4-எத்தில்பீனால்

முன்னோடிச் சேர்மமான பாரா-குமாரிக் அமிலத்திலிருந்து 4-எத்தில்பீனால் உற்பத்தி செய்யப்படுகிறது

4-எத்தில்பீனால் (4-Ethylphenol) என்பது C8H10O என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும்.

4-எத்தில்பீனால்
4-Ethylphenol[1]
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-எத்தில்பீனால்
வேறு பெயர்கள்
பாரா-எத்தில்பீனால் [2])
1-எத்தில்-4-ஐதராக்சிபென்சீன்
1-ஐதராக்சி-4-எத்தில்பென்சீன்
4-ஐதராக்சிபீனைல்யீத்தேன்
இனங்காட்டிகள்
123-07-9 Y
ChEBI CHEBI:49584 Y
ChEMBL ChEMBL108475 Y
ChemSpider 28982 Y
InChI
  • InChI=1S/C8H10O/c1-2-7-3-5-8(9)6-4-7/h3-6,9H,2H2,1H3 Y
    Key: HXDOZKJGKXYMEW-UHFFFAOYSA-N Y
  • InChI=1/C8H10O/c1-2-7-3-5-8(9)6-4-7/h3-6,9H,2H2,1H3
    Key: HXDOZKJGKXYMEW-UHFFFAOYAF
யேமல் -3D படிமங்கள் Image
KEGG C13637 Y
SMILES
  • Oc1ccc(cc1)CC
UNII AGG7E6G0ZC Y
பண்புகள்
C8H10O
வாய்ப்பாட்டு எடை 122.16 கி/மோல்
தோற்றம் வெண் திண்மம்
உருகுநிலை 42 முதல் 45 °C (108 முதல் 113 °F; 315 முதல் 318 K)
கொதிநிலை 218 °C (424 °F; 491 K)
தீங்குகள்
ஈயூ வகைப்பாடு Irritant Xi
S-சொற்றொடர்கள் S7/9 S26 S36/37/39 S45
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

இயற்கைத் தோற்றம் தொகு

பிரட்டானோமைசெசு என்ற அழுகிய ஈசுட்டுவினால் மது மற்றும் பியர் போன்ற பானங்களில் 4-எத்தில்பீனால் உற்பத்தி செய்யப்படுகிறது. உணர்வுத் தொடக்கநிலை 140 மைக்ரோ கிராம்/லிட்டர் என்ற அளவுக்கு அதிகமான அடர்த்தியை எட்டும்போது மதுவின் வாசனையைச் இச்சேர்மம் கொடுக்கிறது. சில பியர் வகைகளில் உயர் 4-எத்தில்பீனால் அளவு அனுமதிக்கப்படுகிறது. இருப்பினும் மீவுயர் அளவு 4-எத்தில்பீனால் அளவு பியரை குடிக்கமுடியாத பானமாக்கிவிடுகிறது. 4-எத்தில்பீனாலின் இந்த அளவு பிரட்டானோமைசெசின் அடர்த்தியோடும் நடவடிக்கையோடும் விகிதச்சம தொடர்பைக் கொண்டுள்ளது. எனவே ஈசுட்டின் இருப்பினைக் கண்டறிய உதவும் அடையாளங்காட்டியாக பயன்படுத்தப்படுகிறது. 4-எத்தில்பீனால் உற்பத்தி செய்யும் திறனில் பிரட்டானோமைசசின் முயற்சிகளிடையே குறிப்பிடத்தக்க வேறுபாடுகள் உள்ளன.

உயிர் வேதியியல் தொகு

முன்னோடிச் சேர்மமான பாரா-குமாரிக் அமிலத்திலிருந்து 4-எத்தில்பீனால் உற்பத்தி செய்யப்படுகிறது. பிரட்டானோமைசசு இதை சின்னமேட்டு டிகார்பாக்சிலேசு நொதியின் [3] வழியாக 4-வினைல்பீனாலாக மாற்றுகிறது. பின்னர் வினைல் பீனால் ரிடக்டேசு என்ற நொதி இதை 4-எத்தில்பீனாலாக ஒடுக்குகிறது. குமாரிக் அமிலம் சில சமயங்களில் வளர்ப்பூடகத்துடன் சேர்க்கப்பட்டு வாசனையின் மூலமாக பிரட்டானோமைசசை அடையாளம் காண்பதற்கான நேர்மறை முடிவுகளைத் தருகிறது.

 
பிரட்டானோமைசசு, பாரா-குமாரிக் அமிலத்தை 4-எத்தில்பீனாலாக மாற்றும் வினை

மேற்கோள்கள் தொகு

  1. "4-Ethylphenol MSDS". Archived from the original on 2002-11-08. பார்க்கப்பட்ட நாள் 2017-05-09.
  2. Nomenclature of Organic Chemistry : IUPAC Recommendations and Preferred Names 2013 (Blue Book). Cambridge: The Royal Society of Chemistry. 2014. பக். 690. doi:10.1039/9781849733069-FP001. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-85404-182-4. "Only one name is retained, phenol, for C6H5-OH, both as a preferred name and for general nomenclature. The structure is substitutable at any position. Locants 2, 3, and 4 are recommended, not o, m, and p." 
  3. Brettanomyces Monitoring by Analysis of 4-ethylphenol and 4-ethylguaiacol பரணிடப்பட்டது 2008-02-19 at the வந்தவழி இயந்திரம் at etslabs.com

புற இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=4-எத்தில்பீனால்&oldid=3540230" இலிருந்து மீள்விக்கப்பட்டது