3,3-பிசு (குளோரோமெத்தில்) ஆக்சிடேன்

3,3-பிசு (குளோரோமெத்தில்) ஆக்சிடேன் (3,3-Bis(chloromethyl)oxetane) என்பது C5H8Cl2O என்ற வாய்ப்பாட்டைக் கொண்ட கரிம வேதியியல் சேர்மம் ஆகும். அமெரிக்க அரசு இச்சேர்மத்தை மிகவும் அபாயகரமான சேர்மம் என வகைப்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் அவசரகால திட்டமிடல் மற்றும் சமூக தகவலறியும் உரிமை சட்டம் (42 யு.எசு.சி 11002) பிரிவு 302 வரையறையிலும் இது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. தயாரித்தல், சேமித்தல் அல்லது குறிப்பிடத்தக்க அளவிற்கு அதைப் பயன்படுத்துதல் ஆகியவை கடுமையான கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படுகின்றன[2]. இவ்வேதிப்பொருளை உட்கொள்ளுவதால் சிறுநீரக பாதிப்பு, கண்ணீர்வழிதல் மற்றும் இறப்பு ஆகியவற்றை சந்திக்க நேரிடும்[1].

3,3-பிசு (குளோரோமெத்தில்) ஆக்சிடேன்
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
3,3-பிசு(குளோரோமெத்தில்)ஆக்சிடேன்
வேறு பெயர்கள்
3,3-டைகுளோரோமெத்தில் ஆக்சிவளைய பியூட்டேன்; பிசிஎம்ஓ
இனங்காட்டிகள்
78-71-7
ChemSpider 6302
InChI
  • InChI=1S/C5H8Cl2O/c6-1-5(2-7)3-8-4-5/h1-4H2
    Key: CXURGFRDGROIKG-UHFFFAOYSA-N
  • InChI=1/C5H8Cl2O/c6-1-5(2-7)3-8-4-5/h1-4H2
    Key: CXURGFRDGROIKG-UHFFFAOYAZ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 6550
  • ClCC1(CCl)COC1
பண்புகள்
C5H8Cl2O
வாய்ப்பாட்டு எடை 155.02 g·mol−1
தோற்றம் கருப்பு நிறம் அல்லது ஆலிவ் பச்சை நிற திண்மம்[1]
உருகுநிலை 18.9 °C (66.0 °F; 292.0 K)[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.

3,3-பிசு (குளோரோமெத்தில்) ஆக்சிடேன் ஒரு பயனுள்ள பலபடிக்கு முந்தைய ஒருபடியாகும். உலகெங்கிலும் இதை ஓர் ஆற்றலமிகு பொருளாக இராணுவ பயன்பாடுகளுக்கு பயன்படுத்துவது தொடர்பான ஆய்வுகள் மேற்கொள்ளப்படுகின்றன. நடைமுறையில் பயன்படுத்தப்படும் உந்துபொருள் பிணைப்பிக்கு மாற்றாக இதைப் பயன்படுத்தும் திறன் மிக்க பொருளாகவும் கருதப்படுகிறது[3].

மேற்கோள்கள்

தொகு