2020 தில்லி கலவரங்கள்

இந்தியாவின் வடகிழக்கு தில்லியில் 2020இல் நடந்த தொடர் கலவரங்கள்


2020 தில்லி கலவரங்கள் (2020 Delhi riots) அல்லது வடகிழக்கு டெல்லி கலவரங்கள் என்பது 23 பிப்ரவரி 2020 அன்று வடகிழக்கு தில்லியில் நடந்த கலவராமாகும்.[5][6]குடியுரிமைச் சட்டத் திருத்தத்திற்கு எதிராக தில்லியில் உள்ள ஜாமா பள்ளிவாசல், சாகீன்பாக் ஆகிய இடங்களில் முஸ்லிம்களுக்கு எதிராக இந்துத்துவா ஆதரவாளர்களால் ஏற்பட்ட கலவரங்கள் மாநிலம் முழுவதும் பரவின. கலவரங்களில் இதுவரை 53 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.[7] மேலும், 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். பிப்ரவரி 23, 2020 அன்று, பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான கபில் மிசுரா, சாகீன்பாக்கில் போராட்டக்காரர்களை வெளியேற்றுமாறு தில்லி காவல்துறையிடம் கேட்டுக் கொண்டார். காவல்துறை கோரிக்கையை ஏற்கவில்லை என்றால் தானே அதைச் செய்வேன் என்று கபில் மிசுரா மேலும் கூறினார். [8] கபில் மிஸ்ராவின் அறிக்கையைத் தொடர்ந்து வடகிழக்கு தில்லியில் மோதல் வெடித்தது.[9] கலவரக்காரர்களால் மூன்று பள்ளிவாசல்கள் தீக்கிரையாக்கப்பட்டன.[10][11] கலவரக்காரர்கள் பல பள்ளிகள், கடைகள், வீடுகள் மற்றும் வாகனங்களை அழித்துள்ளனர்.[12]மேலும் இந்தக் கலவரத்தில் ஒரு காவல்துறை காவலர், ஒரு உளவுத்துறை ஊழியர் மற்றும் 12க்கும் மேற்பட்ட இந்துக்கள் கொல்லப்பட்டனர். [13].[14] கலவரத்தின் போது, ​​தில்லி காவல்துறை சாட்சிகளாக செயலற்ற நிலையில் இருந்தது.[15] கிளர்ச்சியாளர்கள் பல பத்திரிகையாளர்களையும் தாக்கினர். தில்லி காவல்துறையின் கூற்றுப்படி, 100க்கும் மேற்பட்ட குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட 48 முதல் தகவல் அறிக்கைகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.[11] பிப்ரவரி 29 அன்று, கலவரம் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், இதுவரை 630 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் காவல் துறையினர் அறிவித்தனர்.[16]

2020 தில்லி கலவரங்கள்
(மேலே) தில்லியில் உள்ள சிவ விகாரில் நடந்த கலவரத்தின் போது தீக்கிரையாக்கப்பட்ட முஸ்லிம் வீடுகளும் அவர்களின் வணிக நிறுவனங்களும்.[1]

(கீழே) தில்லி முசுதபாபாத்தில் உள்ள ஈத்காவில் தில்லி அரசாங்கத்தால் அமைக்கப்பட்ட நிவாரண முகாம். மேலும், முஸ்லிம் வக்ஃப் வாரியத்தாலும், புனித இசுடீவன் மருத்துவமனை, ஹோலி குடும்ப மருத்துவமனையின் மருத்துவர்களாலும் தன்னார்வத்துடன் அமைக்கப்பட்ட 800 பெண்கள் மற்றும் 700 ஆண்களுக்கான படுக்கைகள் கொண்ட மருத்துவமனை அமைக்கப்பட்டது.[2]
வடகிழக்கு தில்லியில் வன்முறை கும்பல் தீ வைத்து எரித்த வாகனங்கள்.[3]
கோகுல்புரி டயர் கடைகளுக்கு தீ வைத்த கும்பல்.[4]}}

பின்னணி

தொகு

இந்திய நாடாளுமன்றம் குடியுரிமை திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியதிலிருந்து இந்தியா முழுவதும் போராட்டங்களும் கலவரங்களும் வெடித்தன [17][18] பிப்ரவரி 22-23 தேதிகளில், குடியுரிமை திருத்தச் சட்டமும் தேசியக் குடியுரிமைப் பதிவேடு ஆகியவற்றை அமல்படுத்தக் கூடாது என்று கோரி ஆயிரக்கணக்கான பெண்கள் சிலம்பூர்-ஜாப்ராபாத் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். மேலும் சிலம்பூர் மெட்ரோ இரயில் நிலைய நுழைவு வாயிலிலும் முற்றுகையிட்டனர். இதனால், மெட்ரோ ரயில் நிலையத்திற்கு யாரும் செல்ல முடியவில்லை.[19] பீம் ஆர்மி அழைப்பு விடுத்துள்ள பாரத் பந்த்க்கு ஆதரவாக சாலை மறியலில் ஈடுபட்டதாக குழுவின் தலைவர்கள் தெரிவித்தனர். முற்றுகையின் போது காவல்துறையினரும் இராணுவத் துருப்புக்களும் தடுத்து நிறுத்தப்பட்டன [20]

மேற்கோள்கள்

தொகு
 1. Ameen, Furquan (28 February 2020). "Shiv Vihar: Home for 15 years, but not any more". The Telegraph. https://www.telegraphindia.com/india/shiv-vihar-home-for-15-years-but-not-any-more/cid/1749520. 
 2. Vincent, Pheroze L. (4 March 2020), "After riots, volunteers offer healing touch at Delhi relief camp", The Telegraph (Kolkata), New Delhi, பார்க்கப்பட்ட நாள் 12 March 2020
 3. Gettleman, Jeffrey; Yasir, Sameer; Raj, Suhasini; Kumar, Hari (12 March 2020), Photographs by Loke, Atul, "'If We Kill You, Nothing Will Happen': How Delhi's Police Turned Against Muslims", The New York Times, பார்க்கப்பட்ட நாள் 13 March 2020, இது இந்திய அரசின் நேரடிக் கட்டளையின் கீழும், மிகக் குறைவான முஸ்லிம் அதிகாரிகளைக் கொண்ட தில்லி காவல்துறை, முஸ்லிம்களுக்கு எதிராக ஒருங்கிணைத்து நகர்ந்தது. மேலும் சில சமயங்களில் புதுதில்லியில் பிப்ரவரி பிற்பகுதியில் வெறியாட்டம் நடத்திய இந்துக் கும்பல்களுக்குத் தீவிரமாக உதவியது என்பதற்கான கூடுதல் ஆதாரங்கள் வெளிவருகின்றன. முஸ்லிம் வீடுகளை எரிப்பது மற்றும் முஸ்லிம் குடும்பங்களை குறிவைப்பது போன்றவை.
 4. Ameen, Furquan (5 March 2020). "Gutted tyre market has a story to tell". The Telegraph (Kolkata). https://www.telegraphindia.com/india/gutted-tyre-market-has-a-story-to-tell/cid/1751279. 
 5. Ellis-Peterson, Hannah; Azizur Rahman, Shaikh (16 March 2020), "Delhi's Muslims despair of justice after police implicated in riots", The Guardian, Delhi, பார்க்கப்பட்ட நாள் 17 March 2020, இந்த வடகிழக்கு சுற்றுப்புறத்தில் பல முறை ஏற்பட்டதால், நம்பிக்கையிழந்த கடைக்காரர்கள் உதவி கோரி கோகுல்புரி மற்றும் தயாள்பூர் காவல் நிலையங்களுக்கு பலமுறை ஓடினர். ஆனால் ஒவ்வொரு முறையும் கதவுகள் உள்ளே இருந்து பூட்டப்பட்டிருப்பதைக் கண்டார்கள். மூன்று நாட்களாகியும் எந்த உதவியும் வரவில்லை. ... பிப்ரவரி இறுதியில் தில்லியில் கலவரம் வெடித்தது. பல தசாப்தங்களாக தலைநகரை மூழ்கடித்த மிக மோசமான மத மோதலில் இருந்து வன்முறையை செயல்படுத்துவதில் தில்லி காவல்துறை ஆற்றிய பங்கு பற்றிய கேள்விகள் நீடித்தன. இது முக்கியமாக இந்து கும்பல் முஸ்லிம்களைத் தாக்கியது. இறந்த 51 பேரில், குறைந்தது முக்கால்வாசி பேர் முஸ்லிம்கள். மேலும் பல முஸ்லிம்கள் இன்னும் காணவில்லை.
 6. Gettleman, Jeffrey; Abi-Habib, Maria (1 March 2020), "In India, Modi's Policies Have Lit a Fuse", The New York Times, பார்க்கப்பட்ட நாள் 1 March 2020, கடந்த வாரம், இந்தியாவின் தலைநகரில் உள்ள சுற்றுவட்டாரங்கள் எரிந்து, மதம் சார்ந்த கலவரம் 40க்கும் மேற்பட்ட உயிர்களைக் கொன்றது. அவர்களில் பெரும்பாலோர் முஸ்லிம்கள், இந்திய அரசாங்கம் வன்முறை தன்னிச்சையானது என்று விரைவாகச் சொன்னது. தங்களுடைய எரிக்கப்படாத பொருட்களை தலைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பல முஸ்லிம்கள் வெளியேறுகிறார்கள். தெருக்களில் இருந்து இன்னும் புகை நாற்றம் வீசுகிறது.
 7. "18 FIRs, 106 arrests in Delhi violence; death toll climbs to 27". Livemint. 2020-02-26 இம் மூலத்தில் இருந்து 2020-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200228093405/http://www.livemint.com/news/india/delhi-caa-protest-live-updates-delhi-violence-latest-news-11582692092950.html. பார்த்த நாள்: 2020-02-28. 
 8. "BJP leader Kapil Mishra’s 3-day ultimatum to Delhi Police" (in English). Indiatoday. 2020-02-23 இம் மூலத்தில் இருந்து 2020-02-24 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200224175745/https://www.indiatoday.in/india/video/kapil-mishra-bjp-jaffrabad-protest-delhi-police-3-days-ultimatum-1649286-2020-02-23. பார்த்த நாள்: 2020-02-28. 
 9. "Delhi violence: Three mosques targeted, school burnt, shops & homes looted". Indianexpress. 2020-02-27 இம் மூலத்தில் இருந்து 2020-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200228094822/https://indianexpress.com/article/cities/delhi/delhi-violence-ashok-nagar-school-mosque-6288437/. பார்த்த நாள்: 2020-02-28. 
 10. "Delhi riots: Anger as judge critical of violence removed". BBC. 2020-02-27 இம் மூலத்தில் இருந்து 2020-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200228095758/https://www.bbc.com/news/world-asia-india-51644861. பார்த்த நாள்: 2020-02-28. 
 11. "Donald Trump and Narendra Modi hug as Delhi burns". The Economis. 2020-02-27 இம் மூலத்தில் இருந்து 2020-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200228100043/https://www.economist.com/asia/2020/02/27/donald-trump-and-narendra-modi-hug-as-delhi-burns. பார்த்த நாள்: 2020-02-28. 
 12. "One journalist shot at, two other reporters attacked by mob in Delhi riots". Thenewsinminutes. 2020-02-25 இம் மூலத்தில் இருந்து 2020-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200228100444/https://www.thenewsminute.com/article/one-journalist-shot-two-other-reporters-attacked-mob-delhi-riots-118905. பார்த்த நாள்: 2020-02-28. 
 13. Slater, Joanna; Masih, Niha (6 March 2020), "In Delhi's worst violence in decades, a man watched his brother burn", The Washington Post, பார்க்கப்பட்ட நாள் 6 March 2020, At least 53 people were killed or suffered deadly injuries in violence that persisted for two days. The majority of those killed were Muslims, many shot, hacked or burned to death. A police officer and an intelligence officer were also killed. So too were more than a dozen Hindus, most of them shot or assaulted.
 14. Frayer, Lauren (7 March 2020), Delhi Riots Aftermath: 'How Do You Explain Such Violence?', NPR, பார்க்கப்பட்ட நாள் 7 March 2020, But hundreds of wounded are languishing in understaffed medical facilities. Corpses are still being discovered in drainage ditches. Victims are still dying in hospitals. The death toll has reached 53... Police are facing accusations from victims, witnesses, human rights groups, opposition politicians and Muslim leaders worldwide that they failed to protect Muslim citizens, and in some cases, even incited attacks themselves.
 15. "Northeast Delhi death toll climbs to 27; cops say 106 people arrested". Thehindustantime. 2020-02-26 இம் மூலத்தில் இருந்து 2020-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200228100950/https://www.hindustantimes.com/india-news/106-people-arrested-18-firs-filed-in-connection-with-northeast-violence-delhi-police/story-N3LpLW53qJhubxkm4TkGVM.html. பார்த்த நாள்: 2020-02-28. 
 16. "The Delhi riots registered 148 FIRs. 630 people arrested". മാതൃഭൂമി. 2020-02-29 இம் மூலத்தில் இருந்து 2020-02-29 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200229043656/https://www.mathrubhumi.com/news/india/delhi-violence-148-firs-have-been-registered-and-630-people-are-arrested-1.4569510. பார்த்த நாள்: 2020-02-29. 
 17. "Shaheen Bagh: The women occupying Delhi street against citizenship law". BBC. 2020-02-04 இம் மூலத்தில் இருந்து 2020-01-08 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200108140153/https://www.bbc.com/news/world-asia-india-50902909. பார்த்த நாள்: 2020-02-28. 
 18. "Portraits of resilience: the new year in Shaheen Bagh". Livemint. 2020-02-03 இம் மூலத்தில் இருந்து 2020-02-16 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200216013933/http://www.livemint.com/mint-lounge/features/portraits-of-resilience-the-new-year-in-shaheen-bagh-11577952208794.html. பார்த்த நாள்: 2020-02-28. 
 19. "Jaffrabad anti-CAA protests: Over 500 women block road connecting Seelampur with Maujpur and Yamuna Vihar; Delhi Metro shuts station". Firstpost. 2020-02-23 இம் மூலத்தில் இருந்து 2020-02-28 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200228104212/https://www.firstpost.com/india/jaffrabad-anti-caa-protests-over-500-women-block-road-connecting-seelampur-with-maujpur-and-yamuna-vihar-delhi-metro-shuts-station-8076371.html. பார்த்த நாள்: 2020-02-28. 
 20. "Anti-CAA Protesters Block Seelampur-Jaffrabad Road, Cops Deployed". Thequint. 2020-02-23 இம் மூலத்தில் இருந்து 2020-02-23 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20200223141844/http://www.thequint.com/news/india/anti-caa-protesters-block-seelampur-jafrabad-road-police-deployed-bhim-army-chandrashekhar-azad. பார்த்த நாள்: 2020-02-28. 

உசாத்துணை

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=2020_தில்லி_கலவரங்கள்&oldid=3752392" இலிருந்து மீள்விக்கப்பட்டது