2000 கேம்ப் தாவிது கூட்டம்
2000 கேம்ப் தாவிது கூட்டம் என்பது 2000 ஆண்டு மே 10 முதல் 18 வரை 2000 கேம்ப் தாவிதில் நடந்த அமெரிக்க அதிபர் பில் கிளிண்டனுக்கும் இசுரேல் பிரதமர் இகுட் பராக்குக்கும் பாலத்தீன ஆணைய தலைவர் யாசர் அராபத்துக்கும் இடையே இசுரேல் பாலத்தீன சண்டையை முடிவுக்கு கொண்டு வர நடத்தப்பட்டது. இக்கூட்டம் எந்த முடிவும் எட்டப்படாமல் தோல்வியில் முடிந்தது, இக்கூட்ட முடிவே இசுரேலுக்கு எதிராக பாலத்தீனியர்களின் இரண்டாவது கிளர்ச்சி (இன்டிபெடா) ஆரம்பமானதற்கு ஒரு காரணியாக சொல்லப்படுகிறது.
இக்கூட்ட நிகழ்வின் அறிக்கையை ரசோமோன் விளைவு என்று அழைக்கிறார்கள். இக்கூட்டத்தில் பங்கேற்ற ஒவ்வொருவரும் அவர்கள் நலனுக்கேற்ப மாறுபட்ட கருத்துக்களை கூறியுள்ளதால் இப்பெயர் கொடுக்கப்பட்டது.[1][2][3][4]
கூட்டம்
தொகுஅமெரிக்க அதிபர் பில்கிளிண்டன் இசுரேல் பிரதமர் இகட் பராக்கையும் பாலத்தீன ஆணைய தலைவர் யாசர் அராபத்தையும் யூலை 5 அன்று இசுரேல்-பாலத்தீன அமைதிப் பேச்சுவார்த்தையை தொடர கேம்ப் தாவிதுக்கு வருமாறு அழைப்பு விடுத்தார். 1978இல் அதிபர் சிம்மி கார்டரால் எகிப்து அதிபர் அன்வர் சதாத்துக்கும் இசுரேல் பிரதமர் மெனாசெம் பெகினுக்கும் இடையே காம்ப் தாவீதில் வெற்றிகரமாக நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையை முன் உதாரணமாக கொண்டு இங்கு பேச்சுவார்த்தை நடத்த அழைப்பு விடுக்கப்பட்டது. 1993ஆம் ஆண்டு பாலத்தீன ஆணைய தலைவர் யாசர் அராபத்துக்கும் மறைந்த இசுரேல் பிரதமர் இச்சாக் ராபினுக்கும் இடையே ஒசுலோவில் உடன்பாடு ஏற்பட்டது. இதில் இசுரேல் பாலத்தீனத்துக்கு இடையேயான எல்லா சிக்கல்களும் பேசப்பட்டது, இசுரேலின் ஆதிக்கத்துக்கு உட்பட்ட பாலத்தீன தன்னாட்சி அமைப்பு ஏற்படுத்த பட்ட 5 ஆண்டுகளுக்குள் மேற்கு கரையிலுள்ள இசுரேல் குடியேற்றங்களின் நிலை முடிவு செய்யப்படும் எனவும் தீர்மானிக்கப்பட்டது. எனினும் இவ்வுடன்பாட்டை செயல்படுத்தும் இடைக்கால செயல்பாடு இசுரேலியர்கள் பாலத்தீனர்கள் ஆகிய இருவரது எதிர்பார்ப்பையும் பூர்த்தி செய்யவில்லை.
2000, யூலை 11 கேம்ப் தாவிதில் கூட்டப்பட்ட அமைதி பேச்சுவார்த்தைக்கான கூட்டம் பேச்சுவார்த்தைக்கான தகுந்த காலம் கனியும் முன்பே கூட்டப்பட்டதாக பாலத்தீனியர் கருதினர். [5] இது தங்களை சிக்கவைப்பதற்கான சூழ்ச்சி வலை என்றும் பாலத்தீனியர்கள் கருதுகின்றனர்.[6] எந்தவொரு முடிவும் எட்டப்படாமல் இக்கூட்டம் யூலை 25 அன்று முடிந்தது. ஒப்புக்கொள்ளப்பட்ட விதிகளின் படி வருங்காலங்களில் பேச்சுவார்த்தை நடத்துவது என்ற அறிக்கையுடன் இக்கூட்டம் நிறைவடைந்தது[7]
பேச்சுவார்த்தை
தொகுபேச்சுவார்த்தை எந்த எழுதப்பட்ட குறிப்புகளை வைத்து நடக்காமல் வெறும் பேச்சுக்களின் மூலமே நடந்தது.[8] எல்லா கோரிக்கைகளும் இரு தரப்பாலும் ஏற்கப்படாவிட்டால், எட்டப்பட்ட எந்த ஒரு உடன்பாட்டையும் ஏற்கத்தேவையில்லை என்ற அடிப்படையிலேயே இந்தப் பேச்சுவார்த்தை நடந்தது. எந்தக் கோரிக்கையிலும் உடன்பாடு எட்டப்படவில்லை. நில உரிமை, செருசலம், கோவில் மலை, குடியேற்றம், அகதிகள், பாலத்தீனியர்கள் திரும்ப வரும் உரிமை, பாதுகாப்பு போற்றவற்றில் உடன்பாடு எட்டப்படாமல் போனது.
வரலாற்று பாலத்தீனிய நிலத்தில் 78% இசுரேலியர்களுக்கு என்பதை ஏற்றுக்கொண்ட பாலத்தீனியர் தரப்பு 22% மட்டும் தங்களுக்கு இருப்பதால் மேற்கு கரையும் காசா நிலப்பகுதியும் கொண்ட இறையாண்மை உள்ள நாடு வேண்டுமென கேட்டனர். விட்டுக்கொடுத்தவற்றில் இருந்து மேலும் விட்டுக்கொடுக்க முடியாது என பைசல் உசைனி கூறினார்.[9] ஐநா தீர்மானம் 242 ஆறு நாள் போரில் கைப்பற்றப்பட்ட நிலங்களில் இருந்து இசுரேல் முழுமையாக விலக வேண்டுமென்று கூறுவதாக பாலத்தீனியர்கள் கூறினர்.
1993 ஒசுலோ கூட்டத்தில் பாலத்தீனர்கள் அரபு இசுரேலிய போருக்கு பின்னான பச்சை கோட்டை எல்லையாக மேற்கு கரைக்கு ஒத்துக்கொண்டனர், ஆனால் இசுரேலியர்கள் இதை நிராகரித்துடன் ஐநா தீர்மானம் 242ஐ பாலத்தீனர்கள் தவறாக புரிந்துகொண்டுள்ளனர் என்றனர். இசுரேலியர்கள் பச்சை கோட்டு எல்லைப் பகுதியிலில் பாலத்தீனியர்கள் கட்டுப்பாட்டிலிருக்கும் மேற்கு கரையிலுள்ள இசுரேலிய குடியேற்றங்களை இசுரேலுடன் இணைக்க விரும்புகின்றனர். மேலும் ஆறு நாள் போருக்கு பின் கைப்பற்றிய மேற்கு கரை பகுதிகளை முழுவதுமாக ஒப்படைப்பது இசுரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை தரும் என்று கருதுகின்றனர். மேற்கு கரையின் 5% நிலப்பகுதி அளவில் பாலத்தீனர்களும் இசுரேலியர்களும் வேறுபாட்டைக் கொண்டுள்ளனர். கிழக்கு எருசலேம் (71 சதுர கிமீ) சாக்கடல் (195 சதுர கிமீ) யாரும் செல்லக்கூடாத இடம் (50 சதுர கிமீ) [8] போன்றவை மேற்கு கரையை சேராது என்று இசுரேலியர்கள் விளக்கமளிக்கிறார்கள்.
இசுரேலியர்களின் விளக்கத்தின் அடிப்படையில் இகுட் பாராக் பாலத்தீன நாடு அமைக்க முதலில் 73% மேற்கு கரையையும் (பச்சை கோடு எல்லையுள்ள மேற்கு கரை) முழு காசா நிலப்பகுதியையும் தருவதாக கூறுகிறார். 10-25 ஆண்டுகளில் பாலத்தீன நாடு 92% மேற்கு கரை வரை விரிவாக்கம் பெறலாம் என்றனர். (91% மேற்கு கரை, 1% நிலமாற்று அடிப்படையில்).[8][10] பாலத்தீனர்கள் பார்வையில் இசுரேலியர்கள் தருவதாக கூறும் பாலத்தீன நாடு அதிகபட்சம் 86% மேற்கு கரையையே கொண்டிருக்கிறது. [8]
ராபர்ட் ரைட் என்பவரின் கூற்றுப்படி இசுரேல் பெரிய குடியேற்றங்களை வைத்துக்கொண்டு மக்கள் தொகை குறைவாக உள்ள சிறிய குடியேற்றங்களை அகற்றிவிடும் விதிவிலக்காக எபிரோன் நகருக்கு அருகிலுள்ள கிர்யாட் அர்பா மட்டும் அகற்றப்படாது, பாலத்தீன நாட்டிற்குள் அமைந்துள்ள இசுரேலிய பகுதியான இது புறநகர் சாலை வழியே இது இசுரேலுடன் இணைக்கப்படும். செருசலேமிலிருந்து சாவு கடலுக்கு செல்லும் படியான இசுரேலிய கட்டுப்பாட்டில் உள்ள சாலையால் மேற்கு கரை பிளக்கப்படும், இதில் பாலத்தீனர்கள் எந்த கட்டணமும் இன்றி பயன்படுத்திக் கொள்ளலாம் எனினும் அவசரநிலை ஏற்பட்டால் இச்சாலையை மூடும் உரிமை இசுரேலியர்களுக்கு உண்டு. இச்சாலைக்கு பதிலாக பாலத்தீனியர்கள் மேற்கு கரையிலிருந்து காசா செல்ல நெகவ் சாலையை பயன்படுத்தலாமென இசுரேல் கூறியது. பாலத்தீனியர்களின் பயணம் தடையில்லாமல் இருக்க உயர்த்தப்பட்ட நெடுஞ்சாலையும் உயர்த்தப்பட்ட இருப்புப்பாதையும் நெகவ் சாலையில் அமைக்கப்படும் என்ற இசுரேல் இந்ந உயர்த்தப்பட்ட சாலையும் இருப்புப்பாதையும் இசுரேலின் இறையாண்மைக்கு உட்பட்டது என்றும் அவசர காலத்தில் அதை மூடும் உரிமை இசுரேலுக்கு உண்டு எனவும் கூறியது. [11]
தொடர்ச்சி
தொகுமுன்மொழியப்பட்ட பாலத்தீன நாட்டில் காசா நிலப்பகுதி மேற்கு கரையில் இருந்து துண்டிக்கப்பட்டு இருந்தது. மேற்கு கரையே ஒரே நிலப்பகுதியாக இல்லாமல் துண்டிக்கப்பட்டு இருந்தது. நோம் சோம்சுகி மேற்கு கரை மூன்று நிருவாக அலகுகளாக பிரிக்கப்படும் என்றும் கிழக்கு எருசலம் நான்காவது நிருவாக அலகுகளாக இருக்கும் என்றும் இந்த நான்கு நிருவாக அலகுகளும் இசுரேலிய பகுதிகளால் பிரிக்கப்பட்டிருக்கும் என்று குறிப்பிருந்தார். வேறு சிலர் மூன்று நிருவாக அலகுகளாக மட்டும் பிரிக்கப்பட்டிருக்கும் என்றனர். இவைகளுக்கு முற்றிலும் மாறாக இகுட் பாராக் மேற்கு கரையானது கிழக்கு எருசலேமிலிருந்து சாக்கடலுக்கு போகும் பகுதிக்கு இப்புறம் அப்புறம் என இரு பகுதிகளாக பிரிக்கப்படும் மற்றபடி தொடர்ச்சியாக இருக்கும் என்றார்.
இந்த முன்மொழிவை பாலத்தீனியர்கள் ஏற்கவில்லை. மேற்கு கரையை மூன்றாக பிரிப்பதை அவர்கள் கடுமையாக எதிர்த்தனர். குடியேற்ற பகுதிகளும், புறநகர் சாலைகளும் ரமலான் நகரத்துக்கும் நெபுலசுக்கும் யெனினுக்கும் இடையேயான தடையில்லா மக்கள் போக்குவரத்தை துண்டிக்கும். ரமலான் அலகு பெத்தகேமையும் எபிரானையும் பிரிக்கும். தனியான இன்னொரு சிறிய அலகு செரிக்கோவை கொண்டிருக்கும். மேலும் மேற்கு கரைக்கும் சோர்டானுக்கும் இடையேயான எல்லை இசுரேலிய கட்டுப்பாட்டில் இருக்கும். பாலத்தீனம் கிழக்கு எருசலேமினின் சில பகுதிகளை பெறும் அவை மேற்கு கரையிலிருந்து இசுரேலுடன் இணைக்கப்பட்ட பகுதிகளால் சூழப்பட்டிருக்கும்
கிழக்கு எருசலேம்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ KACOWICZ, A. (2005). Rashomon in the Middle East: Clashing Narratives, Images, and Frames in the Israeli–Palestinian Conflict. Cooperation and Conflict, 40(3), 343-360. Retrieved February 16, 2021, from http://www.jstor.org/stable/45084335
- ↑ ARONOFF, M.J. (2009), Camp David Rashomon: Contested Interpretations of the Israel/Palestine Peace Process. Political Science Quarterly, 124: 143-167. https://doi.org/10.1002/j.1538-165X.2009.tb00645.x
- ↑ Shamir, S. (2005). The Enigma of Camp David. The Camp David Summit-What Went Wrong: "...manifestation of the Rashomon syndrome..."
- ↑ Russell L. Riley (1 September 2016). Inside the Clinton White House: An Oral History. Oxford University Press. p. 253. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-19-060547-6.
Camp David is a bit of a Rashomon event. There is the American Camp David, there is the Palestinian Camp David, and there is the Israeli Camp David
- ↑ Akram Hanieh, The Camp David Papers பரணிடப்பட்டது 14 சனவரி 2014 at the வந்தவழி இயந்திரம். Articles, published in al-Ayyam in seven installments between 29 July and 10 August 2000. Journal of Palestine Studies XXX, no. 2 (Winter 2001), pp. 75-97.
- ↑ Amnon Kapeliouk, A summit clouded by suspicion; Haaretz, 23 November 2001.
- ↑ "Trilateral Statement on the Middle East Peace Summit at Camp David". US Department of State. 25 July 2000.
- ↑ 8.0 8.1 8.2 8.3 Jeremy Pressman, International Security, vol 28, no. 2, Fall 2003, "Visions in Collision: What Happened at Camp David and Taba?". On [1] பரணிடப்பட்டது 22 சூலை 2011 at the வந்தவழி இயந்திரம். See pp. 7, 15-19
- ↑ Oren Yiftachel, Ethnocracy: Land and Identity Politics in Israel/Palestine, University of Pennsylvania Press 1006 p.75.
- ↑ Karsh, Efraim (2003). Arafat's War: The Man and His Battle for Israeli Conquest. Grove Press. p. 168.
- ↑ Wright, Robert (18 April 2002). "Was Arafat the Problem?". Slate. http://www.slate.com/articles/news_and_politics/the_earthling/2002/04/wasarafat_the_problem.single.html.