4-குளோரோ-2-பெண்டீன்

வேதிச் சேர்மம்

4-குளோரோ-2-பெண்டீன் (4-Chloro-2-pentene) என்பது C5H9Cl என்ற மூலக்கூற்று வாய்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிம வேதியியல் சேர்மமாகும். ஐந்து கார்பன் அணுக்கள் கொண்டு நேர்கோட்டு சங்கிலியாகக் காணப்படும் இச்சேர்மத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது கார்பன் அணுக்களுக்கு மத்தியில் ஓர் இரட்டைப் பிணைப்பும் 4 ஆவது கார்பன் அணுவுடன் ஒரு குளோரின் அணுவும் இணைந்திருக்கின்றன.

4-குளோரோ-2-பெண்டீன்
இனங்காட்டிகள்
1458-99-7 Y
ChemSpider 4517784 N
InChI
  • InChI=1S/C5H9Cl/c1-3-4-5(2)6/h3-5H,1-2H3/b4-3+ N
    Key: FKKCIOTUMHPTSB-ONEGZZNKSA-N N
  • InChI=1S/C5H9Cl/c1-3-4-5(2)6/h3-5H,1-2H3/b4-3+
    Key: FKKCIOTUMHPTSB-ONEGZZNKSA-N
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 5365840
  • CC=CC(C)Cl
பண்புகள்
C5H9Cl
வாய்ப்பாட்டு எடை 104.58 g·mol−1
அடர்த்தி 0.8988 கி/செ.மீ3 20 °செல்சியசு வெப்பநிலையில்[1]
கொதிநிலை 97 °C (207 °F; 370 K)[1]
ஒளிவிலகல் சுட்டெண் (nD) 1.4322[1]
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

இயற்பியல் பண்புகள்

தொகு

அறை வெப்பநிலையில், 4-குளோரோ-2-பெண்டீன் சேர்மத்தின் அடர்த்தி 0.9 கி/செ.மீ3 ஆகும். திரவமாக காணப்படும் இச்சேர்மத்தின் கொதிநிலை 97 °செல்சியசு வெப்பநிலையாகும்.[1]

தயாரிப்பு

தொகு

இதனுடன் தொடர்புடைய ஆல்ககாலான 3-பெண்டீன்-2-ஆல் அல்லது 1,3-பெண்டாடையீனிலிருந்து 4-குளோரோ-2-பெண்டீன் சேர்மத்தை தயாரிக்க முடியும். பிந்தைய நேர்வில் 4-குளோரோ-2-பெண்டீனை 97% அளவு வரைக்கும் உற்பத்தியாகப் பெறலாம்.[2]

பயன்கள்

தொகு

அயனோல் (2,6-டை-டெர்ட்டு-பியூட்டைல்-4-மெத்தில்பீனால்) தயாரிப்பில் இடைநிலையான என்,என்,என்',என்'-டெட்ராமெத்தில்டையமினோமெத்தேன் அடிப்படையாகக் கொண்ட நான்கிணைய அம்மோனியம் உப்புகளைத் தயாரிக்க 4-குளோரோ-2-பெண்டீன் பயன்படுத்தப்படுகிறது. [2][3]

4-குளோரோ-2-பெண்டீன் குறைந்த வெப்பநிலையில் வெள்ளீயலித்தியத்துடன் உடனடியாக வினைபுரிந்து தொடர்புடைய அல்லைல் வெள்ளீயங்களைக் கொடுக்கிறது.[4] இதேபோல, 4-குளோரோ-2-பெண்டீனில் இருந்து பொருத்தமான குளோரோசிலேனுடன் தொடர்புடைய கிரிக்னார்ட்டு வினையாக்கியைச் சேர்த்து சிலைலேற்ற வினையின் மூலம் அல்லைல் சிலேன்களை தயாரிக்கலாம். [5]

மேற்கோள்கள்

தொகு
  1. 1.0 1.1 1.2 1.3 Haynes, William M., ed. (2016). CRC Handbook of Chemistry and Physics (97th ed.). CRC Press. p. 3.116. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9781498754293.
  2. 2.0 2.1 Levashova, V. I.; Nikonorova, N. I. (2009). "Synthesis and properties of quaternary ammonium salts based on N,N′-tetramethyldiaminomethane and 4-chloro-2-pentene". Petroleum Chemistry 49 (3): 250–253. doi:10.1134/S0965544109030116. 
  3. Rakhmatullin, R. R.; Levashova, V. I.; Dekhtyar', T. F. (2013). "Synthesis and properties of quaternary ammonium salts on the basis of piperidine". Petroleum Chemistry 53 (2): 134–138. doi:10.1134/S0965544113020102. 
  4. Carreira; Drabowicz; Fuerstner; Krause; Moloney; Carreira; Fuerstner; Molander; Thomas; Echavarren; Gouverneur; Hopkinson; Hou; Landelle; López-Carrillo; Łyz˙Wa; Paquin; Peng; Schatz; Seßler; Snaith; Wong; Yeung; Zhang, eds. (2011). "Product Subclass 28: Allylstannanes". Knowledge Updates 2011/2. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1055/sos-SD-105-00108. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783131642813.
  5. Fleming; Ley, eds. (2002). "Product Subclass 40: Allylsilanes". Category 1, Organometallics. எண்ணிம ஆவணச் சுட்டி:10.1055/sos-SD-004-00909. பன்னாட்டுத் தரப்புத்தக எண் 9783131121714.
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-குளோரோ-2-பெண்டீன்&oldid=3980810" இலிருந்து மீள்விக்கப்பட்டது