2008 முர்சிதாபாத் கொலை

2008 முர்சிதாபாத் கொலை, (2008 Murshidabad murder) என்பது 14 ஜூலை 2008 அன்று முர்சிதாபாத்தில் உள்ள சாலிசி நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில், மேற்கு வங்கத்தைச் சேர்ந்த முனிரா பீபி எனும் முஸ்லீம் பெண்ணை மணந்ததற்காக பீகாரைச் சேர்ந்த இந்து தொழிலாளி சைலேந்திர பிரசாத்தின் தலையை துண்டித்த கொலையினைப் பற்றியதாகும். [1] [2] [3] [4] [5] பாதிக்கப்பட்டவரின் முனிரா பீபி, தனது கணவரை இழந்த கைம்பெண் ஆவார் [6]

பின்னணி தொகு

பீகாரை பூர்வீகமாகக் கொண்ட சைலேந்திர பிரசாத், மும்பையில் தொழிலாளியாக வேலை செய்தார், அங்கு முனிரா பணிப்பெண்ணாக வேலை செய்தார். அவர்கள் இருவரும் ஒருவரை ஒருவர் காதலித்து 2001 ல் திருமணம் செய்து கொண்டனர். முனிரா ஒரு பாரம்பரியமான பழக்க வழக்கங்களைக் கொண்ட கிராமத்தில் இருந்து வந்தார். அங்குள்ள கிராமத்தில் பெ ண்களை வேலைக்கு அனுப்பவது என்பது குற்றமான செயலாகும்.அங்கு இருந்த சாலிசி நீதிமன்றம் தனது தந்தை அன்சாரி ஷேக்கிற்கு தனது மகளை மும்பையில் வேலைக்கு அனுப்பிய குற்றத்திற்காக இருநூறு ரூபாய் அபராதம் விதித்தது.

விசாரணை மற்றும் மரணதண்டனை தொகு

முனீரா பீவி மற்றும் சைலேந்திர பிரசாத் ஆகிய இருவரும் ஜூலை 2006 இல் மீண்டும் லக்ட்சுமன்பூருக்கு திரும்பி வந்தனர். தங்கள் பத்து மாத மகனுடன் தங்களது கிராமத்திற்கு, திருமணத்திற்குப் பிறகு மீண்டும் பீவி வந்தார். முந்தைய சந்தர்ப்பத்தைப் போலவே, சைலேந்திரா, பாரம்பரிய கிராமவாசிகளின் கோபத்திலிருந்து தப்பிக்க மதம் மாற வேண்டியிருந்தது. அவர் முன்னா ஷேக் என்று அடையாளத்தை மாற்ற வேண்டியிருந்தது. எவ்வாறாயினும், அவரது மாமனார் அன்சாரி ஷேக், தனது மருமகன் முஸ்லீம்களின் வழக்கமான வெள்ளிக்கிழமை பிரார்த்தனைகளைச் செய்யவில்லை என்பதனைக் கண்டார்,சில சமயங்களில் முஸ்லீம்களின் வழக்கமான வாழ்த்துக்களுக்கும் முறையாக பதிலளிக்காமல் இருந்துள்ளார். 14 ஜூலை அன்று நடைபெற்ற ஒரு மத சடங்கின் போது அன்சாரி ஷேக், சைலேந்திரா முறையாக உச்சரிக்காது முணுமுணுத்தனைக் கேட்டார். அது பற்றிய அவரது சந்தேகத்தினை பிற்பகலில் கிராம பெரியவர்களுக்கு தெரிவித்தார். கிராம பெரியவர்கள் அன்று மாலை கிராம தொடக்கப் பள்ளி மைதானத்தில் நடைபெற்ற சாலிசி நீதிமன்றத்தில், சைலேந்திரா தனது மத அடையாளத்தை சரிபார்க்க வலுக்கட்டாயமாக நிர்பந்திக்கப்பட்டார். அவர் விருத்தசேதனம் செய்யப்படாத நிலையில் இருந்ததனைக் கண்டறிந்த பிறகு, அவரை கடுமையாக தாக்கினர். சாலிசி நீதிமன்றத்தின் இருபத்தி இரண்டு அரசியல் மற்றும் மதத் தலைவர்கள், அன்சாரி ஷேக்குடன், சைலேந்திரா ஒரு முஸ்லிம் பெண்ணை திருமணம் செய்த குற்றவாளி என்று அறிவித்து அவருக்கு மரண தண்டனை வழங்கினார்கள். அவரது கைகளும் கால்களும் கட்டப்பட்டிருந்தன. அவர் வாயை மூடிக்கொண்டு அருகிலுள்ள சணல் வயலுக்கு அழைத்துச் செல்லப்பட்டார், அங்கு மரணதண்டனை நிறைவேற்றுபவர்கள் நான்கு பேரால் அவரது தொண்டை வெட்டப்பட்டது.

சைலேந்திர பிரசாத் ஜூலை 14 அன்று இரவு காணாமல் போனதால், அவர் மனைவி முனிரா பீபி அவர் மும்பைக்கு தப்பிச் சென்றதாக நம்பினார். அவளுடைய தந்தை அவளுடைய அம்மா மற்றும் சகோதரரிடமிருந்து சைலேந்திர பிரசாத்தின் உடைமைகள் எல்லாவற்றையும் வைத்திருந்தார். ஜூலை 27 அன்று, முனிரா தனது கணவரின் நிலையினை மற்ற கிராம மக்களிடமிருந்து அறிந்ததும், அவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் பெர்ஹாம்பூர் காவல் நிலையத்திற்கு முறையான புகார் அளிக்க வந்தார். ஜூலை 17 அன்று பத்து நாட்களுக்கு முன்பு சணல் வயல்களில் குன்னி பைக்குள் அடையாளம் தெரியாத ஒருவரின் தலை துண்டிக்கப்பட்ட உடலை காவல் துறையினர் ஏற்கனவே கண்டுபிடித்தனர். ஜூலை 28 அன்று, கிராமத்தில் சோதனை நடத்திய காவல் துறை அதிகாரியினர், சாலிசி நீதிமன்றத்திற்கு தலைமை தாங்கிய மூன்று பேரை கைது செய்தனர்.

சான்றுகள் தொகு

  1. "Kangaroo court executes husband". Kolkata: The Telegraph. August 1, 2008. http://www.telegraphindia.com/1080801/jsp/frontpage/story_9631281.jsp. 
  2. "Courts outside pale of law". Kolkata: The Telegraph. August 1, 2008. http://www.telegraphindia.com/1080801/jsp/bengal/story_9631273.jsp. 
  3. "RULE OF FAITH IN MATTERS OF THE HEART". Kolkata: The Telegraph. August 19, 2008. http://www.telegraphindia.com/1080819/jsp/opinion/story_9704267.jsp. 
  4. "Kangaroo court 'executes' man for marrying outside religion". New Delhi: Outlook. August 1, 2008 இம் மூலத்தில் இருந்து மார்ச் 30, 2010 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20100330165806/http://news.outlookindia.com/item.aspx?594712. 
  5. "Youth killed for marrying Muslim". 31 July 2008. 
  6. "25-yr-old widow regrets trip". Kolkata: The Telegraph. August 2, 2008. http://www.telegraphindia.com/1080802/jsp/siliguri/story_9635970.jsp. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=2008_முர்சிதாபாத்_கொலை&oldid=3285946" இலிருந்து மீள்விக்கப்பட்டது