274301 விக்கிப்பீடியா
274301 விக்கிப்பீடியா (provisional designations: 2008 QH24, 2007 FK34, 1997 RO4) ஒரு முதன்மை பட்டை சிறுகோள் ஆகும். இது ஆகஸ்ட் 2008இல், ஆண்ட்ருசிவ்கா வானாய்வகத்தினால் கண்டறியப்பட்டது. இந்த சிறுகோள் ஜனவரி 2013ல் இணையக் கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவின் நினைவாக விக்கிப்பீடியா எனப் பெயரிடப்பட்டது.[2]
கண்டுபிடிப்பு
| |
---|---|
கண்டுபிடிக்கப்பட்ட இடம் | ஆண்ட்ருசிவ்கா வானாய்வகம் |
கண்டுபிடிப்பு நாள் | ஆகஸ்ட் 25, 2008 |
பெயர்க்குறிப்பினை
| |
குறுங்கோள்களின் பெயர்கள்|எம்பிசி பெயர் | 274301 விக்கிப்பீடியா |
வேறு பெயர்கள் | 2008 QH24, 2007 FK34, 1997 RO4 |
சிறு கோள் பகுப்பு |
முதன்மை பட்டை சிறுகோள் |
காலகட்டம்JD 2456400.5 (ஏப்ரல் 18, 2013) | |
சூரிய சேய்மை நிலை | 2.7304718 AU (408,472,770 km) |
சூரிய அண்மை நிலை | 2.0353200 AU (304,479,540 km) |
அரைப்பேரச்சு | 2.3828959 AU (356,476,150 km) |
மையத்தொலைத்தகவு | 0.1458628 |
சுற்றுப்பாதை வேகம் | 1343.5568 நாள்s 3.68 years |
சராசரி பிறழ்வு | 105.33152° |
சாய்வு | 6.72984° |
Longitude of ascending node | 183.49232° |
Argument of perihelion | 139.63634° |
சிறப்பியல்பு
| |
விண்மீன் ஒளிர்மை | 16.9 |
கண்டுபிடிப்பு
தொகுஇச்சிறுகோள் உக்ரைன் நாட்டின் ஒரேயொரு தனியார் வானாய்வகமான, ஆண்ட்ருசிவ்கா வானாய்வகத்தின் (A50) வானாய்வாளர்களால் கண்டறியப்பட்டது.[3] இவ்வானாய்வகம் 2003லிருந்து 90 சிறுகோள்களுக்கு மேல் கண்டறிந்துள்ளது.[4] இச்சிறுகோள் முதன்முதலில் ஆகஸ்ட் 25, 2008, 22:47 (UTC) அன்று ஆண்ட்ருசிவ்கா குழுவினரால் அவதானிக்கப்பட்டது.[5] பிறகு அதற்கடுத்த நாள் இரவும் அவதானிக்கப்பட்டது, மேலும் இதற்கு தற்காலிக பெயர் 2008 QH24 வழங்கப்பட்டது.[6] பிறகு இச்சிறுகோள் செப்டெம்பர் 6 ஆம் தேதியும் ஆண்ட்ருசிவ்கா குழுவினரால் அவதானிக்கப்பட்டது, மேலும் இதன் சுற்றுவட்டப்பாதையும் துல்லியமாக கணக்கிடப்பட்டது. ஏப்ரல் 18, 2011 அன்று எண் 274301 இச்சிறுகோளுக்கு வழங்கப்பட்டது.[7]
மேற்கோள்கள்
தொகு- ↑ 274301 விக்கிப்பீடியா at the JPL Small-Body Database
- ↑ IAU Minor Planet Circular, page 82403 (January 27, 2013)
- ↑ RegioNews (January 31, 2013). "Астероїд, відкритий в Україні, було названо «Вікіпедія»". Archived from the original on திசம்பர் 24, 2018. பார்க்கப்பட்ட நாள் பெப்பிரவரி 5, 2013.
- ↑ Minor Planet Center (January 30, 2013). "Minor Planet Discoverers".
- ↑ Minor Planet Center (January 30, 2013). "(274301) Wikipedia = 1997 RO4 = 2007 FK34 = 2008 QH24".
- ↑ Minor Planet Center (September 14, 2008). "MPS 255948" (PDF).
- ↑ Minor Planet Center (April 18, 2011). "MPC 74684" (PDF).