2021 எயிட்டி நிலநடுக்கம்
எயிட்டி நிலநடுக்கம் 2021 ஆகத்து 14 கிநேவ) காலை 8:29:09 மணிக்கு நிகழ்ந்தது. 7.2 செறிவான இந்நிலநடுக்கம் கரிபியன் நாடான எயிட்டியில் லா எசுப்பானியோலா தீவில் திபுரோன் மூவலந்தீவைத் தாக்கியது.[1] எயிட்டியின் தலைநகர் போர்ட்-ஓ-பிரின்ஸ் நகரில் இருந்து 150 கிமீ மேற்கே 10 கிமீ ஆழத்தில் இதன் அதிர்வுமையம் காணப்பட்டது.[4][5] இது எயிட்டியின் கடலோரப் பகுதிகளுக்கு ஆழிப்பேரலை எச்சரிக்கையை விடுத்தது, ஆனாலும் அவ்வெச்செரிக்கை சிறிது நேரத்தில் விலக்கப்பட்டது.[5] ஐக்கிய அமெரிக்க நில அளவாய்வுத் துறை "அதிக உயிரிழப்புகள்" மற்றும் பரவலான பேரழிவை மதிப்பிட்டது.[6] 8,200 இற்கும் அதிகமான கட்டடங்கள் அழிந்தன அல்லது சேதமடைந்தன, குறைந்தது 1,297 பேர் உயிரிழந்ததாக மதிப்பிடப்பட்டது.[7] 2021 இல் இடம்பெற்ற மிகப்பெரும் நிலநடுக்கமாக தற்போது இது பதிவு செய்யப்பட்டுள்ளது.
நிலநடுக்க அளவு | 7.2 Mw |
---|---|
ஆழம் | 10.0 கிமீ (6.2 மைல்) |
நிலநடுக்க மையம் | 18°24′29″N 73°28′30″W / 18.408°N 73.475°W[1] |
உரசுமுனை | என்றிக்கிலோ-பிளான்டன் கார்டன் பிளவுப் பாறைமண்டலம் |
வகை | சாய்வுப் பிளவுப் பெயர்ச்சி-நேர்மாறு |
அதிகபட்ச செறிவு | IX (Violent) |
உயிரிழப்புகள் | குறைந்தது 1,297 இறப்புகள், 5,700 காயம்[2][3] |
இவற்றையும் பார்க்க
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ 1.0 1.1 "M 7.2 - 12 km NE of Saint-Louis du Sud, Haiti". earthquake.usgs.gov. Archived from the original on 14 August 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2021.
- ↑ Agence France-Presse (15 August 2021). "Haiti quake death toll rises as crews scramble to find survivors". al-Jazeera. https://www.aljazeera.com/news/2021/8/15/haitians-scramble-to-rescue-survivors-from-ruins-of-major-quake.
- ↑ "Haiti struck by deadly 7.2-magnitude earthquake". 14 August 2021 இம் மூலத்தில் இருந்து 14 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210814141827/https://www.bbc.com/news/world-latin-america-58215631.
- ↑ European-Mediterranean Seismological Centre. "Earthquake, Magnitude 7.2 - HAITI REGION - 2021 August 14, 12:29:09 UTC". EMSC-CSEM. Archived from the original on 14 August 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2021.
- ↑ 5.0 5.1 "Major earthquake in Haiti felt across Caribbean, high casualties expected". Reuters. 14 August 2021. Archived from the original on 14 August 2021. பார்க்கப்பட்ட நாள் 14 August 2021.
- ↑ "Live updates: 7.2 magnitude earthquake hits near Haiti". 14 August 2021 இம் மூலத்தில் இருந்து 14 August 2021 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20210814145013/https://www.cnn.com/world/live-news/haiti-earthquake-08-14-21/index.html.
- ↑ "Haiti quake death toll rises as crews scramble to find survivors". al-Jazeera. 2021-08-15. Archived from the original on 2021-08-15. பார்க்கப்பட்ட நாள் 2021-08-15.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link)
வெளி இணைப்புகள்
தொகு- The International Seismological Centre has a bibliography and/or authoritative data for this event.
- Live Update: 7.2 magnitude earthquake hits near Haiti CNN
- யூடியூபில் Haiti earthquake
- ReliefWeb's main page for this event.