(மரபுவழிச் சீனம்: 廿四味 or 廿四老味茶மாண்டரின் பின்யின்: niànJyutping: jaa6 sei3 mei6) கண்டோனீயம் மூலிகை தேநீர், மருத்துவ நோக்கங்களுக்காகக் குடிக்கப்படுகிறது. இதன் பெயர் குறிப்பிடுவது போலப் பல வேறுபட்ட பொருட்களின் கலவை இந்த தேநீராகும். சுமார் 24 மருத்துவ குணமுள்ள பொருட்கள் இதில் காணப்படும். சிலவற்றில் 10 அல்லது 28 மேற்பட்ட கலவையும் கொண்டிருக்கலாம். சரியான கலவை வரைமுறையில்லாததால் தயாரிப்பாளருக்கு ஏற்ப இதில் கலந்துள்ள பொருட்கள் மாறுபடலாம்.

தேநீர் சுவையில் ஓரளவு கசப்பானது. சீன மருத்துவத்தின்படி அதிகப்படியான 'ஈட் ஹே' அல்லது 'சூடான காற்று' கொண்ட ஒரு நபரால் பயன்படுத்தப்படலாம்.[1]

சேர்க்கைப் பொருட்கள் (மாறுபடும்)

தொகு
  • முசுக்கொட்டை இலை (桑叶) [2]
  • சிவந்தி மலர் (菊花)
  • ஜப்பானிய ஹனிசக்கிள் மலர் (金银花)
  • மூங்கில் இலை (竹叶)
  • மிளகுக்கீரை (薄荷)
  • இம்பெரட்டா சிலிண்ட்ரிகா (茅根)
  • லுஹான் குவோ (罗汉果)
  • அகஸ்டாச் ருகோசா (藿香)
  • பெரில்லா ஃப்ரூட்ஸென்ஸ் (紫苏)
  • எல்ஷோல்ட்ஸியா (香薷)
  • புளித்த சோயாபீன் (淡豆鼓)
  • கிளீஸ்டோகாலிக்ஸ் ஓபர்குலட்டஸ் மலர் (水翁花)
  • மைக்ரோகோஸ் பானிகுலட்டா இலை (布渣叶)
  • ஐலெக்ஸ் ரோட்டுண்டா (救必应)

மேலும் காண்க

தொகு

மேற்கோள்கள்

தொகு
  1. "Chinese medicine". பார்க்கப்பட்ட நாள் 2016-02-24.
  2. Goon, Krista (2011-08-31). "The Soup Queen". பார்க்கப்பட்ட நாள் 2016-02-24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=24_நறுமணம்&oldid=3421459" இலிருந்து மீள்விக்கப்பட்டது