3,4-ஈரைதரோபிரான்
3,4-ஈரைதரோபிரான் (3,4-Dihydropyran) என்பது C5H8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் பல்லினவளையச் சேர்மமாகும். ஆறு உறுப்புகள் கொண்ட C5O வளையமானது ஆக்சிசனை ஒட்டி நிறைவுறாத்தன்மையைக் கொண்டுள்ளது. மாற்றியமான 3,6-ஈரைதரோபிரானில் உள்ள மெத்திலீன் குழு இரட்டைப் பிணைப்பையும் ஆக்சிசனையும் பிரிக்கிறது. ஈரைதரோபிரான்கள் ஆல்ககால்களுக்கான பாதுகாப்புக் குழுவாகப் பயன்படுத்தப்படுகின்றன. இதுவொரு நிறமற்ற நீர்மமாகும். [1]
பெயர்கள் | |
---|---|
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
3,4-ஈரைதரோ-2ஐ-பிரான் | |
வேறு பெயர்கள்
2,3-ஈரைதரோ-4ஐ-பிரான், டி.எச்.பி
| |
இனங்காட்டிகள் | |
110-87-2 | |
ChEMBL | ChEMBL3184439 |
ChemSpider | 7789 |
EC number | 203-810-4 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image
3,4 மாற்றியம் |
பப்கெம் | 8080 |
| |
UNII | T6V9N71IHX |
UN number | 2376 |
பண்புகள் | |
C5H8O | |
வாய்ப்பாட்டு எடை | 84.12 g·mol−1 |
தோற்றம் | நிறமற்ற நீர்மம் |
அடர்த்தி | 0.922 கி/மிலி |
உருகுநிலை | −70 °C (−94 °F; 203 K) |
கொதிநிலை | 86 °C (187 °F; 359 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
H225, H315, H317, H319 | |
P210, P233, P240, P241, P242, P243, P261, P264, P272, P280, P302+352, P303+361+353, P305+351+338, P321 | |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
தயாரிப்பு
தொகுடெட்ரா ஐதரோபர்பியூரைல் ஆல்ககாலை 300-400 பாகை செல்சியசு வெப்பநிலையில் அலுமினாவின் மீது செலுத்தி நிர் நீக்க வினைக்கு உட்படுத்தி 3,4-ஈரைதரோபிரான் தயாரிக்கப்படுகிறது.[2] டெட்ரா ஐதரோபோலிக் அமிலத்தை டெட்ரா ஐதரோ-2-பரோயிக் அமிலத்தைக் கொண்டு தயாரிக்கலாம்.
வினைகள்
தொகுகரிமத் தொகுப்பு வினைகளில் 2-டெட்ரா ஐதரோபிரானைல் குழுவானது ஆல்க்கால்களை பாதுகாக்கும் குழுவாகப் பயன்படுத்தப்படுகிறது. [3][4]
ஈரைதரோபிரானுடன் ஆல்ககால் வினைபுரியும்போது டெட்ரா ஐதரோபிரான் ஈதர் உருவாகி ஆல்ககாலை பல்வேறு வகையான வினைகளில் இருந்து பாதுகாக்கிறது. ஆல்ககால் பின்னர் அமில நீராற்பகுப்பு மூலம் மீட்டமைக்கப்படுகிறது. இது 5-ஐதராக்சிபெண்டனால் உருவாவதோடு இணைகிறது. [5]
மேற்கோள்கள்
தொகு- ↑ Paul Ch. Kierkus (2001). "3,4‐Dihydro‐2H‐pyran". eEROS. doi:10.1002/047084289X.rd230.
- ↑ R. L. Sawyer and D. W. Andrus (1955). "2,3-Dihydropyran". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv3p0276.; Collective Volume, vol. 3, p. 276
- ↑ R. A. Earl L. B. Townsend (1990). "Methyl 4-Hydroxy-2-butynoate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv7p0334.; Collective Volume, vol. 7, p. 334
- ↑ Arthur F. Kluge (1990). "Diethyl [(2-Tetrahydropyranyloxy)methyl]phosphonate". Organic Syntheses. http://www.orgsyn.org/demo.aspx?prep=cv7p0160.; Collective Volume, vol. 7, p. 160
- ↑ Wuts, Peter G. M.; Greene, Theodora W. (2006). "Protection for the Hydroxyl Group, Including 1,2‐ and 1,3‐Diols". Greene's Protective Groups in Organic Synthesis (4th ed.). pp. 16–366. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1002/9780470053485.ch2. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9780470053485.