2006 அகமதாபாத் தொடருந்து நிலைய குண்டுவெடிப்பு

2006 அகமதாபாத் தொடருந்து நிலைய குண்டுவெடிப்பு (2006 Ahmedabad railway station) இந்தியாவின் அகமதாபாத்து நகரிலுள்ள கலுபூர் தொடருந்து நிலையத்தின் நடைமேடை எண் 2/3 இல் குண்டு வெடித்தது.[1][4] 10-25 பேர் சிறு காயங்களுக்கு உள்ளாகினர்.[2][3] குண்டுவெடிப்பு நேரத்தில் தொடருந்து எதுவும் நடைமேடையில் இல்லை. குண்டு வெடிப்பதற்கு முன் இரண்டு தொடருந்துகள் கடந்து சென்று விட்டன. கட்ச் விரைவுவண்டி சற்று நேரத்தில் நடைமேடைக்கு வரவிருந்தது. ஒருவேளை ஏதேனும் தொடருந்து நடைமேடையில் நின்றிருந்தால் வெடிப்பின் விளைவுகள் கடுமையாக இருந்திருக்கும்.

2006 அகமதாபாத் சந்திப்பு தொடருந்து நிலையம் குண்டுவெடிப்பு
இடம்அகமதாபாது, குசராத்து, இந்தியா
நாள்19 பிப்ரவரி 2006
01:43[1] (IST)
தாக்குதல்
வகை
குண்டு வெடிப்பு
காயமடைந்தோர்10[2]-25[3]
தாக்கியோர்இலசுகர் இ தொய்பா[2]

அதிகாலை 1:43 மணியளவில் தொடருந்து நிலைய நடைமேடைகளில் நிறுவப்பட்டிருந்த பொதுத் தொலைபேசி அழைப்பு சாவடிகளில் இக்குண்டுவெடிப்புகள் நிகழ்ந்தன.[5]

விசாரணைகள்

தொகு

ஒரு கைப்பெட்டியில் 1.5 கிலோ ஆர்டிஎக்சு வெடிமருந்துகள் வைக்கப்பட்டிருந்தன. இவ்வெடிபொருட்கள் மும்பையிலிருந்து அகமதாபாத் தொடருந்து நிலையத்திற்கு கர்னாவதி விரைவு வண்டியின் சொகுசு நாற்காலி பெட்டியில் வந்திருந்தன.[6]

குசராத் பயங்கரவாத எதிர்ப்புப் படை குற்றம் சாட்டப்பட்ட முகமது அமீர் சக்கீல் அகமது சேக், மகமது இலியாசு அப்துல் மேமன், சையத் ஆகிப், மகமது அசுலாம் காசுமீரி மற்றும் அபு இயுண்டால் ஆகியோரைக் கைது செய்தது.[7]

இதையும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  2. 2.0 2.1 2.2 "Ahmedabad railway station blast accused chargesheeted". Hindustan Times (in ஆங்கிலம்). 2010-03-18. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
  3. 3.0 3.1 Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  4. "Gujarat ATS arrests man in connection with 2006 Ahmedabad blast case". ANI News (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
  5. "2006 Kalupur Railway Station blast case: ATS arrests Bengal man who 'helped' accused flee to Pak". The Indian Express (in ஆங்கிலம்). 2020-08-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.
  6. Lua error in Module:Citation/CS1/Utilities at line 206: Called with an undefined error condition: err_numeric_names.
  7. "2006 Kalupur Railway Station blast case: ATS arrests Bengal man who 'helped' accused flee to Pak". The Indian Express (in ஆங்கிலம்). 2020-08-21. பார்க்கப்பட்ட நாள் 2022-02-18.