3-மெத்தில்-3-ஆக்டனால்
3-மெத்தில்-3-ஆக்டனால் (3-Methyl-3-octanol) C9H20O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடும் CH3(CH2)4C(CH3)(CH2CH3)OH என்ற அமைப்பு வாய்ப்பாடும் கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐயுபிஏசி பெயரிடும் முறையில் இச்சேர்மம் 3-மெத்திலோக்டேன்-3-ஆல் என்ற பெயரால் அழைக்கப்படுகிறது. எளிய மூன்றாம் நிலை ஆல்ககாலான இச்சேர்மம் திட்ட வெப்ப அழுத்தத்தில் நிறமற்ற நீர்மமாகவும் சுவையற்றும் காணப்படுகிறது. வறுத்த மாட்டிறைச்சியின்[2] மணத்தை 3-மெத்தில்-3-ஆக்டனால் தருவதால் உணவுத் துறையில் மணம் மற்றும் சுவையூட்டும் முகவராக பயன்படுத்தப்படுகிறது. ஆண்ட்ரோடியா காம்பரேடா வகை பூஞ்சை உயிர்வேதியியல் முறையில் 3-மெத்தில்-3-ஆக்டனால் சேர்மத்தை உற்பத்தி செய்கின்றது என அறியப்பட்டுள்ளது. மேலும் இச்சேர்மம் ஒரு நாற்தொகுதி மையமாகும். இதன் ஒவ்வொரு மாற்றியனும் வெவ்வேறு வகை மணத்தை அளிக்கின்றன.
பெயர்கள் | |
---|---|
ஐயூபிஏசி பெயர்
3-மெத்திலோக்டான்-3-ஓல்
| |
வேறு பெயர்கள்
அமைலெத்தில்மெத்தில்கார்பினால்
2-எத்தில்-2-எப்டனால் 3-மெத்திலோக்டான்-3-ஓல் | |
இனங்காட்டிகள் | |
5340-36-3 | |
ChemSpider | 20143 |
யேமல் -3D படிமங்கள் | Image Image |
பப்கெம் | 21432 |
| |
பண்புகள் | |
C9H20O | |
வாய்ப்பாட்டு எடை | 144.2545 கி/மோல் |
அடர்த்தி | 0.822 கி/மி.லி |
கொதிநிலை | 127 °C (261 °F; 400 K) |
தீங்குகள் | |
தீப்பற்றும் வெப்பநிலை | 73 °C (163 °F; 346 K) |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
மேற்கோள்கள்
தொகு- ↑ Methyl n-amyl ketone, PubChem Database (NCBI/NIH)
- ↑ Hsu, Chen-Ming; Peterson, Robert J.; Jin, Qi Zhang; Ho, Chi-Tang; Chang, Stephen S. (1 November 1982). "Characterization of new volatile compounds in the neutral fraction of roasted beef flavor". Journal of Food Science 47 (6): 2068–2069. doi:10.1111/j.1365-2621.1982.tb12950.x. http://onlinelibrary.wiley.com/doi/10.1111/j.1365-2621.1982.tb12950.x/abstract. பார்த்த நாள்: 19 July 2013.