4-அமினோபிரிடின்

இரசாயன கலவை

4-அமினோபிரிடின் (4-Aminopyridine) என்பது C5H4N–NH2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டை உடைய கரிமச் சேர்மம் ஆகும். இந்த மூலக்கூறானது, பிரிடினின் மூன்று மாற்றிய அமீன்களில் ஒன்றாகும். பொட்டாசியத்தின் வழியை அடையாளப்படுத்தும் துணைவகைகளைக் கண்டறிய ஆய்வுக்கருவியாக இது பயன்படுத்தப்படுகிறது. இது தண்டுவட மரப்பு நோயின் அறிகுறிகளைக் கையாள உதவும் மருந்தாகவும் பயன்படுத்தப்படுகிறது.[1][2]நோயின் பல்வேறு மாறுபாடுகளைத் தொடர்ந்து, வயது வந்தோரின் நடை வேகத்தை அதிகரிப்பதற்காகவும் மருத்துவர்களால் பரிந்துரைக்கப்படுகிறது.[3] இந்த மருந்தானது 2008 ஆம் ஆண்டில் சிகிச்சையளிப்பதில் பயன்படுத்துவதற்கான மூன்றாம் நிலை பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டது.[4] மேலும், ஐக்கிய அமெரிக்க மருந்து மற்றும் உணவு நிர்வாகத்தால் சனவரி 22, 2010 அன்று அங்கீகரிக்கப்பட்டது.[5]

4-அமினோபிரிடின்
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
பிரிடின்-4-அமீன்
வேறு பெயர்கள்
4-பிரிடினமீன்
4-பிரிடைலமீன்
ஃபாம்பிரிடின் (INN)
டால்ஃபாம்பிரிடின் (USAN)
இனங்காட்டிகள்
504-24-5 Y
ChEBI CHEBI:34385 Y
ChEMBL ChEMBL284348 Y
ChemSpider 1664 Y
InChI
  • InChI=1S/C5H6N2/c6-5-1-3-7-4-2-5/h1-4H,(H2,6,7) Y
    Key: NUKYPUAOHBNCPY-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C5H6N2/c6-5-1-3-7-4-2-5/h1-4H,(H2,6,7)
    Key: NUKYPUAOHBNCPY-UHFFFAOYAH
IUPHAR/BPS
2416
யேமல் -3D படிமங்கள் Image
KEGG D04127 Y
ம.பா.த 4-அமினோபிரிடின்
பப்கெம் 1727
SMILES
  • n1ccc(N)cc1
UNII BH3B64OKL9 Y
பண்புகள்
C5H6N2
வாய்ப்பாட்டு எடை 94.1146 கி/மோல்
தோற்றம் நிறமற்ற திண்மம்
உருகுநிலை 155 முதல்[convert: unknown unit]
கொதிநிலை 273 °C (523 °F; 546 K)
முனைப்புள்ள கரிமக் கரைப்பான்களில் கரையும்
மருந்தியல்
ATC code
Pharmacokinetics:
Routes of
administration
வாய்வழி
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references
4-அமினோபிரிடின்

தயாரிப்பு தொகு

4-அமினோபிரிடினானது, பிரிடின்-4-கார்பாக்சமைடை சோடியம் ஹைப்போ குளோரைட்டைப் பயன்படுத்தி கார்போனைல் நீக்கம் செய்யும் ஆஃப்மேன் மறுசீரமைப்பு வினையின் மூலமாகத் தயாரிக்கப்படுகிறது. பிரிடின் கார்பாக்சமைடானது தொடர்புடைய நைட்ரைல் சேர்மத்திலிருந்து உருவாக்கப்படுகிறது. அந்த நைட்ரைலானது, 4-மெதில்பிரிடினை அம்மோனியாக்கம் மற்றும் ஆக்சிசனேற்றம் செய்வதனால் கிடைக்கப்பெறுகிறது.[6]

தயாரிப்பு தொகு

4-அமினோபிரிடினானது, பிரிடின்-4-கார்பாக்சமைடை சோடியம் ஹைப்போ குளோரைட்டைப் பயன்படுத்தி கார்போனைல் நீக்கம் செய்யும் ஆஃப்மேன் மறுசீரமைப்பு வினையின் மூலமாகத் தயாரிக்கப்படுகிறது. பிரிடின் கார்பாக்சமைடானது தொடர்புடைய நைட்ரைல் சேர்மத்திலிருந்து உருவாக்கப்படுகிறது. அந்த நைட்ரைலானது, 4-மெதில்பிரிடினை அம்மோனியாக்கம் மற்றும் ஆக்சிசனேற்றம் செய்வதனால் கிடைக்கப்பெறுகிறது.[6]

பயன்பாடுகள் தொகு

ஆய்வகத்தில், 4-AP என்பது உடற்கூறியல் மற்றும் உயிரி இயற்பியல் ஆகியவற்றில் பல்வேறு பொட்டாசியம் நடத்தைகளை ஆராயும் ஒரு பயனுள்ள மருந்தியல் கருவியாகும்.

மேற்கோள்கள் தொகு

  1. Solari, Alessandra, தொகுப்பாசிரியர் (2002). "Aminopyridines for symptomatic treatment in multiple sclerosis". Cochrane Database Syst Rev (4): CD001330. doi:10.1002/14651858.CD001330. பப்மெட்:12804404. 
  2. "Sustained-release fampridine for symptomatic treatment of multiple sclerosis". Ann Pharmacother 42 (10): 1458–65. October 2008. doi:10.1345/aph.1L028. பப்மெட்:18780812. https://archive.org/details/sim_annals-of-pharmacotherapy_2008-10_42_10/page/1458. 
  3. "New Drugs: Fampridine". Australian Prescriber (34): 119–123. August 2011 இம் மூலத்தில் இருந்து 2012-02-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20120227164713/http://www.australianprescriber.com/magazine/34/4/119/123/new-drugs-962/fampridine. 
  4. "Acorda Clinical Development and Product Pipeline - Acorda.com". www.acorda.com.
  5. "FDA Approves Ampyra to Improve Walking in Adults with Multiple Sclerosis". fda.gov.
  6. 6.0 6.1 Shinkichi Shimizu, Nanao Watanabe, Toshiaki Kataoka, Takayuki Shoji, Nobuyuki Abe, Sinji Morishita, Hisao Ichimura "Pyridine and Pyridine Derivatives" in "Ullmann's Encyclopedia of Industrial Chemistry" 2007; John Wiley & Sons: New York.

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=4-அமினோபிரிடின்&oldid=3521131" இலிருந்து மீள்விக்கப்பட்டது