6 ஆம் நூற்றாண்டின் இசுலாமிய வரலாற்றின் காலக்கோடு
இசுலாமிய வரலாற்றின் காலக்கோடு: 6ஆம் | 7ஆம் | 8ஆம் | 9ஆம் | 10ஆம் | 11ஆம் | 12ஆம் | 13ஆம் | 14ஆம் | 15ஆம் | 16ஆம் | 17ஆம் | 18ஆம் | 19ஆம் | 20ஆம் | 21ஆம் நூற்றாண்டு |
ஆறாம் நூற்றாண்டு (500–600)
தொகுதோராயமாக 126 BH - 23
- 545: அப்துல்லாஹ்வின் பிறப்பு, (முகம்மது நபியின் தந்தை (தோராயமான நாள்)).
- 570: முகம்மது நபியின் பிறப்பு (தோராயமான நாள்) மற்றும் அவரது தந்தை அப்துல்லாஹ்வின் மரணம்.
- 573: அபூபக்கர் அவர்களின் பிறப்பு (தோராயமான நாள்).
- 576: ஆமினா, முகம்மது நபியின் தாயாரின் மரணம் (தோராயான நாள்).
- 576: உதுமான் அவர்களின் பிறப்பு (தோராயமான நாள்).
- 578: அப்துல் முத்தலிப், முகம்மது நபியின் பாட்டனாரின் மறைவு (தோராயமான நாள்)
- 582: உமர் அவர்களின் பிறப்பு (தோராயமான நாள்).
- 582: தன் பெரிய தந்தையார் அபூதாலிப் அவர்களுடன் முகம்மது நபியின் சிரியாவிற்கான பயணம். அங்கு கிறித்துவ துறவி பாகிராவுடன் அவர்களின் சந்திப்பு. பாகிரா, முகம்மதிடம் இறைத்தூதருக்கான குணங்களைக் கண்டு அவரிடம் இறைத்தூதர்களின் அடையாளம் இருப்பதைப் பார்த்து அறிகிறார்.[1] (தோராயமான நாள்).
- 594: முகம்மது நபி கதீஜாவிற்காக அவரது வியாபரப் பயணக்கூட்டத்தை சிரியா வரை வழிநடத்திச் சென்று திரும்புதல் .(தோராயமான நாள்)
- 595: முகம்மது நபி கதீஜாவுடனான திருமணம் (தோராயமான நாள்).
- 599: முகம்மது நபியின் பெரிய தந்தையின் மகன், மற்றும் மருமகன் அலி இப்னு அபிதாலிப்பின் பிறப்பு.
உசாத்துணைகள்
தொகு- ↑ Life of Muhammad: 560-661 முகம்மது மற்றும் அபூதாலிப்பின் சிரிய பயணம்...