2017 மகளிர் அணிவகுப்பு
இக் கட்டுரை இலக்கணப் பிழை, எழுத்துப்பிழை, இணைப்பு, தொனி, வடிவமைப்பு ஆகிய சிக்கல்களைக் கொண்டுள்ளது. |
மகளிர் அணிவகுப்பு (2017 Women's March )[1] [2] [3] அமெரிக்கக் குடியரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் பதவியேற்ற மறுநாள் சனவரி 21, 2017 அன்று நடந்த போராட்டத்தினைக் குறிப்பதாகும். டிரம்பின் பல அறிக்கைகள் பெண்களுக்கு எதிராகவோ அல்லது பெண்களை அடக்குவதனைப் போன்று உள்ளது எனக் கருதப்பட்டதால் இந்த அணிவகுப்பு நடைபெற்றது. [1] இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய ஒற்றை நாள் போராட்டமாகப் பார்க்கப்படுகிறது .[4] பெண்களின் உரிமைகள், குடிவரவு சீர்திருத்தம், சுகாதாரச் சீர்திருத்தம், இனப்பெருக்க உரிமைகள், சுற்றுச்சூழல், நங்கை, நம்பி, ஈரர், திருனர் உரிமைகள், இன சமத்துவம், மத சுதந்திரம், தொழிலாளர்களின் உரிமைகள் மற்றும் சகிப்புத்தன்மை ஆகிய காரணத்திற்காக இது நடைபெற்றது.[5] எனினும் பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உாிமைகள் மறுக்கப்பட்ட போது அவா்கள் துணிவுடன் களத்தில் இறங்கிப் போராடினா். போராடும் பெண்களின் எண்ணிக்கை அதிகமானதால் போராட்டம் பொிதானது. இந்தப் போராட்டதின் அமைப்பாளர்களின் கூற்றுப்படி, "புதியதாகப் பதவியேற்ற அரசிற்கு முதல் நாளில் தைரியமான செய்தியை அனுப்புவதே எங்கள் குறிக்கோளாக இருந்தது என்றனா், மேலும் பெண்களின் உரிமைகளும் மனித உரிமைகள் தான் என்று உலகிற்கு எடுத்துக்காட்ட விரும்பினோம் என்று கூறினார்". [6]
இதன் முக்கிய ஆர்ப்பாட்டம் வாசிங்டன், டிசியில் நடைபெற்றது, இது பெண்களுக்குக் கிடைக்க வேண்டிய உாிமைக்கான போராட்டம் என்று அறியப்பட்டது. இப்போராட்டம் நியாயமானதாக இருந்ததால்,ஆதரவு பெருகியது. உலகெங்கிலும் பல ஊர்வலங்கள் இது தொடர்பாக நடைபெற்றன. வாசிங்டனில் நடைபெற்ற அணிவகுப்பு யூடியூப், முகநூல் மற்றும் டுவிட்டரில் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது. [7] இதில் 470,000 க்கும் அதிகமான மக்கள் கலந்துகொண்டனர். அமெரிக்காவில் நடந்த அணிவகுப்புகளில் 3,267,134 மற்றும் 5,246,670 பேர் பங்கேற்றனர், [8] இது அமெரிக்க மக்கள்தொகையில் சுமார் 1.0 முதல் 1.6 சதவீதம் பேர் ஆகும். உலகளாவியப் பங்கேற்பு ஏழு மில்லியனுக்கும் அதிகமாக இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது. [9] அமெரிக்காவில் குறைந்தது 408 அணிவகுப்புகளும், [9] மற்ற நாடுகளில் 168 அணிவகுப்புகள் நடத்தப்படும் எனத் திட்டமிடப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. [10] அணிவகுப்புகளுக்குப் பிறகு, உலகெங்கிலும், ஏழு கண்டங்களிலும், கனடாவில் 29, மெக்சிகோவில் 20, மற்றும் அண்டார்டிகாவில் 1,என மொத்தம் சுமார் 673 அணிவகுப்புகள் நடந்ததாக அமைப்பாளர்கள் தெரிவித்தனர். [11] மக்கள் அமைதியாகத் தங்களது போராட்டங்களை நடத்தினர். டிசி, சிகாகோ, லாஸ் ஏஞ்சல்ஸ், நியூயார்க் நகரம் அல்லது சியாட்டிலில் அணிவகுப்பில் கலந்து கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமானதால் யாரும் கைது செய்யப்படவில்லை, அங்கு மொத்தம் இரண்டு மில்லியன் மக்கள் கலந்துகொண்டனர். "குடிசார் உரிமைகள் இயக்கம் வன்முறையற்ற சித்தாந்தத்தை கடைப்பிடிக்க விரும்புவதாக" இந்த அம்மைப்பின் இணையதளம் கூறுகிறது. [12]
அமைப்பாளர்கள்
தொகுநவம்பர் 9, 2016 அன்று, அமெரிக்கக் குடியரசுத் தலைவராக டோனால்ட் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் நாள், டிரம்பின் தேர்தல் பிரச்சாரம் மற்றும் அரசியல் கருத்துக்களுக்கு எதிர்வினையாகவும் குடியரசுத் தலைவர் வேட்பாளர் இலரியின் தோல்விக்கு ஹவாய் நாட்டைச் சேர்ந்த, தெரசா ஷூக் முகநூல் நிகழ்வை உருவாக்கி, நண்பர்களுடன் வாசிங்டனுக்கு அணிவகுத்துச் சென்று எதிர்ப்பு தெரிவித்தார். எசி ஆர்மன், ஃபான்டைன், ஃபான்டைன் பியர்சன்(ஒரு நியூயார்க் அலங்கார நிபுணர்), ப்ரீன் பட்லர் மற்றும் சிலர் உருவாக்கிய இதே போன்ற முகநூல் பக்கங்கள் ஆயிரக்கணக்கான பெண்கள் விரைவாக அணிவகுப்பில் சேர வழிவகுத்தது. [13] ஹார்மோன், பியர்சன் மற்றும் பட்லர் வாசிங்டனில் உத்தியோகபூர்வ மகளிர் அணிவகுப்பைத் தொடங்கி,ஒருங்கிணைக்க முடிவு செய்தனர்.
சர்வதேச அளவில்
தொகுஓஸ்லோ, நோர்வேயில் பிரிட் ஆக்னசு சவேரி,[14][15] டொரான்டோ, கனடாவில் மரிசா மெக் டசுனேவும், கரேன் ஓல்சன், ஜெனிவா, சுவிட்சர்லாந்து; [16] கெர்ரி ஹாகெர்டி, இலண்டன், ஐக்கிய இராச்சியம்; [17] ரெபேக்கா டர்ன்போ, சிட்னி, ஆத்திரேலியா; [18] மற்றும் அமெரிக்காவில் பிரேன் பட்லர் மற்றும் எவ்வி ஹார்மன் [19][20] ஆகியோர் சர்வதேச அளவில் இந்த அணிவகுப்பை ஒருங்கிணைத்தனர். சமூக ஊடகங்கள் மூலமாக இந்த அணிவகுப்பை இவர்கள் ஒருங்கிணைத்தனர். ஒவ்வொரு வாரமும் இசுகைப் மூலமாக வியூகம் வகுத்தனர்.[19][21][20]
சான்றுகள்
தொகு- ↑ 1.0 1.1 "Trump reacts to mass protests with conciliatory tweet: More than 2.5m people gather around the world to take part in Women's March". Financial Times. January 22, 2017. https://www.ft.com/content/7b34cd82-dfe2-11e6-8405-9e5580d6e5fb. பார்த்த நாள்: January 22, 2017.
- ↑ Masuma Ahuja (January 21, 2017). "Yes, even people in Antarctica are joining the Women's March movement". CNN. Archived from the original on January 23, 2017. பார்க்கப்பட்ட நாள் January 25, 2017.
- ↑ Emily Tamkin; Robbie Gramer (January 21, 2017). "The Women's March Heard Round the World". Foreign Policy. Archived from the original on January 26, 2017. பார்க்கப்பட்ட நாள் January 25, 2017.
The Women's March on Saturday ... grew into a day long international event both in support of women and in opposition to the president's past rhetoric and potential future policies. There were more than 600 events in 60 countries around the world, with millions taking to the streets.
- ↑ "Women's March against Donald Trump is the largest day of protests in US history, say political scientists". Independent. https://www.independent.co.uk/news/world/americas/womens-march-anti-donald-trump-womens-rights-largest-protest-demonstration-us-history-political-a7541081.html. பார்த்த நாள்: January 25, 2017.
- ↑ "Mission and Vision". Womensmarch.com. Archived from the original on January 25, 2017. பார்க்கப்பட்ட நாள் January 25, 2017.
- ↑ "Organizers Hope Women's March on Washington Inspires, Evolves". NPR.org. December 21, 2016. https://www.npr.org/2016/12/21/506299560/womens-march-on-washington-aims-to-be-more-than-protest-but-will-it. பார்த்த நாள்: 2018-11-19.
- ↑ "Women's March on Washington". Women's March on Washington. Archived from the original on January 21, 2017. பார்க்கப்பட்ட நாள் January 21, 2017.
You can view the program live on a number of Jumbotrons on Independence Ave. and through all of our social media platforms, Facebook, Twitter, and YouTube
- ↑ "This is what we learned by counting the women's marches". Archived from the original on February 24, 2019. பார்க்கப்பட்ட நாள் December 8, 2017.
- ↑ 9.0 9.1 "Sister Marches". Women's March on Washington. Archived from the original on January 23, 2017. பார்க்கப்பட்ட நாள் January 23, 2017.
- ↑ Schmidt, Kierstein; Almukhtar, Sarah (January 20, 2017), "Where Women's Marches Are", The New York Times, archived from the original on January 21, 2017, பார்க்கப்பட்ட நாள் January 21, 2017
- ↑ "There's [https://taxzona.in/ taxzona] even a Women's March in Antarctica". USA Today. January 21, 2017. Archived from the original on January 24, 2017. பார்க்கப்பட்ட நாள் January 25, 2017.
{{cite web}}
: External link in
(help)|title=
- ↑ "The March: Jan 21 2017". Women's March (in அமெரிக்க ஆங்கிலம்). Archived from the original on November 20, 2018. பார்க்கப்பட்ட நாள் 2018-11-19.
- ↑ .
- ↑ De Jong, Natasja (January 21, 2017). "Demonstrations against Trump and for equality in Oslo". Norway Today இம் மூலத்தில் இருந்து ஜனவரி 28, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170128092449/http://norwaytoday.info/news/demonstrations-trump-equality-oslo/.
- ↑ Hammerstrom, Inger Lise (January 21, 2017). "2000 deltok i internasjonal kvinnemarsj i Oslo" (in no). VG இம் மூலத்தில் இருந்து February 2, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170202011428/http://www.vg.no/nyheter/innenriks/kvinner/2000-deltok-i-internasjonal-kvinnemarsj-i-oslo/a/23904137/.Photo of Brit-Agnes Sværi
- ↑ .
- ↑ .
- ↑ .
- ↑ 19.0 19.1 Mayer, Vivienne (January 23, 2017). "How The Women's March on Washington Went Global". HuffPost இம் மூலத்தில் இருந்து April 21, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170421093556/http://www.huffingtonpost.com/entry/how-the-womens-march-on-washington-has-gone-global_us_586e342be4b021b75256f0f1. "[W]eekly Skype calls enabled all global organizers to update and support each other."
- ↑ 20.0 20.1 Wildman, Sarah (January 19, 2017). "The Women's March on Washington has spread to 60 countries around the globe". Vox இம் மூலத்தில் இருந்து April 21, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170421094436/http://www.vox.com/world/2017/1/19/14316166/march-on-washington-women-global-solidarity. citing Facebook page used by the organizers in Nairobi, Kenya.
- ↑ "Women Will March in the UK on First Day of Trump Presidency". Empowering Women (Hearst Magazines UK – The National Magazine Company Ltd). January 21, 2017 இம் மூலத்தில் இருந்து April 21, 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170421093617/http://empowering.hearst.co.uk/be-involved/women-will-march-in-the-uk-on-first-day-of-trump-presidency/. "According to the Facebook page for the London march."