2011 நைரோபி குழாய்த்தொடர் தீ விபத்து

2011 நைரோபி குழாய்த்தொடர் தீ விபத்து செப்டம்பர் 12, 2011 அன்று கென்யாவின் தலைநகர் நைரோபியில் குழாயிலிருந்து கசிந்த எரிபொருள் எண்ணெய் வெடித்து ஏற்பட்டதாகும்.[1] ஏறத்தாழ 100 நபர்கள்இந்தத் தீ விபத்தில் கொல்லப்பட்டதுடன் 116 நபர்கள் பல்வேறு நிலை தீப்புண்களுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.[2] இத்தகைய தீ விபத்து கென்யாவில் முன்னரே 2009ஆம் ஆண்டிலும் மோலோ என்னுமிடத்தில் நடந்துள்ளது; அப்போது 133 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.[1]

காரணங்கள் தொகு

நைரோபியின் தொழிற்பேட்டையான லுங்கா லுங்கா பகுதியில் உள்ள ஓர் எரிபொருள் தொட்டியும் அரசுத்துறை நிறுவனமான கென்யா பைப்லைன் கம்பனிக்கு உரிமையான தொட்டியுடன் இணைந்த குழாய்த்தொடர் அமைப்பிலும் எண்ணெய் கசிய துவங்கியது.[3] இந்தக் குழாய்த்தொடரை அடுத்துள்ள மக்கள் நெருக்கமுள்ள சினாய் குடிசைப்பகுதியில் உள்ள மக்கள் கசியும் எண்ணெயை சேகரிக்கத் திரண்டனர். காலை பத்துமணி வாக்கில் பெரும் வெடிவிபத்து ஏற்பட்டு சினாய் பகுதி முழுவதும் தீ பரவியது.

வெடிவிபத்தின் காரணங்கள் முழுமையாக அறியப்படாவிடினும் சில அறிக்கைகளின்படி தூக்கியெறியப்பட்ட சிகரெட் துண்டினால் தீ மூண்டிருக்கலாம் [4][5] அல்லது அருகாமையிலிருந்த குப்பைகள் தீயிடலிலிருந்து காற்றின் திசைமாற்றத்தால் தீக்கொழுந்துகள் இங்கு எட்டியிருக்கலாம்என கருதப்படுகிறது.[6]

எரிசக்தி அமைச்சர் கிரைட்டு முருங்கி குழாய்த்தொடரின் ஓரதர் அழுத்தம் தாங்காது எண்ணெயை சாக்கடையில் வழியவிட வைத்தது என்று கூறினார்.[7] கேபிசியி்ன் மேலாண் இயக்குனர் செலெஸ்ட் கிளின்டா இரு குழாய்த்தொடர்களிலிருந்து கசிவு ஏற்பட்டதாகவும் பொறியாளர்கள் பாய்ம அழுத்தத்தைக் குறைத்தபோதும் அதற்கு முன்னரே எண்ணெய் சாக்கடையில் கசியத் தொடங்கியதாகவும் கூறினார்.[7]

உடலூறு உற்றவர் தொகு

துவக்கநிலை காவல்துறை மதிப்பீடுகள் இறந்தவர்களின் எண்ணிக்கையை நூற்றுக்கும் கூடுதலாக அறிவிக்கின்றன;[3] மேலும், குறைந்தது116 பேர்கள் தீப்புண்களுடன் மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர்.[3] உடல்கள் முழுவதுமாக கருகிவிட்டமையாலும் சில சடலங்கள் அருகிலுள்ள சிற்றோடையில் அடித்துச் செல்லப்பட்டதாலும் இறந்தவர்களின் எண்ணிக்கையை சரியாக மதிப்பிடுவது கடினமாக உள்ளது.[8] கென்யாவின் செஞ்சிலுவைச் சங்கத்தின் பேரிடர் இடர்தீர்ப்பு அதிகாரி உடலூறு உற்றவர்களுக்கு சங்கம் கருத்துரை வழங்குவதுடன் காணாமற் போனவர்களின் பட்டியலோடு ஒப்பிட்டு இறந்தவர்களின் எண்ணிக்கையை சரிபார்க்கும் என்று கூறினார். மேலும் அவர் கூறுகையில் மருத்துவமனைகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட சடலங்கள் உருத்தெரியாவண்ணம் கருகிவிட்டமையால் மரபணு சோதனைகள் மூலமே அடையாளம் காணவியலும் என்றார்.தி[9]

திடீரென்று ஏற்பட்ட மருத்துவ நெருக்கடியை சமாளிக்க போதிய மருந்துகள், உணவு மற்றும் மருத்துவ பணியாளர்கள் பற்றாக்குறையால் மருத்துவமனைகள் திணறின.[2][10] கென்யாவின் தேசிய மருத்துவமனையில் 22 தீப்புண்ணிற்கான படுக்கைகளே இருந்தன[10] நீண்டகால சிகிட்சை அளிக்க குருத்திக்கொடை வழங்க சிறப்பு கூடாரங்கள் எழுப்பப்பட்டன.

பொறுப்பேற்றல் தொகு

இந்தத் தீ விபத்திற்கு குழாய்த்தொடரை இயக்கும் கென்யா பைப்லைன் கம்பனியின் மேலாண் இயக்குனரோ எரிசகதி அமைச்சரோ பொறுப்பேற்க மறுத்துள்ளனர்.[5] கிரைட்டு முருங்கி துவக்கத்தில் பாதிக்கப்பட்டோருக்கு கேபிசி ஈட்டுத்தொகை வழங்கும் என்று கூறினாலும் "தான் பொறுப்பில்லை" என்பதால் ஈட்டுத்தொகை வழங்கவியலாது என கேபிசி மறுத்துள்ளது.[11]

2008ஆம் ஆண்டில் கேபிசி இக்குழாய்களுக்கு அடுத்திருந்த குடிசைவாசிகளை வெளியேற ஆணையிட்டபோதும் அவர்கள் காலி செய்ய மறுத்தனர்.[12] மாணவர்களின் எதிர்ப்பை அடுத்து ஓர் பல்துறை அமைச்சர் குழாம் போதிய நிதி கிடைக்கும்போது மாற்றிடம் வழங்க பெயர்களை சேகரிக்கும் பணியில் ஈடுபடுத்தப்பட்டது.[13] கேபிசி குடிசைவாசிகளிடம் விழிப்புணர்வை அதிகரிக்க தனது பணியாளர்களை அனுப்பியதுடன் அப்பகுதியில் குழிகள் வெட்டுவதை தடுக்க வேண்டியதன் தேவையையும் அறிவுறித்தியிருந்தது.[13]

அரசியல் தாக்கம் தொகு

கென்யாவின் பிரதமர் ராய்லா ஒடிங்காவும் துணை குடியரசுத்தலைவர் கலோன்சோ முசுயோகாவும் சம்பவ இடத்தை பார்வையிட்டு பல்வேறு மருத்துவமனைகளுக்கு வருகை புரிந்து பாதிக்கப்பட்டோருக்கும் துயரடைந்த உறவினர்களுக்கும் ஆறுதல் கூறினர். குடியரசுத் தலைவர் முவாய் கிபாக்கியும் கென்யா தேசிய மருத்துவமனையில் சிகிட்சை பெறும் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்தார்.[2]

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் பான் கி மூன் விபத்தில் ஊறு உற்றவர்களுக்கு வருத்தமும் ஆறுதலும் தெரிவித்து அவர்களது விரைவான குணமடைதலுக்கு வாழ்த்து கூறியுள்ளார்.[9] ஐக்கிய அமெரிக்காவின் கென்யாவிற்கான தூதர் ஸ்காட் கிரேஷன் விபத்தின்போது உள்ளூர் மக்கள் காட்டிய துணிச்சலையும் காப்பாற்ற விரைந்த பணியாளர்களையும் பாராட்டியுள்ளார்.[9] பன்னாட்டு மன்னிப்பு அவை-கென்யா விபத்தில் இழப்பிற்கான பொறுப்பு குடிசை மக்களுக்கு மாற்றிடம் வழங்காத அரசு அதிகாரிகளைச் சேரும் என குற்றம் சாட்டியுள்ளது.[7]

நிகழ்விற்கு பிறகான செயலாக்கம் தொகு

தேசிய சுற்றுச்சூழல் மேலாண்மை ஆணையம் (NEMA) 1999 சட்டப்படி செயல்படாத கேபிசி மீது நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அந்தச் சட்டத்தில் கூறியபடி கசிவு அளவுகளை கட்டுப்படுத்த முயற்சிகள் செயலாக்கப்பட்டிருந்தால் இவ்வாறு எண்ணெய் சாக்கடைக்கு வழிந்தோடியிருக்காது எனவும் கூறியுள்ளது.[11] தாங்கள் போதிய அளவில் செயல்பட்டதாக கேபிசியின் கூற்றை ஆணையம் ஏற்க மறுத்து 2003 சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீடு மற்றும் சுற்றுச்சூழல் கண்காணிப்பு கட்டுப்பாட்டு விதிகளின் கீழான கண்காணிப்பு அறிக்கையை பெறவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளது.[11] குழாய்த்தொடரை அடுத்த பகுதிகளை மக்கள் கூட்டமின்றி வைத்திருப்பது கேபிசியின் கட்டாயத் தேவையானபோதும் கடந்த 20 ஆண்டுகளாக இந்தக் குடிசைகள் இங்குள்ளன.[11] மேலும் கேபிசி சாக்கடைநீர் கலக்கும் நைரோபி ஆற்றின் வழியில் பயிர் மற்றும் உயிரினங்களுக்கான சுற்றுச்சூழல் தாக்கம் குறித்தும் செயல்படவேண்டும் என ஆணையம் வலியுறுத்தி உள்ளது.[11][14]

நிகழ்விற்கு முன்பான எச்சரிக்கைகள் தொகு

2009ஆம் ஆண்டிலேயே உள்ளூர் நாளிதழ் "டெய்லி நேஷனில்" சினாய்ப் பகுதி குடிசைகள் குழாய்த்தொடருக்கு வெகு அருகாமையில் இருப்பது எந்நேரமும் இத்தகைய விபத்து நிகழ சூழிடர் கொண்டுள்ளதாக இதழியலாளர் ஜான் கிராச்சு எழுதியுள்ளார்.[7][15] எரிசக்தி அமைச்சகத்திற்கான நிரந்தர செயலாளர், பாட்றிக் நியோக்,[16] கேபிசி தனது குழாய்களை சீர்படுத்த ஆணையிட்டபோதும் இதற்கான நிதியை நிதி அமைச்சகம் வழங்கவில்லை எனக் கூறப்படுகிறது.[15]

மேற்கோள்கள் தொகு

 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


  1. 1.0 1.1 Jeffrey Gettleman (September 12, 2011). "Scores Dead in Kenyan Pipeline Fire". The New York Times. http://www.nytimes.com/2011/09/13/world/africa/13kenya.html. பார்த்த நாள்: September 12, 2011. 
  2. 2.0 2.1 2.2 "116 pipeline fire survivors in hospital". 12 September 2011. http://www.capitalfm.co.ke/news/2011/09/12/116-pipeline-fire-survivors-in-hospital/. 
  3. 3.0 3.1 3.2 "Kenya fire: Nairobi pipeline blaze 'kills 100'". BBC News. September 12, 2011. பார்க்கப்பட்ட நாள் September 12, 2011.
  4. "Another disaster waiting to happen in Kenya". 14 September 2011. http://www.standardmedia.co.ke/InsidePage.php?id=2000042798&cid=4. [தொடர்பிழந்த இணைப்பு]
  5. 5.0 5.1 "Nairobi slum fire: Kenya officials deny blame". 13 September 2011. http://www.bbc.co.uk/news/world-africa-14904634. 
  6. "Scores killed as slum pipeline bursts again". 14 September 2011. http://www.smh.com.au/world/scores-killed-as-slum-pipeline-bursts-again-20110913-1k7to.html. 
  7. 7.0 7.1 7.2 7.3 "Blame-Game Follows Nairobi Pipeline Blast". 13 September 2011. http://www.voanews.com/english/news/africa/Blame-Game-Follows-Nairobi-Pipeline-Blast-129753688.html. 
  8. "120 burned to death in Kenya pipeline fire". 12 September 2011. http://www.telegraph.co.uk/news/worldnews/africaandindianocean/kenya/8758340/120-burned-to-death-in-Kenya-pipeline-fire.html. 
  9. 9.0 9.1 9.2 "UN chief expresses sadness over Kenya's tragedy". 13 September 2011 இம் மூலத்தில் இருந்து 28 மார்ச் 2012 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120328053521/http://www.arabstoday.net/en/un-chief-expresses-sadness-over-kenyas-tragedy.html. 
  10. 10.0 10.1 "Report warns hospitals not equipped for fire disasters". 13 September 2011. http://www.nation.co.ke/News/Report+warns+hospitals+not+equipped+for+fire+disasters+/-/1056/1235938/-/et2xk9z/-/. 
  11. 11.0 11.1 11.2 11.3 11.4 "Sinai: NEMA puts Pipeline on the spot". 15 September 2011. http://www.capitalfm.co.ke/news/2011/09/15/sinai-nema-puts-pipeline-on-the-spot/. 
  12. Kimonye, Mary (15 September 2011). "Why slum disaster was avoidable". Business Daily. http://www.businessdailyafrica.com/Opinion+++Analysis/Why+slum+disaster+was+avoidable/-/539548/1236376/-/8ctqw5/-/index.html. பார்த்த நாள்: 15 September 2011. 
  13. 13.0 13.1 Jami Makan; John Ngirachu (2 February 2009). "The fire next time: Slum courts doom". Daily Nation. http://www.nation.co.ke/News/-/1056/523822/-/u1ulyg/-/index.html. பார்த்த நாள்: 15 September 2011. 
  14. "100 killed in Nairobi fuel fire". 13 September 2011. http://www.freedominspeech.org/component/content/article/318-100-killed-in-nairobi-fuel-fire.html. 
  15. 15.0 15.1 "What Government and KPC Should Do to Avert Future Tragedies in the Wake of Mukuru-Sinai Slum Disaster". 16 September 2011. http://allafrica.com/stories/201109160143.html. 
  16. "Office of public communications:Partick Nyoike". Archived from the original on 21 செப்டம்பர் 2010. பார்க்கப்பட்ட நாள் 17 செப்டம்பர் 2011. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help); Unknown parameter |date retrieved= ignored (help)