2022 சீதகுண்டா தீ விபத்து
2022 சீதகுண்டா தீ விபத்து வங்காளதேச நாட்டின் சிட்டகாங்கு மாநகரத்திலுள்ள சீதகுண்டா நிர்வாகப் பகுதியில் 2022 ஆம் ஆண்டு சூன் மாதம் 4 ஆம் தேதியன்று நிகழ்ந்தது. அன்றைய தினம் இரவு சுமார் 9 மணியளவில் சீதகுண்டா பகுதியில் இருந்த ஒரு கொள்கலன் பணிமனையில் தீவிபத்தும் வெடி விபத்தும் நிகழ்ந்தன. தனியார் சேமிப்பு கிடங்கில் நடந்த இத்தீவிபத்தில் 49 பேர் இறந்தனர். 450 பேருக்கும் அதிகமானோர் காயம் அடைந்தனர்.[2]:{{{3}}}[3]:{{{3}}}[6]:{{{3}}}[7]:{{{3}}}
நாள் | 4 சூன் 2022 |
---|---|
நேரம் | தொடக்கம்: இரவு 9.00 மணி [2]:{{{3}}} முதல் வெடிப்பு: இரவு 11.45 மணி [2]:{{{3}}} |
அமைவிடம் | பிஎம் சேமிப்புக் கிடங்கு, கதம்ராசுல் பகுதி, சீதகுண்ட்டா நிர்வாகப் பிரிவு, சிட்டகாங் மாவட்டம், வங்காளதேசம் |
புவியியல் ஆள்கூற்று | 22°27′18″N 91°44′15″E / 22.4550°N 91.7375°E |
வகை | தீவிபத்து |
இறப்புகள் | குறைந்தது 49 [3]:{{{3}}} |
காயமுற்றோர் | 450 [2]:{{{3}}} |
வெளிப் படிமங்கள் | |
---|---|
A firefighter facing the fire at night[4]:{{{3}}} | |
Fighting the fire the next day[3]:{{{3}}} | |
The fire as seen from a distance[2]:{{{3}}} | |
A victim being transported to hospital[5]:{{{3}}} |
சீதகுண்டா நிர்வாகப் பிரிவிலுள்ள கதம்ராசூல் பகுதியில் உள்ள சேமிப்புக் கிடங்கில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.[2]:{{{3}}}[8]:{{{3}}} தீ விபத்து இரவு 9 மணிக்கு ஏற்பட்டது. தீயை அணைக்கும் முயற்சியில் தீயணைப்பு வீரர்கள் இருந்தபோது இரவு 11.45 மணியளவில் பெரிய வெடிப்பு ஒன்றும் ஏற்பட்டது. இதனைத் தொடர்ந்து தீ வேகமாக பரவத் தொடங்கியது. பல வெடிப்புகள் தொடர்ந்தன. [2]:{{{3}}}[7]:{{{3}}}[9]:{{{3}}}[10]:{{{3}}} வெடிப்புகளின் சக்தி பல கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களையும் பாதித்தது. இந்த வெடிப்புகள் தீப்பந்த மழையை ஏற்படுத்தியதாக அங்கிருந்த ஒருவர் கூறினார்[11]:{{{3}}}[12]:{{{3}}}
சேமிப்புக் கிடங்கில் ஐதரசன் பெராக்சைடு இருந்ததால் தீயை கட்டுப்படுத்த முடியவில்லை என்று வங்காள தேசத்தின் தீயணைப்புத் துறையின் தலைவர் கூறினார். மறுநாள் பிற்பகல் வரை, தீ எரிந்து கொண்டிருந்ததாகவும் வெடிக்கும் சத்தமும் தொடர்ந்து கேட்டுக் கொண்டிருந்ததாகவும் அவர் கூறினார். வங்கதேச இராணுவமும் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டது.
பின்னணி
தொகுபிஎம் கொள்கலன் சேமிப்புக்க்கிடங்கு ஒரு தனியார் நிறுவன்மாகும். டச்சு-வங்கதேச கூட்டு முயற்சியால் உருவாக்கப்பட்ட ஓர் உள்நாட்டு கொள்கலன் சேமிப்புக் கிடங்காகும். 2011 ஆம் ஆண்டு முதல் இறக்குமதி மற்றும் ஏற்றுமதிக்கான பொருட்களை இந்நிறுவனம் கையாள்கிறது.[2]:{{{3}}}[3]:{{{3}}}[8]:{{{3}}} சுமார் 600 பேர் இங்கு பணிபுரிந்ததாகக் கிடங்கின் இயக்குநர் தெரிவித்தார்.[12]:{{{3}}} வங்கதேச நாட்டில் உள்ள 19 உள்நாட்டு சேமிப்புக் கிடங்குகளில் இதுவும் ஒன்றாகும்.[11]:{{{3}}}
விபத்துக்குள்ளான சேமிப்புக் கிடங்கு 30 ஏக்கர் பரப்பளவு கொண்டதாகுமென வங்கதேச உள்நாட்டு கொள்கலன் சேமிப்புக் கிடங்கு சங்கத்தின் செய்தித் தொடர்பாளர் உருகூல் அமின் சிக்தர் கூறினார்.[12]:{{{3}}}[13]:{{{3}}} இது 6500 20அடி சமான அலகு திறன் கொண்டதாகும். தீ விபத்து ஏற்பட்ட நாளில் சுமார் இத்தகைய 4,300 கொள்கலன்கள் அங்கிருந்தன. ஐதரசன் பெராக்சைடு உள்ளிட்ட இரசாயணப் பொருள்கள் இங்கிருந்தன.[14]:{{{3}}}
வங்கதேசத்தில் பாதுகாப்பு விதிமுறைகள் கடுமையாக அமல்படுத்தப்படாததால், நாட்டில் தீ விபத்துகள் ஏற்படுவது வழக்கமாகும்.[11]:{{{3}}}[12]:{{{3}}}
தீ மற்றும் வெடிப்புகள்
தொகுஇரவு 9 மணியளவில் தீவிபத்து நிகழ்ந்ததாக உள்ளூர் அவசர சேவைகள் மற்றும் ஆதாரங்கள் அமைப்பு உறுதிப்படுத்துகிறது.[2]:{{{3}}} விபத்தை முதல் கண்ட நூற்றுக்கணக்கான தன்னார்வலர்கள் சேமிப்புக் கிடங்கிற்கு விரைவாக வந்து தீயை அணைக்கப் போராடினர்.[6]:{{{3}}}
நள்ளிரவு 11.45 மணியில் நிகழ்ந்த முதல் வெடிப்பு மிகப்பெரியதாக இருந்தது. சம்பவ இடத்தில் இருந்த பலரைச் தீ சூழ்ந்தது. பலரை காற்றில் பறக்கவும் விட்டது.[2]:{{{3}}}[6]:{{{3}}}[7]:{{{3}}} இந்த ஆரம்ப வெடிப்பு பின்னர் பல அடுத்தடுத்த வெடிப்புகளை தூண்டியது. பல கொள்கலன்களில் எரியக்கூடிய இரசாயனங்கள் இருந்தன. இதனால் தீ அவற்றைச் சூழ்ந்தபோது, அவை வெடித்தன. தீ பரவல் ஏற்பட்டது.[9]:{{{3}}}
இந்த வெடிப்புகள் சுற்றியுள்ள பகுதிகளில் தரையை குலுக்கியதாகவும், அருகில் உள்ள கட்டிடங்களின் சன்னல்கள் உடைந்ததாகவும் கூறப்படுகிறது.[9]:{{{3}}} வெடிப்புகளின் சக்தி போதுமானதாக இருந்ததால் கிலோமீட்டர் தொலைவில் உள்ள கட்டிடங்களும் பாதிக்கப்பட்டன.[3]:{{{3}}}[11]:{{{3}}} தீயினால் வெளிவரும் புகைகளும் இரசாயனங்கள் காரணமாக நச்சுத்தன்மை கொண்டவையாக இருந்தன. இதனால் தீயை அணைக்கும் முயற்சி மிகவும் கடினமானது.[9] சேமிப்புக் கிடங்கில் ஏற்பட்ட தீ குறைந்தது ஏழு ஏக்கருக்கு பரவியதாக மாவட்ட நிர்வாகி ஒருவர் தெரிவித்தார்.[12]:{{{3}}} இந்தியப் பெருங்கடலில் இரசாயனங்கள் பரவாமல் இருக்க 250 மணல் மூட்டைகளை நிலைநிறுத்தியதாக இராணுவம் கூறியது.[11]:{{{3}}} அடுத்த நாளிலும் வெடிப்புகள் தொடர்ந்ததாக தீயணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர். இது தீயை அணைக்கும் முயற்சிகளை சிக்கலாக்கியது.[6]:{{{3}}}
வெடிப்பினால் வானத்தில் நெருப்புப் பந்துகள் பறந்தது என்று நேரில் பார்த்தவர் ஒருவர் கூறினார். நெருப்பு மழை பொழிவது போல் அவை விழுந்தன என்றும் அவர் கூறினார்.[12]:{{{3}}} வெடிப்பு என்னை சுமார் அரை கிலோமீட்டர் அளவுக்கு தூக்கி விசியதாகவும் பாதிக்கப்பட்ட ஒருவர் கூறினார்.[12]:{{{3}}} முதல் வெடிப்பு சத்தம் 30 முதல் 40 கிமீ (20 முதல் 25 மைல்) தொலைவில் இருந்தும் கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது.[6]:{{{3}}} பல வங்காளதேசிகள் இந்த வெடிப்பை 2020 பெய்ரூட் வெடிப்புடன் ஒப்பிட்டனர்..[6]:{{{3}}}
பாதிப்புகள்
தொகுஇந்த சம்பவத்தில் குறைந்தது 49 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 450 பேருக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.[2]:{{{3}}}[3]:{{{3}}}[15] காயமடைந்தவர்களில் குறைந்தது 350 பேர் சிட்டகாங் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் H) இருப்பதாக சிட்டகாங் சுகாதார அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.[6]:{{{3}}} காயமடைந்தவர்களில் பலர் ஆபத்தான நிலையில் உள்ளனர்.[2]:{{{3}}} இறந்தவர்களில் பலர் மிகவும் மோசமாக எரிக்கப்பட்டிருந்தனர். அதிகாரி ஒருவர் அவர்களின் அடையாளங்களைத் தீர்மானிக்க டி.என்.ஏ விவரக்குறிப்பு தேவை என்று கூறினார்.[5]:{{{3}}} சேமிப்புக் கிடங்கில் இன்னும் அதிகமான உடல்கள் எஞ்சியிருப்பதாகத் தன்னார்வலர்கள் கூறினர்.[11]:{{{3}}}
தீயணைப்பு சேவை மற்றும் குடிமைப் பாதுகாப்புப் பணிப்பாளர் தலைவர் கொல்லப்பட்டவர்களில் ஐந்து தீயணைப்பு வீரர்களும் காயமடைந்தவர்களில் இருபத்தி ஒன்று நபர்களும் இருந்ததாகத் தெரிவித்தார்.[16]:{{{3}}} சமூக ஊடகங்களில் நேரடி ஒளிபரப்பு செய்த பல பத்திரிகையாளர்கள் காணப்படவில்லை.[11]:{{{3}}}
இழப்புகள்
தொகு20 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர் மதிப்புள்ள வெற்று கொள்கலன்களும் 90 மில்லியனுக்கும் அதிகமான அமெரிக்க டாலர் மதிப்புள்ள பொருட்கள் கொண்ட கொள்கலன்களும் இப்பேரழிவில் அழிக்கப்பட்டன என்று வங்கதேச உள்நாட்டு கொள்கலன் அமைப்பின் செய்தித் தொடர்பாளர் சிக்தர் தெரிவித்தார்.[13]:{{{3}}}
பின்விளைவுகள்
தொகுவங்காளதேசத்தின் பிரதம மந்திரி சேக் அசீனா சம்பவத்தின் தீவிரம் காரணமாக ஆழ்ந்த அதிர்ச்சியிலும் சோகத்திலும் இருந்தார். காயமடைந்தவர்களுக்கு உரிய அதிகாரிகள் சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொண்டார்.[17]:{{{3}}} இறந்தவர்களின் குடும்பங்களுக்கு இழப்பீடாக 50000 வங்கதேச டாக்கா பணமும் காயமடைந்தவர்களுக்கு 20000 வங்கதேச டாக்கா பணமும் வழங்கப்படும் என அறிவித்தார்.
புலன்விசாரணை
தொகுசம்பவத்தை விசாரிக்க பல குழுக்கள் அமைக்கப்பட்டன.[18]:{{{3}}}
மேற்கோள்கள்
தொகு- ↑ "வங்கதேசத்தில் தனியார் சேமிப்பு கிடங்கில் பயங்கர தீ விபத்து: 49 பேர் பலி, 300-க்கும் அதிகமானோர் காயம்". இந்து தமிழ் திசை. https://www.hindutamil.in/news/world/810063-huge-fire-at-bangladesh-container-depot-25-killed-over-450-injured.html. பார்த்த நாள்: 6 June 2022.
- ↑ 2.00 2.01 2.02 2.03 2.04 2.05 2.06 2.07 2.08 2.09 2.10 2.11 Pimple Barua (5 June 2022). "40 killed, over 450 injured in Chittagong container depot fire". Dhaka Tribune. Archived from the original on 2022-06-05.
- ↑ 3.0 3.1 3.2 3.3 3.4 3.5 "Bangladesh: Deadly fire and explosions at container facility". Al Jazeera. 5 June 2022. Archived from the original on 2022-06-05.
- ↑ Alam, Julhas (5 June 2022). "At least 49 dead in 2nd day of Bangladesh cargo depot fire". Associated Press. Archived from the original on 5 June 2022.
- ↑ 5.0 5.1 "Depot fire: Many bodies burnt beyond recognition". www.dhakatribune.com. 5 June 2022. Archived from the original on 5 June 2022.
- ↑ 6.0 6.1 6.2 6.3 6.4 6.5 6.6 "Bangladesh: 16 killed, scores injured in depot blast". BBC News. 5 June 2022. Archived from the original on 2022-06-05.
- ↑ 7.0 7.1 7.2 Paul, Ruma (5 June 2022). "Firefighters still working to put out deadly Bangladesh container blaze" (in en). Reuters இம் மூலத்தில் இருந்து 2022-06-05 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220605051124/https://www.reuters.com/world/asia-pacific/five-killed-scores-injured-bangladesh-container-depot-fire-2022-06-05/.
- ↑ 8.0 8.1 Alam, Julhas (5 June 2022). "At least 49 dead in 2nd day of Bangladesh cargo depot fire". Washington Post. AP இம் மூலத்தில் இருந்து 5 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220605151008/https://www.washingtonpost.com/world/at-least-15-dead-in-fire-at-bangladesh-container-depot/2022/06/04/b536d1c4-e47d-11ec-ae64-6b23e5155b62_story.html.
- ↑ 9.0 9.1 9.2 9.3 Jeong, Sophie; Rebane, Teele; Haq, Sana Noor (5 June 2022). "Fire tears through Bangladesh container depot killing 37 and injuring hundreds". CNN. Archived from the original on 5 June 2022. பார்க்கப்பட்ட நாள் 5 June 2022.
- ↑ "Bangladesh depot fire leaves dozens dead, many others injured | DW | 05.06.2022". DW. 5 June 2022 இம் மூலத்தில் இருந்து 5 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220605150911/https://www.dw.com/en/bangladesh-depot-fire-leaves-dozens-dead-many-others-injured/a-62036413.
- ↑ 11.0 11.1 11.2 11.3 11.4 11.5 11.6 "Bangladesh port depot fire kills 49, injures 300". Arab News. 5 June 2022. Archived from the original on 5 June 2022.
- ↑ 12.0 12.1 12.2 12.3 12.4 12.5 12.6 "At least 49 dead in ongoing Bangladesh cargo depot fire". Archived from the original on 2022-06-05. பார்க்கப்பட்ட நாள் 2022-06-06.
{{cite web}}
: CS1 maint: unfit URL (link) - ↑ 13.0 13.1 Illius, Shamsuddin; Chowdhury, Shahadat Hossain (5 June 2022). "Ctg depot fire causes over $110 million losses: BICDA". பிசினஸ் ஸ்டாண்டர்ட் (archive.ph) இம் மூலத்தில் இருந்து 5 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220605123948/https://www.tbsnews.net/bangladesh/ctg-depot-fire-causes-over-110-million-losses-bicda-433318.
- ↑ "At least 34 killed and scores injured in Bangladesh depot fire". AFP. 4 June 2022 இம் மூலத்தில் இருந்து 5 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220605150915/https://www.theguardian.com/world/2022/jun/04/five-killed-and-at-least-100-injured-in-bangladesh-depot-fire. பார்த்த நாள்: 5 June 2022.
- ↑ "Nearly 50 killed in fire at Bangladesh container depot". www.aljazeera.com (in ஆங்கிலம்). Archived from the original on 5 June 2022. பார்க்கப்பட்ட நாள் 2022-06-05.
- ↑ "Sitakunda fire: 8 firefighters killed in line of duty". www.dhakatribune.com. 5 June 2022. Archived from the original on 5 June 2022.
- ↑ "PM Hasina shocked at loss of lives in Sitakunda depot fire" (in en). Dhaka Tribune. 5 June 2022 இம் மூலத்தில் இருந்து 5 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20220605151024/https://www.dhakatribune.com/bangladesh/2022/06/05/pm-hasina-shocked-at-loss-of-lives-in-sitakunda-depot-fire.
- ↑ Rahman, Al; Emon, Baizid (5 June 2022). "সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ঘটনা তদন্তে কমিটি" (in bn). banglanews24.com (archive.ph) இம் மூலத்தில் இருந்து 5 June 2022 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20220605145119/https://www.banglanews24.com/daily-chittagong/news/bd/934940.details#selection-1007.0-1007.25.