4-அனிசால்டிகைடு

4-அனிசால்டிகைடு (4-Anisaldehyde) என்பது C8H8O2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். பாரா-அனிசால்டிகைடு, அனிசிக் ஆல்டிகைடு, அனிசு ஆல்டிகைடு போன்ற பெயர்களாலும் இது அழைக்கப்படுகிறது. பொதுவாக இயற்கை மற்றும் செயற்கை நறுமணப்பொருள்கள் இரண்டிலும் காணப்படுகிறது. 4-அனிசால்டிகைடின் கட்டமைப்பில் ஒரு பென்சீன் வளையமும் ஓர் ஆல்டிகைடு மற்றும் மெத்தாக்சி குழுவும் இடம்பெற்றுள்ளன. தெளிவான நீர்மமான இச்சேர்ம்ம் வலுவான அரோமாட்டிக் பண்பைப் பெற்றுள்ளது. ஆர்த்தோ-அனிசால்டிகைடு, மெட்டா-அனிசால்டிகைடு என்ற தொடர்புடைய இரண்டு மாற்றியன்கள் அறியப்பட்டாலும் அவை அரிதாகவே தோன்றுகின்றன. மலர் போன்ற இனிய நுகரும் வாசனையைக் கொண்டுள்ள சேர்மமாகும்.

4-அனிசால்டிகைடு4-Anisaldehyde[1]
Skeletal formula of anisaldehyde
Ball-and-stick model of the anisaldehyde molecule
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-மெத்தாக்சிபென்சால்டிகைடு
முறையான ஐயூபிஏசி பெயர்
4-மெத்தாக்சிபென்சீன்கார்பால்டிகைடு
வேறு பெயர்கள்
  • 4-Anisaldehyde
  • பாரா-அனிசால்டிகைடு
  • 'பா-அனிசால்டிகைடு
  • அனிசிக் ஆல்டிகைடு
  • அனிசு ஆல்டிகைடு
இனங்காட்டிகள்
123-11-5 Y
ChEMBL ChEMBL161598 N
ChemSpider 28984 Y
21105937
InChI
  • InChI=1S/C8H8O2/c1-10-8-4-2-7(6-9)3-5-8/h2-6H,1H3
    Key: ZRSNZINYAWTAHE-UHFFFAOYSA-N
  • InChI=1/C8H8O2/c1-10-8-4-2-7(6-9)3-5-8/h2-6H,1H3
    Key: ZRSNZINYAWTAHE-UHFFFAOYAA
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 31244
  • COc1ccc(C=O)cc1
UNII 9PA5V6656V Y
பண்புகள்
C8H8O2
வாய்ப்பாட்டு எடை 136.15 g·mol−1
அடர்த்தி 1.119 கி/செ.மீ3[2]
உருகுநிலை −1 °C (30 °F; 272 K)[2]
கொதிநிலை 248 °C (478 °F; 521 K)[2]
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை 108 °C (226 °F; 381 K)
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

உற்பத்தி

தொகு

மெத்தாக்சிதொலுயீனை (பாரா-கிரெசைல் மெத்தில் ஈதர்) மாங்கனீசு டை ஆக்சைடைப் பயன்படுத்தி ஆக்சிசனேற்றம் செய்து வர்த்தகமுறையில் அனிசால்டிகைடு தயாரிக்கப்படுகிறது. சில ஆல்க்கால் தன்மை கொண்ட பானங்களில் காணப்படும் அனிதோல் எனப்படும் நறுமணப்பொருளை ஆக்சிசனேற்றம் செய்தும் இதை தயாரிக்கலாம் [3].

பயன்கள்

தொகு

அமைப்புரீதியாக வனில்லின் சேர்மத்துடன் தொடர்புடையதாக இருப்பதால் அனிசால்டிகைடு நறுமணம் மற்றும் நறுமணச்சுவை தொழிலில் பெரிதும் பயன்படுகிறது [3]. மருந்துகள் மற்றும் நறுமணங்கள் போன்ற பிற கரிமச் சேர்மங்களைத் தயாரிக்கும் போது இடைநிலை விளைபொருளாகவும் பயன்படுகிறது. ஆர்த்தோ-அனிசால்டிகைடு அதிமதுரத்தின் நறுமணம் போன்ற மணத்தை கொண்டதாகும். அமிலம் மற்றும் எத்தனாலிலுள்ள பாரா-அனிசால்டிகைடு மென்படல நிறப்படிவு பிரிகையியலில் மிகுந்த பயனை அளிக்கிறது [4]. தட்டுகளிலுள்ள வெவ்வேறு வேதிச்சேர்மங்கள் வெவ்வேறு வண்ணங்களைத் தருவதால் வேறுபடுத்தி அறிவது எளிமையாக முடிகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Merck Index, 11th Edition, 693
  2. 2.0 2.1 2.2 "p-Anisaldehyde". Sigma-Aldrich.
  3. 3.0 3.1 Karl-Georg Fahlbusch, Franz-Josef Hammerschmidt, Johannes Panten, Wilhelm Pickenhagen, Dietmar Schatkowski, , Kurt Bauer, Dorothea Garbe and Horst Surburg "Flavors and Fragrances" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH, Weinheim, 2003. எஆசு:10.1002/14356007.a11_141
  4. Stains for Developing TLC Plates
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-அனிசால்டிகைடு&oldid=2618101" இலிருந்து மீள்விக்கப்பட்டது