4-புளோரோநைட்ரோபென்சீன்
வேதிச் சேர்மம்
4-புளோரோநைட்ரோபென்சீன் (4-Fluoronitrobenzene) C6H4FNO2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். நைட்ரோபுளோரோபென்சீன் சேர்மத்தின் சாத்தியமான மூன்று மாற்றியங்களில் இதுவும் ஒன்றாகும்.[2] மஞ்சள் நிற எண்ணெயான இதை 2-நைட்ரோகுளோரோபென்சீனைப் பயன்படுத்தி ஆலெக்சு முறையில் தயாரிக்கலாம்.
பெயர்கள் | |
---|---|
வேறு பெயர்கள்
1-புளோரோ-4-நைட்ரோபென்சீன், 1-நைட்ரோ-4-புளோரோபென்சீன்
| |
இனங்காட்டிகள் | |
350-46-9 | |
ChEMBL | ChEMBL163729 |
ChemSpider | 13856885 |
EC number | 206-502-8 |
InChI
| |
யேமல் -3D படிமங்கள் | Image |
பப்கெம் | 9590 |
| |
UNII | A2M2FH7XHH |
பண்புகள் | |
C6H4FNO2 | |
வாய்ப்பாட்டு எடை | 141.10 g·mol−1 |
தோற்றம் | மஞ்சள் நிற திண்மம், அறை வெப்ப நிலையில் உருகும். |
அடர்த்தி | 1.340 கி/செ.மீ3 |
உருகுநிலை | 22–24 °C (72–75 °F; 295–297 K) |
கொதிநிலை | 206 °C (403 °F; 479 K) |
தீங்குகள் | |
GHS pictograms | |
GHS signal word | அபாயம் |
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும் பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும். | |
- C6H4ClNO2+ KF -> C6H4FNO2 + KCl
4-புளோரோநைட்ரோபென்சீனை ஐதரசனேற்றம் செய்து 4-புளோரோ அனீலினை தயாரிக்க இயலும்.[3] இது புளோரோயிமைடு என்ற பூஞ்சைக் கொல்லி தயாரிப்பதற்கான முன்னோடிச் சேர்மமாகும்.
எலக்ட்ரான் திரும்பப் பெறும் நைட்ரோ குழு இருப்பதால், புளோரோநைட்ரோபென்சீன்களில் புளோரைடு ஒரு நல்ல வெளியேறும் குழுவாகும். இதனால் பீனாக்சைடுடனான வினை மோனோநைட்ரோடைபீனைல் ஈதரைக் கொடுக்கிறது.[4]
மேற்கோள்கள்
தொகு- ↑ "1-Fluoro-4-nitrobenzene". pubchem.ncbi.nlm.nih.gov (in ஆங்கிலம்).
- ↑ Gerald Booth, "Nitro Compounds, Aromatic" in Ullmann's Encyclopedia of Industrial Chemistry, Wiley-VCH: Weinheim, 2005. எஆசு:10.1002/14356007.a17_411
- ↑ Jagadeesh, Rajenahally V.; Surkus, Annette-Enrica; Junge, Henrik; Pohl, Marga-Martina; Radnik, Jörg; Rabeah, Jabor; Huan, Heming; Schünemann, Volker et al. (2013). "Nanoscale Fe2O3-Based Catalysts for Selective Hydrogenation of Nitroarenes to Anilines". Science 342 (6162): 1073–1076. doi:10.1126/science.1242005. பப்மெட்:24288327. Bibcode: 2013Sci...342.1073J.
- ↑ Brewster, Ray Q.; Groening, Theodore (1934). "p-Nitrodiphenyl Ether". Organic Syntheses 14: 66. doi:10.15227/orgsyn.014.0066.