2013 பாகிஸ்தான் நிலநடுக்கம்
2013 பாகிஸ்தான் நிலநடுக்கம் என்பது Mw 7.7 என்ற அளவில், 66 கிலோ மீட்டர் அளவில் நிலநடுக்க மையம் கொண்டு பலுசிஸ்தானின் அவரான் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கம் ஆகும்.[2] இதில் குறைந்தது 370 பேர் உயிரிழந்தனர்.[1]
நாள் | 24 செப்டம்பர் 2013 |
---|---|
தொடக்க நேரம் | 11:29:48 UTC (16:29:48 பாகிஸ்தான் திட்ட நேரம்) |
நிலநடுக்க அளவு | 7.7 Mw |
ஆழம் | 20.0 km (12.4 mi) |
நிலநடுக்க மையம் | 27°00′00″N 65°30′50″E / 27.000°N 65.514°E |
பாதிக்கப்பட்ட பகுதிகள் | பாக்கித்தான் இந்தியா ஓமான் |
பின்னதிர்வுகள் | 10 |
உயிரிழப்புகள் | 370 பேர் இறப்பு[1] |
நிலநடுக்கம் பற்றிய தகவல்கள்
தொகுஅமெரிக்க புவியியல் ஆய்வு அமைப்பு நிலநடுக்கம் 24 செப்டம்பர் 2013 அன்று 11:29:48 UTC என்ற நேரத்தில் 27.000°N, 65.514°E என்ற இடத்தில் நடைபெற்றதாக அறிவித்தது. இந்நிலநடுக்கமானது 20 கிலோமீட்டர்கள் (12 mi) ஆழத்தில் ஏற்பட்டது. பாகிஸ்தானின் தேசிய நிலநடுக்க ஆய்வு மையம் Mw 7.7 அளவில் 16:29:49 பா.தி.நே (UTC+5:00) என்ற நேரத்தில் 27.09°N, 65.61°E என்ற இடத்தில் 10 கிமீ ஆழத்தில் ஏற்பட்டதாக அறிவித்தது.[3] இந்நிலநடுக்கம் கிட்டத்தட்ட ஒரு நிமிடம் நீடித்ததாகவும் கராச்சி, ஐதராபாத், இஸ்லாமாபாத், லர்கானா, லாகூர் ஆகிய நகரங்களில் உள்ளோர் கூறப்படுகிறது.[4][4] இந்த நடுக்கம் இந்தியாவின் டெல்லி|டெல்லியிலும்]] உணரப்பட்டது. சில கட்டங்கள் ஆடின.[5] மேலும், மஸ்கட், ஓமன்—இந்நகரங்கள் நிலநடுக்க மையத்திலிருந்து 800 கிமீ தொலைவிலிருந்தும் அங்கும் மிதமான அதிர்வுகள் உணரப்பட்டன.[6]
விளைவுகள்
தொகுஇந்நிலநடுக்கத்தால் 370 பேர் உயிரிழந்தனர். நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[1] அமெரிக்க புவியியல் ஆய்வு மையத்தின் PAGER அறிக்கைபடி, சிவப்பு நிற எச்சரிக்கை தரப்பட்டது (அதாவது 1,000 முதல் 10,000 இறப்புகள் ஏற்பட 35% வாய்ப்பிருக்கிறது; 10,000 முதல் 1,00,000 வரை உயிரிழப்பு ஏற்பட 27% வாய்ப்பிருக்கிறது) ஆரஞ்சு நிற பொருளாதார எச்சரிக்கையும் தரப்பட்டது. (அதாவது US$100 மில்லியன்-$1 பில்லியன் வரை இழப்பு ஏற்பட 35% வாய்ப்பிருக்கிறது; US$1–10 பில்லியன் வரை இழப்பு ஏற்பட 26% வாய்ப்பிருக்கிறது.)[7] இந்த நிலநடுக்கத்தால் கவடார் நகரின்dsghhffchh கரையிலிருந்து 1.0 கிமீ தொலைவில் புதிய தீவு கடலில் தோன்றியுள்ளது.[8]
மேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 1.2 "At least 208 killed in Balochistan earthquake". Dawn. 25 September 2013. பார்க்கப்பட்ட நாள் 25 September 2013.
- ↑ This article incorporates public domain material from the United States Geological Survey document: "M7.7 – 66km NNE of Awaran, Pakistan".
{{cite web}}
: CS1 maint: postscript (link) - ↑ "Latest Earthquakes". Pakistan Meteorological Department—National Seismic Monitoring Centre, KARACHI. Archived from the original on 29 அக்டோபர் 2015. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
- ↑ 4.0 4.1 "Quake in southern Pakistan kills 2, damages houses". The Hindu. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
- ↑ "Powerful earthquake strikes Pakistan's Balochistan". BBC News. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
- ↑ Vaidya, Sunil. "Tremors from Pakistan quake felt in Muscat". gulfnews.com. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
- ↑ "M7.8 – 69km NNE of Awaran, Pakistan (BETA)". Earthquake Hazards Program. United States Geological Survey. Archived from the original on 26 செப்டம்பர் 2013. பார்க்கப்பட்ட நாள் 24 September 2013.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ Pakistan quake island off Gwadar 'emits flammable gas