2-இண்டோலின்தயோன்
2-இண்டோலின்தயோன் (2-Indolinethione) என்பது C8H7NS என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். C8H6(S)(NH) என்ற அமைப்பு வாய்ப்பாட்டாலும் இதை அடையாளப்படுத்தலாம். 2-இண்டோலின்தயோன் தயோன் குழுவைக் கொண்ட ஈரைதரோயிண்டோலின் வழிப்பெறுதியாக கருதப்படுகிறது. 2-மெர்காப்டோயிண்டோல் சேர்மத்தின் கட்டமைப்பு மாற்றியமான இச்சேர்மம் வெண்மையான நிறத்துடன் ஒரு திண்மப் பொருளாகக் காணப்படுகிறது. 2-ஆக்சியிண்டோலை தயோயேற்றம் செய்து 2-இண்டோலினெத்தியோன் தயாரிக்கப்படுகிறது.[1][2] 2-இண்டோலின்தயோன் பல்வேறு இயற்கைப் பொருட்கள் தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகும்.[3]
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
1,3-ஈரைதரோயிண்டோல்-2-தயோன்
| |
இனங்காட்டிகள் | |
496-30-0 | |
பப்கெம் | 3032310 |
பண்புகள் | |
C8H7NS | |
வாய்ப்பாட்டு எடை | 149.21 g·mol−1 |
தோற்றம் | வெண்மையான திண்மம் |
அடர்த்தி | 1.27 கி/செ.மீ3 |
உருகுநிலை | 44–45 °C (111–113 °F; 317–318 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Hino, Tohru; Tsuneoka, Kazuko; Nakagawa, Masako; Akaboshi, Sanya (1969). "Thiation of Oxindoles". Chemical and Pharmaceutical Bulletin 17 (3): 550–558. doi:10.1248/cpb.17.550.
- ↑ Bergman, Jan; Pettersson, Birgitta; Hasimbegovic, Vedran; Svensson, Per H. (2011). "Thionations Using a P4S10−Pyridine Complex in Solvents Such as Acetonitrile and Dimethyl Sulfone". The Journal of Organic Chemistry 76 (6): 1546–1553. doi:10.1021/jo101865y. பப்மெட்:21341727.
- ↑ Pedras, M. Soledade C.; Jha, Mukund (2005). "Concise Syntheses of the Cruciferous Phytoalexins Brassilexin, Sinalexin, Wasalexins, and Analogues: Expanding the Scope of the Vilsmeier Formylation". The Journal of Organic Chemistry 70 (5): 1828–1834. doi:10.1021/jo0479866. பப்மெட்:15730307.