2-எத்தில்யெக்சனால்
2-எத்தில்யெக்சனால் (2-Ethylhexanol) என்பது கிளைத்த எட்டு கார்பன் சமச்சீரற்ற ஆல்ககால் ஆகும் . நிறமற்ற நீர்மமாக உள்ள் இச்சேர்மம் தண்ணீரில் சரியாகக் கரையாது ஆனால் பெரும்பாலான கரிமக் கரைப்பான்களில் கரையக்கூடியதாக உள்ளது. கரைப்பான்கள், சுவைகள் மற்றும் வாசனை திரவியங்கள் போன்ற ஏராளமான பயன்பாடுகளில் பயன்படுத்தவும், குறிப்பாக எரிச்சல் நீக்கிகள் மற்றும் நெகிழியாக்கிகள் போன்ற பிற வேதிப்பொருட்களை உற்பத்தி செய்வதற்கான முன்னோடியாகவும் 2- எத்தில்யெக்சனால் பெரிய அளவில் ஆண்டுக்கு 2,000,000,000 கிலோ அளவிற்கும் அதிகமாகத் தயாரிக்கப்படுகிறது[3] . இது இயற்கையாகத் தோன்றும் தாவர வாசனை திரவியங்களில் காணப்படுகிறது, மேலும் இவ்வாசனையானது வலச்சுழற்சி வகை ஆடியெதிர் உருவுக்கு கனமான, மண்வாசனையும் சிறிய அளவு மலர் மோன்ற வாசனையும், இடச்சுழற்சி வகை ஆட்டியெதிர் உருவுக்கு இலேசான இனிய மலர் வாசனையையும் தருகிறதென்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது[4].
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
2-எத்தில்யெக்சேன்-1-ஆல்[1]
| |
இனங்காட்டிகள் | |
104-76-7 | |
Beilstein Reference
|
1719280 |
ChEBI | CHEBI:16011 |
ChEMBL | ChEMBL31637 ChEMBL1229918 |
ChemSpider | 7434 5360145 R 5360146 S |
EC number | 203-234-3 |
யேமல் -3D படிமங்கள் | Image |
KEGG | C02498 |
ம.பா.த | 2-ethylhexanol |
பப்கெம் | 7720 6991979 R 6991980 S |
| |
UNII | XZV7TAA77P |
பண்புகள் | |
C8H18O | |
வாய்ப்பாட்டு எடை | 130.23 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 833 மி.கி மி.லி−1 |
உருகுநிலை | −76 °C (−105 °F; 197 K) |
கொதிநிலை | 180 முதல் 186 °C; 356 முதல் 367 °F; 453 முதல் 459 K |
மட. P | 2.721 |
ஆவியமுக்கம் | 30 பாசுக்கல் (20 °இல்) |
ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.431 |
வெப்பவேதியியல் | |
Std enthalpy of formation ΔfH |
−433.67–−432.09 கிலோயூல் மோல்−1 |
Std enthalpy of combustion ΔcH |
−5.28857–−5.28699 மெகாயூல் மோல்−1 |
நியம மோலார் எந்திரோப்பி S |
347.0 யூல் கெல்வின்−1 மோல்−1 |
வெப்பக் கொண்மை, C | 317.5யூல் கெல்வின்−1 மோல்−1 |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H312, H315, H318, H335 | |
P261, P280, P305+351+338 | |
தீப்பற்றும் வெப்பநிலை | 81 °C (178 °F; 354 K) |
Autoignition
temperature |
290 °C (554 °F; 563 K) |
வெடிபொருள் வரம்புகள் | 0.88–9.7% |
Lethal dose or concentration (LD, LC): | |
LD50 (Median dose)
|
|
அமெரிக்க சுகாதார ஏற்பு வரம்புகள்: | |
அனுமதிக்கத்தக்க வரம்பு
|
ஏதுமில்லை[2] |
பரிந்துரைக்கப்பட்ட வரம்பு
|
TWA மில்லியனுக்கு 50 பகுதிகள் (270 மி.கி/மீ3) [skin][2] |
உடனடி அபாயம்
|
N.D.[2] |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
பண்புகளும் பயன்களும்
தொகு2-எத்தில்யெக்சனால் உள்ள கிளைப்பகுதி பொதி சீர்குலைவு காரணமாக அதன் படிகமயமாக்கலைத் தடுக்கிறது; இது அச்சேர்மத்தின் மிகக் குறைந்த உறைநிலைக்கு வழிவகுக்கிறது. 2-எத்தில்யெக்சனாலின் எசுத்தர்களும் இதேபோல் பாதிக்கப்படுகின்றன, எனவே இது நெகிழியாக்கிகள் மற்றும் உயவு எண்ணெய் உற்பத்தியில் ஒரு மூலப்பொருளாக பயன்பாட்டைக் காண்கிறது, அங்கு அதன் இருப்பு பாகுத்தன்மையைக் குறைக்க உதவுகிறது மற்றும் உறைநிலை புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது.
கிட்டத்தட்ட தயாரிக்கப்படும் 2-எத்தில்யெக்சனாலின் பெரும்பகுதி முழுவதும் நெகிழியாக்கியான ஈரெசுத்தர் பிசு(2-எத்தில்யெக்சைல்) தாலேட்டுகள் தொகுப்புக்கான ஒரு முன்னோடி சேர்மமாகவே பயன்படுத்தப்படுகிறது. ஏனெனில் இது ஒரு கொழுப்பு ஆல்ககால் ஆகும். இதன் எசுத்தர்கள் எரிச்சல் நீக்கும் பண்புகளைக் கொண்டிருக்கின்றன.
பொதுவாக குறைவாக எளிதில் ஆவியாகும் கரைப்பானாகவும் 2-எத்தில்யெக்சனால் பயன்படுத்தப்படுகிறது . நைட்ரிக் அமிலத்துடன் வினைபுரியும் போது 2-எத்தில்யெக்சனால், தீப்பற்றும் வெப்பநிலை வேகத்தை குறிக்கப் பயன்படும் செட்டேன் எண் மதிப்பை அதிகரிக்க உதவும் துணைக்கருவியாகவும் பயன்படுத்தப்படுகிறது. கிளைசிடைல் ஈதர் உற்பத்தியில் சோடியம் ஐதராக்சைடு மற்றும் எபிகுளோரோ ஐதரின் ஆகியவற்றோடு சேர்ந்து வினைபுரியவும் பயன்படுத்தப்படுகிறது. இது பல்வேறு பூச்சுகள், பசைகள் மற்றும் மேற்பூச்சு பயன்பாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.
தொழில்துறை உற்பத்தி
தொகு2-எத்தில்யெக்சனால் தொழில்துறை ரீதியாக என் - பியூட்டரால்டிகைடை ஆல்டோல் குறுக்க வினை மற்றும் அதை தொடர்ந்து வினையில் உருவாகும் ஐதராக்சி ஆல்டிகைடை ஐதரசனேற்றம் செய்தும் தயாரிக்கலாம். ஆண்டுக்கு சுமார் 2,500,000 டன் இந்த வழி முறையில் தயாரிக்கப்படுகிறது[5][6]
என்- பியூட்டிரால்டிகைடு புரோப்பைலீனை ஐதரோபார்மைலேற்றம் செய்வதன் மூலம் தயாரிக்கப்படுகிறது, இது ஒரு தன்னிறைவான ஒரு தயாரிப்பு முறையில் அல்லது ஒரு முழுமையான ஒருங்கிணைந்த வசதியின் முதல் படிநிலையில் தயாரிக்கப்படலாம். என் -பியூட்டனால் மற்றும் ஐசோபியூட்டனால் மற்றும் கூடுதலாக 2-எத்தில்யெக்சனால் இதற்காகப் பயன்படுத்தப்படுகிறது. இந்த வழியில் தயாரிக்கப்பட்ட ஆல்ககால்கள் சில நேரங்களில் ஆக்சோ ஆல்ககால்கள் என குறிப்பிடப்படுகின்றன. ஒட்டுமொத்த செயல்முறை குர்பெட் வினையை மிகவும் ஒத்திருக்கிறது[7],
சுகாதார விளைவுகள்
தொகு2-எத்தில்யெக்சனால் விலங்கு மாதிரிகளில் குறைந்த நச்சுத்தன்மையை வெளிப்படுத்துகிறது. எலிகளுக்கான இதனுடைய உயிர் கொல்லும் அளவு கிலோகிராமுக்கு 2-3 கிராம் மட்டுமேயாகும்[3].
பெயரிடல்
தொகுஐசோ ஆக்டனால் என்ற பெயர் பொதுவாக 2-எத்தில்யெக்சனாலையும் அதன் வழிப்பெறுதிகளையும் குறிக்க வேதித்துறையில் பயன்படுத்தப்படுகிறது, ஆனாலும் ஐ.யு.பி.ஏ.சி பெயரிடும் மரபுகள் இப்பெயர் மற்றொரு ஆக்டனாலின் மாற்றியனைக் குறிக்கிறது என்று கூறுகிறது[8].
மேற்கோள்கள்
தொகு- ↑ "2-ethylhexanol - Compound Summary". PubChem Compound. USA: National Center for Biotechnology Information. 16 September 2005. Identification and Related Records. பார்க்கப்பட்ட நாள் 29 January 2012.
- ↑ 2.0 2.1 2.2 "NIOSH Pocket Guide to Chemical Hazards #0354". National Institute for Occupational Safety and Health (NIOSH).
- ↑ 3.0 3.1 Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2005). Wiley-VCH. DOI:10.1002/14356007.a10_137. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3527306732.
- ↑ Klaus Rettinger; Christian Burschka; Peter Scheeben; Heike Fuchs; Armin Mosandl (1991). "Chiral 2-alkylbranched acids, esters and alcohols. Preparation and stereospecific flavour evaluation". Tetrahedron: Asymmetry 2 (10): 965–968. doi:10.1016/S0957-4166(00)86137-6. https://opus.bibliothek.uni-wuerzburg.de/files/4494/Burschka_Esters.pdf.
- ↑ Ullmann's Encyclopedia of Industrial Chemistry. (2008). Wiley-VCH. DOI:10.1002/14356007.a01_321.pub2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-3527306732.
- ↑ Ashford’s Dictionary of Industrial Chemicals, Third edition, 2011, page 4180-4181.
- ↑ Miller, Robert; Bennett, George (January 1961). "Producing 2-Ethylhexanol by the Guerbet Reaction". Industrial & Engineering Chemistry 53 (1): 33–36. doi:10.1021/ie50613a027.
- ↑ IUPAC Blue Book, A2.25