2024 நேபாள வெள்ளம்
2024 நேபாள வெள்ளம் (2024 Nepal floods) என்பது சூலை தொடக்கத்திலும், ஆகத்து நடுப்பகுதியிலும் மற்றும் செப்டம்பர் பிற்பகுதியிலும் பெய்திட்ட வழக்கமான பருவமழைக் காலத்து கனமழையின் விளைவாக ஏற்பட்ட வெள்ளப்பெருக்கினைக் குறிக்கிறது. இந்த வெள்ளப்பெருக்கு நாடு முழுவதும் குறிப்பிடத்தக்க வெள்ளத்தையும் பல மண் சரிவுகளையும் ஏற்படுத்தியது. மிகவும் சேதத்தையும் மரணத்தையும் ஏற்படுத்திய செப்டம்பர் வெள்ளம், குறைந்த காற்றழுத்த அமைப்பின் விளைவாக, குறைந்தது 1970 க்குப் பிறகு இப்பகுதியில் பதிவு செய்யப்பட்ட மிக அதிக மழைப்பொழிவால் ஏற்பட்டது. வெள்ளச் சமவெளிகளில் திட்டமிடப்படாத கட்டுமானம் உட்பட மோசமான உள்கட்டமைப்பு மற்றும் குடியேற்றத் திட்டமிடல் காரணமாக வெள்ளத்தின் தாக்கம் மேலும் அதிகரித்தது.
நாள் | சூலை 2024 – இற்றை |
---|---|
அமைவிடம் | நேபாளம், குறிப்பாக கிழக்கு, தென்-கிழக்குப் பகுதிகள் |
காரணம் | புவி சூடாதல், வெள்ள சமவெளிகள் அருகே நகரமயமாக்கல், மோசமான வடிகால் உள்கட்டமைப்பு |
இறப்புகள் | 250+ |
காணாமல் போனோர் | 50+ |
செப்டம்பர் 26 அன்று தொடங்கிய மிகக் கடுமையான வெள்ளம் நேபாளத்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்குப் பகுதிகளையும், அருகிலுள்ள உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் போன்ற இந்தியப் பகுதிகளையும், வடக்கு வங்காளதேசத்தின் சில பகுதிகளையும் பெரிதும் பாதித்தது.[1] கோசி ஆறு அதன் ஆபத்தான மட்டத்திற்கு நிரம்பியது, அதே நேரத்தில் பாக்மதி மற்றும் நக்கு ஆறுகள் பாக்மதி மாகாணத்தில் வெள்ளத்தை ஏற்படுத்தின. செப்டம்பர் 28 மற்றும் 29 க்கு இடையில் காத்மாண்டு பள்ளத்தாக்கில் 240 மிமீ (9.4 அங்குலம்) மற்றும் 322.2 மிமீ (12.7 அங்குலம்) அளவிலான மழை பெய்துள்ளது. நீர்க்குழாய்கள், மின்சாரம் மற்றும் இணைய அணுகல் உள்ளிட்ட உள்கட்டமைப்புகள் சேதமடைந்தன. மேலும், நகரத்திற்கு வெளியே உள்ள மூன்று நெடுஞ்சாலைகளும் துண்டிக்கப்பட்டன. நிலச்சரிவுகளால் புதைந்த வாகனங்களில் இருந்து பல உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. மொத்தம் 3,000க்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட காவல் துறை மற்றும் இராணுவப் படைகளுக்கு மீட்பு மற்றும் தூய்மைப்படுத்தும் பணிகளுக்கு உதவுமாறு அரசாங்கம் உத்தரவிட்டது, மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டன.
சூலை தொடக்கத்தில் வெள்ளத்தால் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர் மேலும் ஒன்பது பேர் காணாமல் போனதாக தெரிவிக்கப்பட்டது. செப்டம்பர் பிற்பகுதியில் ஏற்பட்ட வெள்ளத்தால் குறைந்தது 204 பேர் இறந்தனர் மற்றும் 30 பேர் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது, இதில் காத்மாண்டுவில் குறைந்தது 37 பேர் இறந்தனர். காத்மாண்டு விமான நிலையத்திலிருந்து அனைத்து விமானங்களும் ரத்து செய்யப்பட்டன, நேபாள பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன. சுமார் 4,000 பேர் மீட்கப்பட்டனர், குறைந்தது 322 வீடுகள் மற்றும் 16 பாலங்கள் சேதமடைந்தன.
வெள்ளங்கள்
தொகுவருடாந்திர பருவமழை பொதுவாக சூன் மாதத்தில் தொடங்கி செப்டம்பர் வரை நீடிக்கும். நேபாளத்தில் ஏற்பட்ட வெள்ளம், இந்தியாவின் மாநிலங்களான உத்தரப்பிரதேசம் மற்றும் அசாம் போன்ற மாநிலங்களில் 2024 வெள்ளத்துடன் ஒன்றிப்போனது. நேபாள வானிலை அலுவலர் பினு மஹர்ஜன் கூறுகையில், இந்தியாவின் அருகிலுள்ள பகுதிகளில் வங்காள விரிகுடா பகுதியில் நீடித்திருந்த தாழ்வழுத்த அமைப்பு 2024 ஆம் ஆண்டில் அதிகரித்த மற்றும் நீடித்த வெள்ளத்திற்கு முக்கியக் காரணமாக அமைந்தது என்று கூறினார்.[2][3] இதற்குப் பதில்வினையாக, நேபாள அரசு பல வெள்ள எச்சரிக்கை அறிவிப்புகள் வெளியிடப்பட்டன, அத்துடன் இரவில் நெடுஞ்சாலைகளில் பயணிக்கத் தடை விதிக்கப்பட்டது மற்றும் விபத்துக்கள் அல்லது கொடிய வெள்ளம் அல்லது மண் சரிவுகளில் சிக்கும் அபாயம் காரணமாக பொதுவாக மகிழ்வுந்துகளை ஓட்டுவதற்கெதிராக எச்சரிக்கை விடுக்கப்பட்டது.[4]
வெள்ளங்களின் பட்டியல்
தொகுசூலை வெள்ளங்கள்
தொகுசூலை மாதத் தொடக்கத்தில் வெள்ளத்தால் குறைந்தது 14 பேர் கொல்லப்பட்டனர், மேலும் ஒன்பது பேர் காணாமல் போனதாகக் கூறப்படுகிறது.[5]
ஆகத்து வெள்ளங்கள்
தொகுஆகத்து 16,2024 அன்று, சோலுகும்பு மாவட்டத்தின் எவரெஸ்ட் பகுதியில் உள்ள தாமே கிராமத்தில் இரண்டு பனிப்பாறை ஏரிகள் வெடித்தன. இந்த வெள்ளத்தால் கும்பு பசங்லாமு கிராமப்புற நகராட்சியில் பல வீடுகள் சேதமடைந்தன. [6]
நிலச்சரிவால் அடைக்கப்பட்ட ஆற்றின் உடைப்பினால் வெள்ளம் ஏற்பட்டதாக தொடக்கத்தில் நம்பப்பட்டது. இருப்பினும், ஒரு வான்வழி ஆய்வு காரணத்தை உறுதிசெய்து, இரண்டு ஏரிகள் உடைந்துவிட்டன என்பதை வெளிப்படுத்தியது, மீதமுள்ள மூன்று பனிப்பாறை ஏரிகளில் ஒன்று பாதுகாப்பானது, மற்ற இரண்டு இன்னும் ஆபத்தில் உள்ளன. ஆகத்து 9 முதல் அதிகரித்து வரும் வெப்பநிலை, வெள்ளம் ஏற்பட்ட நாளில் 15 டிகிரி செல்சியசாக உயர்ந்து, வெடிப்புக்கு பங்களித்தது. [7]
திடீரென்று ஏற்பட்ட வெள்ளத்தால், 40 குழந்தைகள் உட்பட 135 பேர் இடம்பெயர்ந்தனர். பெரும்பாலான குடியிருப்பாளர்கள் ஏற்கனவே காத்மாண்டு சென்றுவிட்டனர். வேறுசிலர் நாமிச்சே பசாரில் உள்ள வாராந்திர சந்தையில் இருந்தனர். அன்றைய தினம் பள்ளி மூடப்பட்டதால், மாணவர்கள் யாரும் காயமடையவில்லை. நேபாள ராணுவம் மற்றும் நேபாள காவல்துறை தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளில் ஈடுபடுத்தப்பட்டனர். பேரிடர் மீட்பு முயற்சிகளை உள்துறை அமைச்சகம் ஒருங்கிணைத்தது, உள்ளூர் அதிகாரிகள் நிவாரணத்தை வழங்கினர். வெள்ளம் முக்கிய சாலை வழித்தடங்கள் மற்றும் தகவல் தொடர்பு சேவைகளையும் சீர்குலைத்தது.[8]
துத்கோசி ஆற்றின் குறுக்கே வசிப்பவர்களை வெளியேற்றுமாறு அறிவுறுத்திய நீர்நிலை மற்றும் வானிலை ஆய்வு மையம் மேலும் வெள்ளம் மற்றும் நிலச்சரிவுகள் ஏற்படக்கூடும் என்று எச்சரித்தது.[9]
செப்டம்பர் வெள்ளங்கள்
தொகுசெப்டம்பர் 26 அன்று தொடங்கி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பலத்த மழை பெய்தது, இதனால் நாட்டின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பகுதிகளில் அதிக மழை பெய்தது. தென்கிழக்கு நேபாளத்தில் கோசி ஆற்றின் நீர் மட்டம் அபாய அளவை விட அதிகமாக இருந்தது. பாக்மதி ஆறு மற்றும் நக்கூ ஆற்றின் வெள்ளத்தால் பாக்மதி மாகாணம் பெரிதும் பாதிக்கப்பட்டது.[10][11][12] காத்மாண்டு பள்ளத்தாக்கு செப்டம்பர் மாதத்தில் 28ஆம் நாள் காலையிலிருந்து 29 ஆம் நாள் காலை வரையிலான 24 மணி நேர காலப்பகுதியில் 240 மிமீ (9.4 அங்குலம்) மற்றும் 322.2 மிமீ (12.7 அங்குலம்) அளவிலான மழைப்பொழிவைப் பெற்றது. இந்த மழைப்பொழிவானது, 1970 முதல் தலைநகரில் பதிவு செய்யப்பட்ட மிகப்பெரிய மழைப்பொழிவைக் குறிக்கிறது.[12][10][13] வெள்ளம் காரணமாக குறைந்தது 217 பேர் இறந்தனர் மற்றும் 28 பேர் காணாமல் போனது உறுதி செய்யப்பட்டது.[14] மேலும் 4,000 பேர் மீட்கப்பட்டனர் [15][16]
தலைநகர் காத்மாண்டுவிற்கு அருகேயிருந்த பாக்மதி ஆறு அதன் பாதுகாப்பான மட்டத்திலிருந்து இரண்டு மீட்டர் உயரத்திற்கு உயர்ந்தது, இதனால் நகரின் தெற்கில் ஒரு பெரிய பகுதி உட்பட பல பகுதிகளில் கடுமையான வெள்ளம் ஏற்பட்டது. பல குடியிருப்பாளர்கள் வீடுகளின் மேல் தளங்களில் தஞ்சம் புகுந்தனர், சிலர் உலங்கு வானூர்திகள் மற்றும் காற்றடைக்கப்பட்ட மிதவை மூலம் தங்கள் கூரைகளிலிருந்தும் வீடுகளிலிருந்தும் மீட்கப்பட்டனர். நகரின் பெரும்பகுதி மின்சாரம் மற்றும் இணைய வசதிகளையும் இழந்தது, மேலும் பல நீர்க்குழாய்கள் உடைக்கப்பட்டன. ஆயிரக்கணக்கான மக்கள் இடம்பெயர்ந்தனர் . நகரில் குறைந்தது 37 பேர் கொல்லப்பட்டனர், மேலும் பரந்த காத்மாண்டு பள்ளத்தாக்கில் மொத்தம் 56 இறப்புகள் பதிவாகியுள்ளன.[17] நேபாளம் முழுவதும் குறைந்தது 322 வீடுகளும் 16 பாலங்களும் சேதமடைந்தன. நேபாள ஊடகங்கள் இந்த மழையை காத்மாண்டு பல பதின்ம ஆண்டுகளில் அனுபவித்த மிக மோசமான மழை என்று விவரித்தன. பக்தபூர், தாதிங், தோலகா மாவட்டம் மற்றும் மக்வான்பூர் ஆகிய பகுதிகளிலும் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன, மேலும் லலித்பூரில் மீட்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.[18] பொக்காரா நகரமும் பலத்த வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.
போக்குவரத்து இடையூறு
தொகுமூன்று நெடுஞ்சாலைகள் (பிருத்வி நெடுஞ்சாலை உட்பட) மற்றும் காத்மாண்டுவை கிழக்கு நேபாளத்துடன் இணைக்கும் பல சாலைகளும் மழையால் ஏற்பட்ட நிலச்சரிவுகளால் அகற்றப்பட்டன. நிலச்சரிவில் சிக்கிய வாகனங்களில் இருந்து பிருத்வி நெடுஞ்சாலையில் குறைந்தது 35 உடல்கள் மீட்கப்பட்டன.[19] நிலச்சரிவுகளால் நகருக்குச் செல்லும் நெடுஞ்சாலைகள் சேதமடைந்ததால் காத்மாண்டு போக்குவரத்திலும் தடை ஏற்பட்டது. மேலும், நிலச்சரிவில் சிக்கிப் புதைந்து போவதற்கு முன்பு காத்மாண்டுவுக்குச் சென்ற இரண்டு பேருந்துகளில் இருந்து 14 உடல்கள் மீட்கப்பட்டன. பேருந்துகளுக்கு அருகில் மேலும் பல வாகனங்கள் புதைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. இதற்கு பதில் வினையாக, அதிகாரிகள் மகிழ்வுந்துகளைப் பயன்படுத்துவதைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தினர். நெடுஞ்சாலைகளில் இரவில் பேருந்துகள் பயணிக்கத் தடை விதித்தனர்.[10]
குப்பைகளாலும் மற்றும் சேதமடைந்த சாலைகளாலும் இருபத்தெட்டு இடங்களில் நெடுஞ்சாலைகள் தடைபட்டன. செப்டம்பர் 30ஆம் தேதிக்குள், அலுவலர்களால் பிருத்வி நெடுஞ்சாலையைத் தற்காலிகமாக திறக்க முடிந்தது.
பதில் வினை
தொகுஇராணுவப் படைகள் உட்பட அனைத்து படைகளையும் சேர்ந்த 3,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்புப் பணியாளர்கள் மோட்டார் படகுகள், காற்றடைக்கப்பட்ட மிதவைகள் மற்றும் உலங்கு வானூர்திகளைப் பயன்படுத்தி பாதுகாப்பு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்கு உதவ நியமிக்கப்பட்டனர்.[20]
செப்டம்பர் 27 அன்று, காத்மாண்டுவில் இருந்து புறப்படும் அனைத்து உள்நாட்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டன, இதனால் 150 க்கும் மேற்பட்ட புறப்பாடுகள் பாதிக்கப்பட்டன. பெரும்பாலும், செப்டம்பர் 29ஆம் நாளுக்குள் விமான சேவைகள் மீண்டும் தொடங்கப்பட்டன.
நேபாளத்தில் பள்ளிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மூன்று நாட்களுக்கு மூடப்பட்டன.
ஒருங்கிணைந்த மலை மேம்பாட்டுக்கான சர்வதேச மையம், நேபாளத்தின் உள்கட்டமைப்பில் முறையற்ற முதலீடு மற்றும் அதன் மோசமான திட்டமிடல் ஆகியவை பேரழிவின் அளவிற்கு பங்களித்தன என்று கூறியது. இன்னும் குறிப்பாக, திட்டமிடப்படாத குடியேற்றம், வெள்ளச் சமவெளிகளில் கட்டுமானம் மற்றும் நகரமயமாக்கல், நீர் பிடிப்புப் பகுதிகளின் பற்றாக்குறை மற்றும் பாக்மதி ஆற்றின் குறுக்கே வளர்ந்து வரும் மனிதக் குடியேற்றம் ஆகியவை ஒவ்வொன்றும் சோகத்தின் அளவிற்கு குறிப்பிடத்தக்க பங்களிப்பாளர்களாக குறிப்பிடப்பட்டன. நிலத்தடி புயல் நீர் அமைப்புகள் உட்பட வெள்ளத் தடுப்பு வழிமுறைகள் மற்றும் உள்கட்டமைப்பில் அரசாங்கம் அதிக முதலீடு செய்ய வேண்டும் என்று மையம் வலியுறுத்தியது.
மேற்கோள்கள்
தொகு- ↑ Sharma, Gopal (30 September 2024). "Nepal begins to assess damage after deadly rains, floods kill 192". ராய்ட்டர்ஸ். https://www.reuters.com/business/environment/nepal-begins-assess-damage-after-deadly-rains-floods-kill-192-2024-09-30/.
- ↑ "Nepal floods and landslides death toll tops 100, dozens still missing". Al Jazeera. 28 September 2024. Archived from the original on 28 September 2024. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.
- ↑ "Nepal floods, landslides leave 104 people dead". Deutsche Welle. 29 September 2024. Archived from the original on 29 September 2024. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.
- ↑ Ghimire, Yubaraj (29 September 2024). "Floods, landslides wreak havoc in Nepal: At least 100 dead, dozens missing". இந்தியன் எக்சுபிரசு (in ஆங்கிலம்). Archived from the original on 29 September 2024. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.
- ↑ "Photos: 14 killed in Nepal as flooding grips South Asia". Al Jazeera. 7 July 2024. பார்க்கப்பட்ட நாள் 29 September 2024.
- ↑ Sen, Sandeep (16 August 2024). "Devastating flash flood sweeps through Thame village after possible glacial lake outburst". The Himalayan Times. Archived from the original on 17 August 2024. பார்க்கப்பட்ட நாள் 18 August 2024.
- ↑ "Flood in Thame due to outburst of two glacial lakes". The Rising Nepal. 17 August 2024. Archived from the original on 18 August 2024. பார்க்கப்பட்ட நாள் 18 August 2024.
- ↑ Singh Rai, Dambar (17 August 2024). "Rare flood destroys 12 houses, a school and a clinic in Everest village". The Kathmandu Post. Archived from the original on 18 August 2024. பார்க்கப்பட்ட நாள் 18 August 2024.
- ↑ Pahari, Sara (17 August 2024). "Catastrophic floods devastate Thame village as one person goes missing". My República. Archived from the original on 18 August 2024. பார்க்கப்பட்ட நாள் 18 August 2024.
- ↑ 10.0 10.1 10.2 Gurubacharya, Binaj (28 September 2024). "Flooding and landslides in Nepal kill at least 66 people, with as many again still missing". அசோசியேட்டட் பிரெசு (in ஆங்கிலம்). Archived from the original on 29 September 2024. பார்க்கப்பட்ட நாள் 30 September 2024.
- ↑ "More than 100 killed and 64 missing as flooding and landslides hit Nepal". 29 September 2024 இம் மூலத்தில் இருந்து 1 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241001012224/https://www.theguardian.com/world/2024/sep/28/at-least-66-killed-and-69-missing-as-flooding-and-landslides-hit-nepal.
- ↑ 12.0 12.1 Sharma, Gopal (29 September 2024). "Nepal closes schools as deaths from heavy rains hit 151". https://www.reuters.com/world/asia-pacific/nepal-closes-schools-after-heavy-rains-kill-100-2024-09-29/.
- ↑ Uprety, Madhab (29 September 2024). "Nepal floods follow most intense rainfall for more than half a century". Red Cross Red Crescent Climate Centre. Archived from the original on 30 September 2024. பார்க்கப்பட்ட நாள் 30 September 2024.
- ↑ "Nepal death toll climbs to 217 after heavy floods and landslips". 1 October 2024. https://www.thehindu.com/news/international/several-people-die-in-nepal-after/article68704371.ece.
- ↑ "Flood and landslides claim 170 lives in Nepal". 30 September 2024. https://economictimes.indiatimes.com/news/international/world-news/nepal-floods-and-landslides-cause-widespread-destruction-leads-to-112-deaths/articleshow/113777890.cms?from=mdr.
- ↑ "Nepal closes schools as deaths from flooding and landslides reach at least 170". 29 September 2024 இம் மூலத்தில் இருந்து 30 September 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20240930000605/https://www.abc.net.au/news/2024-09-30/nepal-closes-schools-flooding-landslides-deaths-kill-151/104411594.
- ↑ "Nepal begins to assess damage after deadly rains, floods kill 192". Daily Maverick. 30 September 2024. Archived from the original on 1 October 2024. பார்க்கப்பட்ட நாள் 30 September 2024.
- ↑ Regan, Helen; Khanal, Nishant; Yee, Isaac (30 September 2024). "Rescuers use zip lines and boats to reach survivors as Nepal flooding and landslides kill nearly 200 people". CNN. Archived from the original on 1 October 2024. பார்க்கப்பட்ட நாள் 30 September 2024.
- ↑ Phillips, Aleks; Dhakal, Sanjaya (29 September 2024). "Nepal floods: Almost 150 dead and dozens missing after days of heavy rainfall around Kathmandu". பிபிசி (in பிரிட்டிஷ் ஆங்கிலம்). Archived from the original on 1 October 2024. பார்க்கப்பட்ட நாள் 30 September 2024.
- ↑ Ellis-Petersen, Hannah (30 September 2024). "More than 200 dead in Nepal floods, as parts of Kathmandu left under water" இம் மூலத்தில் இருந்து 1 October 2024 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20241001012257/https://www.theguardian.com/world/2024/sep/30/more-than-200-dead-in-nepal-floods-as-parts-of-kathmandu-left-under-water.