7 ஆம் நூற்றாண்டின் இசுலாமிய வரலாற்றின் காலக்கோடு
இக்கட்டுரையைச் சரிபார்ப்பதற்காக மேலதிக மேற்கோள்கள் தேவைப்படுகின்றன. |
இசுலாமிய வரலாற்றின் காலக்கோடு: 6ஆம் | 7ஆம் | 8ஆம் | 9ஆம் | 10ஆம் | 11ஆம் | 12ஆம் | 13ஆம் | 14ஆம் | 15ஆம் | 16ஆம் | 17ஆம் | 18ஆம் | 19ஆம் | 20ஆம் | 21ஆம் நூற்றாண்டு |
ஏழாம் நூற்றாண்டு (601 - 700)
தொகுதோராயமா 23 BH - 81 AH.
- 605: முகம்மது நபியின் மகள் மற்றும் அலி இப்னு அபூதாலிப் அவர்களின் மனைவி பாத்திமாவின் பிறப்பு.
- 605: முகம்மது நபி காபாவை மறுகட்டமைக்க உதவுதல்.[1]
- 610: ஹிரா குகையில் குர்ஆன் அருளப்படல். வானவர் ஜிப்ரயீல் மூலம் குர்ஆன் முதன் முதலாக அருளப்பட்டது. கதீஜா அவர்கள் முதலில் இசுலாத்தை ஏற்றுக் கொண்டார்.[2]
- 613: சபா மலை குன்றின் மீது நின்று இசுலாத்தின் பக்கம் மக்களை அழைத்தல்.
- 614: குறைசிகளால் முசுலீம்கள் ஒடுக்கப்படல். முசுலீம்களின் ஒரு குழு அபிசீனியாவுக்கு இடம் பெயர்தல்.
- 615: உமர் மற்றும் ஹம்சா இசுலாத்தை ஏற்றல்
- 616: அபிசீனியாவிற்கு இரண்டாம் இடப்பெயர்வு
- 617: குறைசிகளால் ஹாசிம்கள் மற்றும் முகம்மது நபி விலக்கப்படுதல்.
- 619: தடை விலக்கப்படுதல். அபூ தாலிப் மற்றும் கதீஜாவின் மரணம், துக்க ஆண்டு.
- 620: தாயிப் நகருக்கு பயணம். "விண்ணுலகப் பயணம்".
- 622: ஹிஜிரா மதினாவுக்கு இடம் பெயர்தல். இசுலாமிய நாட்காட்டியின் துவக்கம்.
- 622: மதினா அரசியலமைப்பு. முதல் இசுலாமிய அரசு அமைக்கப்படுதல்.
- 624: பதுருப் போர். பனூ கைனிகா யூதர்களை மதீனாவிலிருந்து வெளியேற்றல். எருசலேம் இலிருந்து மக்காவை நோக்கி கிப்லா (தொழும் திசை) மாற்றப்படுதல்.[3]
- 625: உஹதுப் போர். பனூ நாதிர் யூதர்களை மதினாவிலிருந்து வெளியேற்றல்.
- 625: ஹசன் இப்னு அலியின் பிறப்பு, அலீ மற்றும் பாத்திமா அவர்களின் மகன்.
- 626: ஹூசைன் இப்னு அலியின் பிறப்பு, அலீ மற்றும் பாத்திமா அவர்களின் மகன்.
- 627: அகழ்ப்போர். பனூ குறைழா உடுருவல்.
- 632: மெக்காவில் முகம்மது நபியின் இறுதிப் பேருரை
- 642: எகிப்து கைப்பற்றப்படல்
- 685: முதலாம் மர்வானின் மரணம். அப்துல் மாலிக் தமாசுக்கசின் கலீபாவாதல். அய்னுல் வதா போர்.
- 686: அல் முக்தார் தன்னை குபாவின் கலீபாவாக அறிவித்தல்.
- 687: குபா போர் முக்தார் மற்றும் அப்துல்லாஹ் இப்னு சுபைர் இடையே நடைபெற்றது. முக்தார் கொல்லப்பட்டார்.
- 691: தைர் அல் சாலிக் போர். குபா அப்துல் மாலிக்கிடம் வீழ்தல்.
- 692: மக்காவின் வீழ்ச்சி. இப்னு சுபைரின் மரணம். அப்துல் மாலிக் ஒற்றைக் கலீபாவாதல்.
- 695: யெசிரா மற்றும் அகுவாசில் காரிஜியாக்களின் குழப்பங்கள். காருண் போர். வடக்கு ஆப்பிரிக்காவில் காஹினாவுக்கு எதிரான பரப்புரை. முசுலீம்கள் மறுபடியும் பர்காவுக்கு பின்வாங்கினர். திரான்சாக்சியானாவில் முன்னேற்றம் மற்றும் கிசுவைக் கைப்பற்றல்.
- 700: பேர்பர்களுக்கு எதிராக வடக்கு ஆப்பிரிக்காவில் பரப்புரை. இந்த நூற்றாண்டின் இறுதியில், முசுலீம்களின் எண்ணிக்கை உலக மக்கள் தொகையில் ஒரு விழுக்காடு அளவு ஆனது.
மேலும் பார்க்க
தொகுஉசாத்துணைகள்
தொகு- ↑ முகம்மதின் வாழ்க்கை: 560-661 முகம்மது நபி மறுகட்டமைக்க உதவுதல்...
- ↑ முகம்மதின் வாழ்க்கை: 560-661 முகம்மது நபியாக ஆதல் மற்றும் முதல் இறைச்செய்தி ...
- ↑ முகம்மதின் வாழ்க்கை: 560-661 பத்ருப்போர், தொழும் திசை ...