2-பியூட்டைன்
2-பியூட்டைன் (டைமெதில் அசிட்டிலீன், குரோடோனைலீன் அல்லது பியூட்-2-ஐன்) (2-Butyne, dimethylacetylene, crotonylene, but-2-yne) என்பது, (CH3C≡CCH3 என்ற மூலக்கூறு வாய்ப்பாட்டை உடைய ஒரு ஆல்க்கைன் ஆகும். செயற்கையாகத் தயாரிக்கப்படும் இச்சேர்மம், திட்ட வெப்ப அழுத்த நிலையில், நிறமற்ற, எளிதில் ஆவியாகக்கூடிய, மூக்கைத் துளைக்கும் வாசனையையுடைய திரவமாகும்.
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பியூட்-2-ஐன் | |
வேறு பெயர்கள்
டைமெதில்அசிட்டிலீன்
குரோடோனிலீன் | |
இனங்காட்டிகள் | |
503-17-3 | |
ChEMBL | ChEMBL119108 |
ChemSpider | 9990 |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 10419 |
| |
பண்புகள் | |
C4H6 | |
வாய்ப்பாட்டு எடை | 54.0904 கி/மோல் |
அடர்த்தி | 0.691 கி/மிலி |
உருகுநிலை | −32 °C (−26 °F; 241 K) |
கொதிநிலை | 27 °C (81 °F; 300 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
5-டெகைன் (டைபியூட்டைல்எதின்), 4-ஆக்டைன் (டைபுரோப்பைல்எதின்) மற்றும் 3-எக்சைன் (டைஎதில்எதின்) ஆகியவற்றுடன் 2-பியூட்டைன் (டைமெதில்எதின்) சீர்மையான ஆல்க்கைன்களின் தொகுதியை உருவாக்குகின்றது.
தொகுப்பு முறை தயாரிப்பு
தொகுஎத்தனால் கலந்த பொட்டாசியம் ஐதராக்சைடு [1] கரைசலில் உள்ள 1-பியூட்டைனின் ஒழுங்காக்கும் வினையின் காரணமாக 2-பியூட்டைனானது தயாரிக்கப்படுகிறது.
பயன்பாடுகள்
தொகு2-பியூட்டைன், புரோப்பைனுடன் சேர்த்து, உயிர்ச்சத்து - ஈ -இன் ஒட்டுமொத்தத் தொகுப்பு முறையில் அல்கைலேற்றம் செய்யப்பட்ட ஐதரோகுயினொன்களைத் தொகுக்கப் பயன்படுத்தப்படுகிறது. [2]
மேலும் காண்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ Victor von Richter; Hans Meerwein (1916). Organic Chemistry: Chemistry of the aliphatic series Vol. I: Smith's 3rd American Ed. Philadelphia: P. Blakiston's Sons & Co. p. 89.
- ↑ Reppe, Walter; Kutepow, N; Magin, A (1969). "Cyclization of Acetylenic Compounds". Angewandte Chemie International Edition in English 8 (10): 727-733. doi:10.1002/anie.196907271. http://onlinelibrary.wiley.com/doi/10.1002/anie.196907271/abstract. பார்த்த நாள்: 26 December 2013.