கு அருகில் 2-அயோடோபீனால் உருகத் தொடங்கும். பல்வேறு இணைப்பு வினைகளுக்கு இச்சேர்மம் உட்படுகிறது. இவ்விணைப்பு வினைகளில் பதிலீடான அயோடினை புதிய கார்பன் குழுவான ஆர்த்தோ பீனாலின் ஐதராக்சி குழுவிற்கு இடப்பெயர்ச்சி செய்கிறது. இதைத் தொடர்ந்து வளையமாதல் வினை நிகழ்ந்து பல்வளையங்கள் உருவாகின்றன.[3]
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-அயோடோபீனால்
| |
வேறு பெயர்கள்
| |
இனங்காட்டிகள் | |
533-58-4 | |
ChEBI | CHEBI:16706 |
ChEMBL | ChEMBL225564 |
ChemSpider | 10328 |
EC number | 208-569-9 |
Gmelin Reference
|
406034 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C01874 |
பப்கெம் | 10784 |
| |
UNII | F27L34A8B9 |
பண்புகள் | |
C6H5IO | |
வாய்ப்பாட்டு எடை | 220.01 g·mol−1 |
அடர்த்தி | 1.8757 கி/செ.மீ3 (80 °C)[1] |
உருகுநிலை | 43 °C (109 °F; 316 K)[1] |
கொதிநிலை | 186 °C (367 °F; 459 K)[1] (160 மி.மீ.பாதரசம்) |
காடித்தன்மை எண் (pKa) | 8.51[2] |
தீங்குகள் | |
GHS pictograms | [3] |
H302, H312, H315, H319, H332, H335 | |
P261, P280, P305+351+338 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
அயோடினுடன் 2-குளோரோபாதரசபீனாலைச் சேர்த்து சூடுபடுத்தி 2-அயோடோபீனால் சேர்மத்தை தயாரிக்கலாம்:
- ClHgC6H4OH + I2 → IC6H4OH + HgCl(I)
அயோடினுடன் பினாலை நேரடியாகச் சேர்த்து வினைபுரியச் செய்வதன் மூலமாக 2- மற்றும் 4-அயோடோ வழிப்பெறுதிகளின் கலவை உறுவாகிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 Haynes, p. 3.324
- ↑ Haynes, p. 5.93
- ↑ 3.0 3.1 "2-Iodophenol". Sigma-Aldrich.
- ↑ Whitmore, F. C.; Hanson, E. R. (1925). "o-Iodophenol". Organic Syntheses 4: 37. doi:10.15227/orgsyn.004.0037.
சான்றுகள்
தொகு- Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.