2021 கவர்தா கலவரம்

2021 கவர்தா கலவரங்கள், (2021 Kawardha riots) என்பது 2021 ஆம் ஆண்டில் அக்டோபர் 3 மற்றும் அக்டோபர் 7 க்கு இடையில் சத்தீசுகரின் கவர்தாவில் இந்துக்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையிலான மத வன்முறை சம்பவங்களைக் குறிப்பதாகும்.

பின்னணி

தொகு

சத்தீசுகரின் கபீர்தாம் மாவட்டத்தில் உள்ள கவர்தா ஒரு சிறிய நகரம் ஆகும். இது, முன்னாள் மாநில முதல்வர் ரமன் சிங் மற்றும் வனத்துறை அமைச்சர் முகமது அக்பர் ஆகியோரின் பிறப்பிடம் ஆகும். [1] இந்த மாவட்டத்தில் 92.4% இந்துக்கள் மற்றும் 7.76% முஸ்லிம்கள் உள்ளனர். [2]

சம்பவம்

தொகு

ஞாயிற்றுக்கிழமை, 3 அக்டோபர் 2021 அன்று, கவர்தா நகரில் உள்ள லோஹாரா நாகா சவுக்கில் மதக் கொடிகளை வைப்பது தொடர்பாக முஸ்லிம்களுக்கும் இந்துக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.[3][4][1][5][6] நேரில் கண்ட சாட்சி ஒருவர், வாக்குவாதத்தைத் தொடர்ந்து, பச்சைக் கொடி கிழிக்கப்பட்டதாகவும், சில மணிநேரங்களுக்குப் பிறகு, பதிலடியாக ஒரு காவிக்கொடி அகற்றப்பட்டதாகவும் கூறினார். [1] [6] இரண்டு நாட்களுக்குப் பிறகு, விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள் உள்ளிட்ட வலதுசாரி அமைப்புகள் கொடி அகற்றப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து பேரணியை நடத்தின. இந்தப் பேரணியானது அப்பகுதியில் தீவைப்பு, கலவரம் உள்ளிட்ட உள்நாட்டுக் கலவரங்களுக்கு வழிவகுத்தது. போராட்டக்காரர்களை கலைக்க காவல்துறையினர் தடியடி நடத்தினர், [7] [6] இந்திய தண்டனைச் சட்டத்தின் 144 வது பிரிவை செயல்படுத்தியது மற்றும் பிராந்தியத்தில் ஊரடங்கு உத்தரவை விதித்தது.[8][9] [10] [7]

விசுவ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தள் அமைப்பினர் அமைதியான முறையில் போராட்டம் நடத்துவதாக உறுதியளித்ததாக காவல்துறையினர் தெரிவித்தனர். [6] அவர்கள் பாரதிய ஜனதா கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சந்தோஷ் பாண்டே மற்றும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அபிஷேக் சிங் உட்பட பலருக்கு எதிராக முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தனர். [1]

சான்றுகள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Tiwari, The Quint 2021.
  2. 2011 Kawardha census.
  3. "Chhattisgarh's Kawardha tense after violence over removal of religious flags, curfew on". India Today (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.{{cite web}}: CS1 maint: url-status (link)
  4. "छत्तीसगढ़: कवर्धा में धार्मिक झंडे हटाने को लेकर दो गुटों में झड़प, इलाके में धारा 144 लागू". Amar Ujala (in இந்தி). பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  5. ANI News 2021.
  6. 6.0 6.1 6.2 6.3 Verma, Indian Express 2021.
  7. 7.0 7.1 Mishra, HT 2021.
  8. "Curfew imposed in Chhattisgarh's Kawardha town after communal violence; 15 detained". Hindustan Times (in ஆங்கிலம்). 2021-10-06. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  9. "Curfew In Chhattisgarh Town After Violence During Right-Wing Rally". NDTV.com. பார்க்கப்பட்ட நாள் 2021-10-21.
  10. TOI 2021.

ஆதாரங்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=2021_கவர்தா_கலவரம்&oldid=3920529" இலிருந்து மீள்விக்கப்பட்டது