2000 செங்கோட்டை மீதான பயங்கரவாதிகளின் தாக்குதல்

இந்தியாவின் தலைநகரான தில்லியில் உள்ள செங்கோட்டை மீது பாகிஸ்தான் நாட்டின் லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதிகள் 22 டிசம்பர் 2000 அன்று நடத்திய தாக்குதல்களைக் குறிக்கிறது. இந்த பயங்கரவாத தாக்குதலில் இரண்டு இந்திய இராணுவ வீரர்கள் மற்றும் பொதுமக்களில் ஒருவர் கொல்லப்பட்டனர்.[1][2][3][4] இத்தாக்குதலுக்கு திட்டமிட்ட லஷ்கர்-ஏ-தொய்பா பயங்கரவாதி முகமது ஆரிப் என்ற அஷ்பக்கை, தில்லி பன்னாட்டு வானூர்தி நிலையத்தில் வைத்து 10 சனவரி 2018 அன்று தில்லி காவல்துறையினர் மற்றும் குஜராத் பயங்கரவாத எதிர்ப்புப் படையினர் கைது செய்தனர். முகமது ஆரிப் என்ற அஷ்பக் மீது பல ஆண்டுகள் நடைபெற்ற வழக்கில் இறுதியாக தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது. இதனை 3 நவம்பர் 2022 அன்று இந்திய உச்ச நீதிமன்றம் உறுதி செய்து தீர்ப்பு வழங்கியது.[5][6]

மேற்கோள்கள்

தொகு
  1. "2000 Red Fort terrorist attack". தி டைம்ஸ் ஆஃப் இந்தியா. 3 December 2007 இம் மூலத்தில் இருந்து 17 டிசம்பர் 2013 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20131217071053/http://articles.timesofindia.indiatimes.com/2007-12-03/india/27958979_1_ashfaq-s-indian-farooq-ahmed-qasid-death-sentence. பார்த்த நாள்: 4 August 2012. 
  2. "Red Fort terrorist attacks". Archived from the original on 13 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 4 Aug 2012.
  3. "Red Fort attack will not affect peace moves". 2012-08-19.
  4. "Archived copy" (PDF). Archived from the original (PDF) on 4 மே 2013. பார்க்கப்பட்ட நாள் 14 மே 2014.{{cite web}}: CS1 maint: archived copy as title (link)
  5. செங்கோட்டை தாக்குதல் வழக்கில் பயங்கரவாதி முகமது ஆரிப் தூக்கு உறுதி
  6. Supreme Court affirms death penalty of LeT terrorist in 2000 Red Fort attack case

வெளி இணைப்புகள்

தொகு