2012 நிகழ்வு
2012 நிகழ்வு (2012 phenonenon) உலகின் பேரழிவு அல்லது பெரும் மாற்றம் 2012ஆம் ஆண்டில் நிகழலாம் என நிலவும் நம்பிக்கைகளையும் கருத்துக்களையும் குறிக்கிறது.[1][2] இந்த சோதிடங்கள் முதன்மையாக மாயா நாட்காட்டியில் 5,125 ஆண்டுகள் கழித்து திசம்பர் 21 அல்லது 23,2012ஆம் ஆண்டில் முடிவதைக் கொண்டு எழுந்துள்ளன.மெக்சிகோ பகுதியில் வாழ்ந்திருந்த மாயா நாகரீகத்தில் உலகம் துவங்கியதாக அவர்கள் கருதிய நாளிலிருந்து தொடர்ந்த நாட்காட்டி முறை (Long Count calendar) கடைபிடிக்கப்பட்டது. இதனைக் கொண்டு தொன்மவியல் வானிலையாளர்கள்,மத பொழிப்புரையாளர்கள், எண்கணிதவியலாளர்கள் மற்றும் புறப்புவி ஆய்வாளர்கள் என ஒவ்வொருவரும் ஒரு நம்பிக்கை அல்லது கருத்தை பரப்பி வருகின்றனர்.
புதிய காலம் விரிவுரையாளர்கள் பேரழிவு ஏற்படும் என்பதை மறுத்து அந்த நாளில் நேர்மறையான மாற்றம் நிகழலாம் எனவும் 2012 புதிய சகாப்தத்தின் துவக்கம் என்றும் கொள்கை வகுக்கின்றனர்.[3] இத்தகைய எண்ணங்களும் கருத்துக்களும் பல புத்தகங்கள்,தொலைக்காட்சி விவரணப்படங்கள்,இணைய தளங்கள் மூலம் உலகெங்கும் பரவியுள்ளது.
மாயா ஆராய்ச்சியாளர்கள் மாயா நாட்காட்டி 2012இல் முடிகிறது என்பது மாயா வரலாற்றை தவறாக கணிக்கிறது என்று வாதிக்கிறார்கள்.[2][4] இன்றைய மாயாவினருக்கு, 2012 முற்றிலும் தொடர்பில்லாதது, பழைமைவாதிகளுக்கு இதனைக் குறித்த மூல செய்திகளோ கிடைப்பதில்லை அல்லது முரண்பட்டுள்ளது.இதனால் அவர்களிடையே இந்த நாளைக்குறித்த ஓர் பரவலான இணக்கமான புரிதல் இல்லை.[5] 2012ஆம் ஆண்டு உலகின் பேரழிவுக்கான காரணங்களாக பகுதி அறிவியலாளர்கள் கூற்றுக்களை (கருங்குழி ஒருங்கிணைப்பு,தடுமாறும் கிரகமொன்று புவி மீது மோதல்,துருவங்கள் மாற்றங்கள்,சூரியனின் தீப்பிழம்புகள்) அறிவியல் வல்லுனர்கள் மறுத்துள்ளனர்.பெரும்பாலானவை அடிப்படை இயல்பியல் விதிகளுக்குப் புறம்பானவை.[6]
இந்த ஆண்டு பேரழிவு நிகழுமென அச்சமடைந்துள்ள பொதுமக்களின் நம்பிக்கையின் பேரில் ரோலாண்டு எம்மெரிக் இயக்கத்தில் 2012(திரைப்படம்) வெளியாகியுள்ளது.மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஊட்டுவதாக இல்லாத மனிதம் தொடர்ச்சி கழகம் மூலம் இந்நிறுவனத்தால் வெளியிடப்பட்ட விளம்பர நிகழ்படம் அறிவியலாளர்களாலும் பகுத்தறிவாளர்களாலும் பெரிதும் விமரிசிக்கப் பட்டது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sitler 2006, Defesche 2007
- ↑ 2.0 2.1 G. Jeffrey MacDonald (March 27, 2007). "Does Maya calendar predict 2012 apocalypse?". USA Today. http://www.usatoday.com/tech/science/2007-03-27-maya-2012_n.htm. பார்த்த நாள்: 2009-10-14.
- ↑ காட்டாக,நியூயார்க் டைம்ஸ் இதழில் வெளியான விவாதங்களையும் நேர்முகங்களையும் காணவும்(Anastas 2007).
- ↑ David Webster (September 25, 2007). "The Uses and Abuses of the Ancient Maya" (PDF). The Emergence of the Modern World Conference, Otzenhausen, Germany: Penn State University. Archived from the original (pdf) on 2009-11-09. பார்க்கப்பட்ட நாள் 2009-10-14.
- ↑ Aveni 2009
- ↑ பேரழிவு மூடநம்பிக்கைகள் நேசனல் ஜியாக்ரபி செய்திதளம்
உசாத்துணைகள்
தொகு- Sitler, Robert K. (February 2006). "The 2012 Phenomenon: New Age Appropriation of an Ancient Mayan Calendar". Novo Religio: The Journal of Alternative and Emergent Religions (Berkeley: University of California Press) 9 (3): 24–38. doi:10.1525/nr.2006.9.3.024. பன்னாட்டுத் தர தொடர் எண்:1092-6690. இணையக் கணினி நூலக மையம்:357082680.
- Defesche, Sacha (2007). W.J. Hanegraaff (ed.). 'The 2012 Phenomenon': A historical and typological approach to a modern apocalyptic mythology. University of Amsterdam.
{{cite book}}
: CS1 maint: location missing publisher (link) - Aveni, Anthony (2009). The End of Time: The Maya Mystery of 2012. Colorado: University Press of Colorado. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0870819615.
- Barkun, Michael (2006). A Culture of Conspiracy: Apocalyptic Visions in Contemporary America. Comparative studies in religion and society series, no. 15 (1st pbk print ed.). Berkeley: University of California Press. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0-520-24812-0. இணையக் கணினி நூலக மைய எண் 255948700.
மேலும் படிக்க
தொகு- பூமி 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு??? பரணிடப்பட்டது 2010-01-19 at the வந்தவழி இயந்திரம்
- Synthia Andrews (2008). The Complete Idiot's Guide to 2012. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 1592578039.
- Gregory Bernard Banks (2009). 2012: Seeking Closure. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-0982436103.
- Gregg Braden; et al. (2007). The Mystery of 2012: Predictions, Prophecies and Possibilities. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 978-1591796114.
{{cite book}}
: Explicit use of et al. in:|author=
(help) - David Caruson (2008). 2013 Oracle: Ancient Keys to the 2012 Awakening. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781571781949.
புற இணைப்புகள்
தொகு- டிசம்பர்21-2012க்கான இணையதளம்
- பூமி 2012 டிசம்பர் 21 இல் முடிவுக்கு??? பரணிடப்பட்டது 2010-01-19 at the வந்தவழி இயந்திரம்
- 2012hoax.org பரணிடப்பட்டது 2012-01-14 at the வந்தவழி இயந்திரம்: scientists and amateur astronomers on the 2012 hoax.
- The History Channel, 2012 program listings and video clips.
- 2012 Articles, Books and Websites Compiled by TheCityEdition.com
- Archaeoastronomy, Information on equinoxes, precession and other concepts.
- List of links to articles about 2012 compiled by FAMSI (the Foundation for the Advancement of Mesoamerican Studies, Inc)