4-வினைல்பீனால்

வேதிச் சேர்மம்

4-வினைல்பீனால் (4-Vinylphenol) என்பது C8H8O என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் குறிக்கப்படும் ஒரு கரிமச் சேர்மமாகும். பீனாலிக் சேர்மமான இது மதுபான வகைகளில் காணப்படுகிறது. பிரெட்டனோமைசசு என்ற நுரைமம் வகை நொதி மூலம் 4-வினைல்பீனால் உற்பத்தி செய்யப்படுகிறது. அதிக அடர்த்தியை அடையும்போது 4-வினைல்பீனால் மதுவின் வாசனையை விரும்பத்தகாத மருந்து போன்ற அடர்நெடியுடையதாக மாற்றும். மதுவில் காணப்படும் அந்தோசயனிடின் போன்ற மற்ற மூலக்கூறுகளுடன் வினைபுரிந்து 4-வினைல்பீனால் புதிய வேதிப்பொருள்களை உருவாக்கும். [1] வெண்மை நிற மதுவகைகளில் 4-வினைல்பீனால் லிட்டருக்கு 70-1150 மைக்ரோகிராம் என்ற அதிக அளவிலும் வினைல்குவாயாகால் லிட்டருக்கு 10-490 மைக்ரோகிராம் அளவிலும் காணப்படுகின்றன. சிவப்பு நிற மதுவகைகளில் தொடர்புடைய எத்தில் பீனால்களே காணப்படுகின்றன. [2]

4-வினைல்பீனால்
4-Vinylphenol
பெயர்கள்
விருப்பத்தெரிவு ஐயூபிஏசி பெயர்
4-எத்தில்பீனால்
வேறு பெயர்கள்
பாரா-வினைல்பீனால்
பாரா-ஐதராக்சி இசுடைரீன்
4-விபீ
இனங்காட்டிகள்
2628-17-3 Y
ChemSpider 56234 N
InChI
  • InChI=1S/C8H8O/c1-2-7-3-5-8(9)6-4-7/h2-6,9H,1H2 N
    Key: FUGYGGDSWSUORM-UHFFFAOYSA-N N
  • InChI=1/C8H8O/c1-2-7-3-5-8(9)6-4-7/h2-6,9H,1H2
    Key: FUGYGGDSWSUORM-UHFFFAOYAQ
யேமல் -3D படிமங்கள் Image
பப்கெம் 62453
  • C=CC1=CC=C(C=C1)O
UNII OA7V1SM8YL Y
பண்புகள்
C8H8O
வாய்ப்பாட்டு எடை 120.15 கி/மோல்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
| colspan=2 |  N verify (இதுY/N?)

தயாரிப்பு மற்றும் வினைகள்

தொகு
 
பாரா-குமாரிக் அமிலம் பிரெட்டனோமைசசு நுரைமம் மூலம் 4-வினைல்பீனாலாகவும் தொடர்ந்து 4-எத்தில்பீனாலாகவும் உருவாதல்

முன்னோடிச் சேர்மமான பாரா-குமாரிக் அமிலத்திலிருந்து 4-வினைல்பீனால் உற்பத்தி செய்யப்படுகிறது. பாரா-குமாரிக் அமிலத்தை பிரெட்டனோமைசசு நுரைமம் சின்னமேட்டு டிகார்பாக்சிலேசு நொதியின் உதவியால் 4-வினைல்பீனாலாக மாற்றுகிறது. [3] வினைல் பீனால் ரிடக்டேசு என்ற நொதி 4-வினைல்பீனாலை மேலும் 4-எத்தில் பீனாலாக ஒடுக்குகிறது. குமாரிக் அமிலம் சில சமயங்களில் நுண்ணுயிரியல் ஊடகங்களில் சேர்க்கப்பட்டு வாசனை மூலம் பிரட்டனோமைசசின் இருப்பின் நேர்மறையான அடையாளத்தை செயல்படுத்துகிறது.

மேற்கோள்கள்

தொகு
  1. Structure of new anthocyanin-derived wine pigments. Hélène Fulcrand, Paulo-Jorge Cameira dos Santos, Pascale Sarni-Manchado, Véronique Cheynier and Jean Favre-Bonvin, J. Chem. Soc., Perkin Trans. 1, 1996, pages 735-739, எஆசு:10.1039/P19960000735
  2. Flüchtige phenolische Verbindungen in Wein = Volatil phenolic compounds of wine. Rapp A. and Versini G., Deutsche Lebensmittel-Rundschau, 1996, vol. 92, no2, pages 42-48, வார்ப்புரு:INIST (German)
  3. Brettanomyces Monitoring by Analysis of 4-ethylphenol and 4-ethylguaiacol பரணிடப்பட்டது 2008-02-19 at the வந்தவழி இயந்திரம் at etslabs.com
"https://ta.wikipedia.org/w/index.php?title=4-வினைல்பீனால்&oldid=3398536" இலிருந்து மீள்விக்கப்பட்டது