2012 சன சத்தியக்கிரகம்

2012 சன சத்தியக்கிரகம் என்பது பழங்குடி மக்கள், நிலமற்ற தொழிலாளர்களுக்கு நில வளங்கள் உரிமைகள் வேண்டி இந்தியாவில் முன்னெடுக்கப்பட்டு வரும் நெடுந்தூர நடைப் போராட்டம் ஆகும். நெடுங்கால குமுகக் கட்டமைப்பிற்கும் திட்டமிடலுக்கும் பின்பு 2012 அக்டோபரில் மூன்றாம் திகதி குவாலியர், மத்தியப்பிரதேசத்தில் இருந்து இந்தியாவின் தலைநகரான புது தில்லி வரை நடைப் போராட்டம் நடைபெறுகிறது. இந்தப் போராட்டத்தில் சுமார் 30 000 - 50 000 வரையான பழங்குடி, நிலமற்ற மக்கள் பங்கெடுக்கிறார்கள். இந்த நடைப் போராட்டத்தை இந்த விடயங்கள் தொடர்பாக நெடுங்காலம் இயங்கிவரும் எக்ரா பரிசாட் என்ற அரச சார்பற்ற சமூக இயக்க ஒன்றியத்தால் முன்னெடுக்கப்படுகிறது.

2012 சன சத்தியக்கிரகம், between Gwalior and Agra

நோக்கங்கள் தொகு

சன சத்தியக்கிரகம் பின்வரும் நோக்கங்களைக் கொண்டுள்ளதாக ஒழுங்கமைப்பாளர்கள் அறிவித்துள்ளார்கள்.[1]

  • தேசிய நில சீர்திருத்த சட்டத்தை நிறைவேற்றல்
  • பெண்களுக்கான நிலச் சொத்து உரிமைகளுக்கான சட்டங்களை உறிதிப்படுத்தல்.
  • நிலம், நீர், காடு, கனியங்கள் போன்ற இயற்கை வழக் கைமாறல்கள் அவை அமைத்துள்ளது, அல்லது அதில் தங்கி இருக்கும் குமுகங்களினதும் தனிநபர்களினதும் முழுப் புரிதலின் பின்பான இணக்கத்தோடேயே நடைபெறுவதை உறுதிப்படுத்தல்.
  • ஏழைகளுகுச் சார்பான நில மற்றும் வளங்கள் சார்பான திட்டங்கள் நிறைவேற்றப்படாது இடத்து அது தணிக்கப்பட வேண்டிய குற்றமாக பார்க்கப்படல்.

மேற்கோள்கள் தொகு

  1. JAN SATYAGRAHA 2012[தொடர்பிழந்த இணைப்பு]

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=2012_சன_சத்தியக்கிரகம்&oldid=3230380" இலிருந்து மீள்விக்கப்பட்டது